பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1059

 

இப்பாட்டினால் இது வரை கூறிவந்த சரிதசாரத்தைக்கூறி முடித்துக்காட்டிய திறனும், மேல்வருஞ் சரிதசாரத்தை எடுத்துக் காட்டிய அமைதியும் கண்டு கொள்க. இஃது ஆசிரியரது தெய்வக் கவிநலம்.

38

________

சரிதச் சுருக்கம் :- காவிரி பாய்வதனாற் செழிப்புமிக்க சோழநாட்டில் மறையவர்கள் நிறைந்த சிறந்தவூர் சாத்தமங்கை. அதனிற் சீலம் மிக்கவராய் உலகில் மறைப்பொருள் விளக்கிய நலமுடையவராய்ச் சிவபெருானிடத்து அன்புடைய தொண்டராய் விளங்கியவர் திருநீலநக்கர்.

வேதங்களின் உள்ளுறையாவன அரனையும் அவனடியார்களையும் பூசித்தலும் வணங்குதலுமே என்றறிந்து அவர் ஆராத ஆசையுடன் அவ்விரண்டினையுமே செய்யும் கருத்துடன் வாழ்ந்திருந்தார். அத்தலத்தில் அயவந்தி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரை ஆகமவிதிப்படி நித்தலும் பூசனை புரிந்துவந்தனர். அடியார்களுக்கு அமுதூட்டுதல் முதலாகிய எல்லாப் பணிகளும் குறிப்பறிந்து செய்து வந்தனர்.

இவ்வாறொழுகுநாளில் ஒருநாள் அயவந்திப் பரமரைப் பூசனை செய்வதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் கொண்டு மனைவியாருடன் கூடத் திருக்கோயிலை அணைந்தனர். பூசனைக்கு வேண்டும் பொருள்களை மனைவியார் ஏந்தி நிற்க உயர்ந்த பூசனையை முறைப்படி முடித்தனர். பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பாதவராகிய இறைவரை வலங்கொண்டு வணங்கித்துதித்து மறைப்பொருளைத் தெளிவுற நோக்கிக்கொண்டு திருமுன் இருந்து திருவைந்தெழுத்தை விதிப்படி கணித்தனர். அப்போது சுதைச்சிலம்பி ஒன்று வழுவி இறைவரது திருமேனியின் மேல் விழுந்தது. அயலில் நின்ற மனைவியார் இளங்குழவிமேற் சிலம்பி விழக்கண்டவர்போலப் பதைத்து அதனை வாயினால் ஊதித்துமிந்து விலக்கினர். மறையவர் அதுகண்டு மனைவியார் செய்த அன்பினை மனங்கொள்ளாது, கண்புதைத்துக் கொண்டு "அறிவில்லாதவளே! மற்றிது செய்தது என்னை?" என்றனர். அதற்குச் "சுதைச் சிலம்பி மேல்விழ ஊதித் துமிந்தனன்" என்று அவர் கூறக்கேட்ட நாயனார், பூசையில் இது அநுசிதமாகும், என்று எண்ணி, "சிலம்பியை வேறு வழியால் நீங்காது, வாய் நீர்பட ஊதித் துமிந்தனை; உன்னை நான் இனி இங்குத் துறந்தனன்" என்றார் அப்போது மாலைப்பொழுதாயிற்று. தம் ஏவலின்படி மனைவியார் ஒருவழி நீங்க, நாயனார் பூசனையை முடித்து மனைபுகுந்தனர். அச்சத்தால் மனைவியார் அவர் பக்கம் அணுகமாட்டாது இறைவர் கோயிலில் இருந்தனர். மனையில் நீலநக்கர் பள்ளிகொண்டனர். அவரது கனவில் அயவந்திப்பரமர் எழுந்தருளித் தம் திருமேனியைக் காட்டி "ஊதித் துமிந்த பக்கம் ஒழிய இப்புறமெல்லாம் சிலம்பியின் கொப்புள் உள்ளன; காண்" என்றருளினர். அதைத் நனவாகவே கண்டு தொண்டனார் அச்சத்துடன் கைகள் அஞ்சலி கூப்பி விழித்து எழுந்து தொழுது ஆடினார்; பாடினார்; துதித்தார்; இறைவரது கருணையை நோக்கி நின்றழுதார். பொழுது புலர்ந்தவுடன் திருககோயிலுக்குச் சென்று, இறைவரை வணங்கி மனைவியாரையும் உடன்கொண்டு மனையில் அணைந்தனர்.

அதன்பின்பு முன்னையினும் பெருகிய மகிழ்ச்சி பொருந்த இறைவரது பூசனைகளைச் செய்தும், அடியாாகள் மிகப்பெருக அணைவார்க்கு முன்போல வேண்டுவனவற்றை விருப்புடன் முடித்தும் வாழ்ந்து வந்தனர். அந்நாளில் திருஞானசம்பந்த நாயனாருடைய பெருமையை எடுத்து உலகம்போற்றிடக் கேட்டு அவரைச் சார்வதற்கு மிக்க விருப்பம் கொண்டிருந்தனர். அப்போது பல தலங்களையும் வணங்கிக்