கொண்டு திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியார் மதங்கசூளாமணியாரும், உடன்வரத், திருத்தொண்டர் கூட்டத்துடன் ஆளுடையபிள்ளையார் சாத்தமங்கையில் எழுந்தருளினர். அதுகேட்ட திருநீலநக்கர் அப்பொழுதே பெருமகிழ்ச்சி பொங்க மாலைகளும் கொடிகளும் தொங்கிய தோரணங்களை நாட்டினர்; நடைக் காவணமிட்டனர்; சுற்றத்தாருடன் சென்று பிள்ளையாரைக் திருக்கூட்டத்துடன் ஏற்றவாறு எதிர்கொண்டு அழைத்துத் தமது திருமனையிற் கொண்டு வந்து திருவமுது செய்வித்தனர். மாலைப்பொழுது கூடவே அன்றிரவும் பிள்ளையார் தமது திருமனையில் தங்கிட வேண்டியவற்றை அமைத்தனர். திருவமுது செய்தபின் பிள்ளையார் திருநீலநக்கரை அழைத்துத் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மதங்கசூளாமணியாரும் இரவு தங்குதற்கு ஓர் இடங்கொடுக்கும்படி அருள அவர் மகிழ்ந்து, நடுமனை வேதிகையின் பக்கத்தில் அவர்களுக்கு இடங்கொடுத்தனர். அவ்வேதியில் அறாத செந்தீ ஓங்கி முன்னையினும் ஒருபடித்தன்றியே வலஞ்சுழித்தெழுந்து விளங்கிற்று. யாழ்ப்பாணரும் தேவியாரும் அங்குப் பள்ளி கொண்டருளினர். பின்னர்ப் பிள்ளையார் அயவந்தி யிறைவரைத் துதித்த பதிகத்திற் றிருநீலநக்கரைச் சிறப்பித்துப் பாடிப் பிற பதிகளில் எழுந்தருளினர். நீலநக்கர் அன்பினால் அவரைப் பிரியாது உடன்செல்ல ஒருப்படினும் அவரது அருளை மறுக்கமாட்டாது, அவரை நினைந்த வண்ணமாகவே சாத்தமங்கையில் தங்கினர். பின்னர்ச சில நாளிடைச் செல்லவிட்டுப் பிள்ளையாா எழுந்தருளும் எப்பதியிலும் சென்று உடனுறைந்து மீண்டுவந்து தமது பதியில் அமரும் ஒழுக்கமும் பூண்டனர். இவ்வாறு பன்னாள் கழிய ஆளுடைய பிள்ளையாரது திருக்கல்லியாணத்தில் முன்செய் தவத்தாற் போந்து திருமணஞ் சேவித்து உடனாக இறைவர் பாதம் சேர்த்தனர். கற்பனை :- (1) நீர்வளத்தாற் செழித்துக் காய்க்கும் நெற்பயிர் காடுபோன்றிருப்பது காவிரி நாட்டுச் சிறப்பு.(1828) (2) மறையவர் முத்தீவளர்த்தல் குலமரபுக் கின்றிமையாதது. (1830) (3) மறையவர் தத்தம் மனைவியாரோடு இருந்து முத்தீவளர்த்தல் வேண்டும். (4) மனைவியர் கணவருடன் முத்தீவளாத்தல் இல்வாழ்க்கைக்குரிய தருமங்களுள் ஒன்று. அவர்கள் தம் கற்பினையும் அத்தீப்போலவே காத்து வளர்த்தல முறையாகும்.(1830) (5) மறைபயில்வார் அம்மறைப் பொருள்களைத் தம் வாழ்க்கை ஒழுக்கத்தில் விளக்குதல் வேண்டும். (1831) (6) சிவனையும் சிவன் அடியாரையும் அருச்சிப்பதும் பணிவதும் என்ற இவை யிரண்டே வேதங்களின் உள்ளுறை பொருளாவன. (1832) (7) அடியார் பூசையுள் அவர்களை அமுதூட்டுதல் சிறந்த பகுதி. (1833) (8) ஆன்மார்த்தமாய்ச் சிவனைத் திருக்கோயிலில் ஆகம விதிப்படித் தம் பொருட்டு அருச்சிப்பதும் சிவதீக்கை பெற்ற மறையவர்களாகிய மகா சைவர்க்குரியது. (1836 - 1837) (9) அரனை அன்புடனே பூசித்து அருச்சனை புரிவோர் அப்பூசை நிரம்பியும் அன்பினால் நிரம்பாது திருக்கோயில் வலம்வருதலும், திருமுன்னிருந்து மறைப் பொருளைத் தெளிவுற நோக்கித் திருவைந்தெழுத்தை விதிப்படி கணித்தலும் செய்வர். (1837) (10) இறைவரது திருமேனிமேல் சுதைச்சிலம்பி விழப்பார்த்தவுடன் தமது இளங்குழவியின்மேற் சிலம்பி விழக்கண்டதுபோலப் பதைத்து வாய்நீர்பட ஊதித்துமிந்து அச்சிலம்பி பட்டதனாற் கொப்புள் கொள்ளாது விளக்கினர் திரு |