என்பார் - எனப்படுவார். படு விகுதி தொக்குநின்றது; "இல்வாழ்வா னென்பான்" (குறள்) என்புழிப்போல். ஆயினார் - அவர் உளரானார். உண்மை நெறியின் ஆக்கப்பாட்டினைக் கொண்டனர். 4 1870. | வாய்மை மறைநூற் சீலத்தால் வளர்க்குஞ் செந்தீ யெனத்தகுவார்; தூய்மைத் திருநீற் றடைவேமெய்ப் பொருளென் றறியுந் துணிவினார், சாம கண்டர் செய்யகழல் வழிபட் டொழுகுந் தன்மைநிலை யாம விரவும் பகலுமுணர் வொழியா வின்ப மெய்தினார். |
5 (இ-ள்.) வாய்மை...தகுவார் - வாய்மை மொழியாகிய மறைகளிலும் அவற்றின் வழியில் வரும் நூல்களிலும் விதித்த ஒழுக்கத்தால் வளர்க்கப்படும் செந்தீயாவார் இவர் என்று சொல்லப்பெறும் தகுதியுடையவர்; தூய்மை......துணிவினார் - தூய திருநீற்றின்சார்பே மெய்ப்பொருளாவது என்று துணிந்து மேற்கொள்ளும் அறிவினையுடையார்; சாமகண்டர்...நிலை - சாமகண்டராகிய சிவபெருமானது சிவந்த கழல்களை வழிபட்டு ஒழுகும் தன்மை நிலையினை; யாம இரவும்...எய்தினார் - இரவின் யாமங்களிலும் பகலிலும் உணர்ச்சியிற் கொள்கின்ற இடைவிடாத இன்பத்தை யடைந்திருந்தனர். (வி-ரை.) வாய்மை மறைநூல் சீலம் - முன் "பொய்தீர் வாய்மை யருமறை நூல் புரிந்த சீலம்" (1866) என்றவிடத் துரைத்தவை பார்க்க. சீலத்தால் வளர்க்கும் செந்தீ - சீலம் - இங்கு ஒழுக்கத்தின் நின்ற செயலுக்கு வந்தது. வளர்க்கும் - வளர்க்கப்படும். படுவிகுதி தொக்கு நின்றது. செந்தீ எனத்தருவார் - தீயை இடைவிடாது விதிவிழி கைக்கொண்டு வளர்த்து வருதலால் இவரே அத்தீயாவார் என்று கூறுதல் தகும் என்ற தன்மையைப் பெற்றவர். தூய்மை......துணிவினார் - தூய்மைத் திருநீற்று தூய்மை செய்யும் திருநீறு; "சுத்தம தாவது நீறு" (தேவா). தூய்மையுடைய என இயற்கையடைமொழி என்றலுமாம். அடைவு - சார்பு நீற்றடைவு - நீற்றினையே உறுதிப்பொருள் என்று கொண்டொழுகுதல். "உறுவது நீற்றின் செல்வ மெனக்கொளு முள்ளமிக்கார்" (355). அறியும் துணிவினார் - துணியும் அறிவினார் என்க. அறிவுகொண்டு துணிவு பூண்டவர் என்றலுமாம். சாமகண்டர் - சிவபெருமான். சாமவேதம் அருளியவர். வேதங்களெல்லாவற்றையும் பாடியவராயினும் சாமத்தில் மிகவும் விருப்புடையவராதலின் சிறப்புப் பற்றி இவ்வாறு கூறுவர். "சாமகானப்பிரியன்" என்று வழங்குவது நாமமந்திரம். சாமம் - வேதப்பொதுமை யுணர்த்திற்று என்றலுமாம். சாமம் - இருள் என்றலுமாம். ஒழுகும் தன்மைநிலை உணர்வு ஒழியா இன்பம் - வழிபடும்நிலை, ஒரு நாளில் ஒருமுறை - இருமுறை - மும்முறை - நான்குமுறை எனத் தீக்கையின் பேதம்பற்றி வகுக்கப்படும். "ஒருக்காலுந் திருக்கோயில் சூழாராகில், உண்பதன்முன் மலர் பறித்திட்டுண்ணு ராகில்" என்றும், "காலையிலு மாலையிலுங் கடவுளடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலுங் கலயநல்லூர்காணே" என்றும், "சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர்" என்றும் வரும் வேதமொழிகள் காண்க. - ஆயின் அந்த வழிபாட்டுத் தன்மை நிலைக்கு இக்காலவரை யறையில்லை. அது எப்பொழுதும் மறவாதிருக்க வேண்டுமென்பது விதியாதலின் அவ்வுணர்வின் ஒழுக்கம் ஈண்டுக் குறிக்கப்பட்டது. - உணர்வு ஒழியா இன்பம் என்றது வழிபாட்டுத் தன்மையினை உணர்விற் கொண்டபோது உளதாகும் மகிழ்ச்சி. |