"ஞானத் திரளாய் நின்ற பெருமா னல்ல வடியார்மேல், ஊனத் திரளை நீக்கு மதுவு முண்மைப் பொருள்போலும்" (பிள்: திரு அண்ணாமலை). "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" (சிவஞானபோதம் - 9 - வெண்). என்றபடி "ஏகனாகி இறைபணி நிற்பாராகி" அடைந்தார்க்குப் பாசநீக்கம் செய்பவன் என்ற "துணிவினா" ராதலின் (1870) பிறவி வாராமற் செய்யும் திருவாரூர்ப் பெருமானை அடைவாராயினர் என்பது. "மலர்த்தாள் பணிவுறுவது எவ்வூதியமும்" என்றது ஏகனாகி இறைபணிநிற்கும் தன்மை குறித்தது. முன்னர் இரவும் பகலும் வழிபாட்டுத் தன்மைநிலை உணர்வில் ஒழியா இன்ப மெய்திய தன்மையினால் இக்குறிப்புத் திருவருளாற் கூடிற்று என்பதாம். பலநாளும் - வணங்கினார் - ஏமப்பேறூரினின்றும் சென்று சென்று பலநாளும் திருவாரூர்ப்பெருமானை வணங்கி வரும் செயலை மேற்கொண்டனர் "செழுந்தண் பதியி னிடையப்பாற் செல்லிற் செல்லும் பொழுதென்ன, ஒழிந்து" (1874), "இரவு சென்று தம்பதியி னெய்தி மனைபுக்கு" (1881), "பண்டுபோலப் பல நாளும் பயிலும் பணிசெய்து" (1883), "தொழுது தம்மூர் மருங்கணைந்து" (1888), "விடியல் விரைவோடு, நாதனார்தந் திருவாரூர் புகுத" (1893) "அருளாற் குடியுந் திருவா ரூரகத்துப் புகுந்து வாழ்வார்" (1895) என்று மேல் வருவனவும், பிறவும் சரித நிகழ்ச்சியும் காண்க. தெவ்வூர் எரித்த - தெவ் - பகைவர் - திரிபுரவாணர். ஊர் - முப்புரம். "முப்புர மாவது மும்மல காரியம்" (திருமந்) என்றபடி புரமெரித்த அவரே மலநாசம் செய்து வெவ்வூறு அகற்றவல்ல பெருமான் என்பது குறிப்பு. எவ்வூதியமும் - எல்லாப் பேறுகளும், "முதல்வர் நாமத் தஞ் செழுத்துங், கேளும் பொருளு முணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்" (1711) என்றநிலை கருதுக. முற்றும்மை இதனின் ஊதியம் வேறு பிறவில்லை என்பது குறித்தது. பணிவுறுதல் - என்பதும் பாடம். 6 1872. | செம்பொற் புற்றின் மாணிக்கச் செழுஞ்சோ தியைநேர் தொழும்சீலந் தம்பற் றாக நினைந், தணைந்து,தாழ்ந்து, பணிந்து, வாழ்ந்து, போந், தம்பொற் புரிசைத் திரூமுன்றி லணைவார் பாங்கோ ரரனெறியில் நம்பர்க் கிடமாங் கோயிலினுட் புக்கு வணஙக நண்ணினார். |
7 (இ-ள்.) செம்பொன்....சோதியை - செம்பொன் போன்ற அழகிய புற்றினிடமாக எழுந்தருளியுள்ள இயற்கை ஒளியுள்ள மாணிக்க வண்ணச் செழுஞ்சோதியாகிய சிவபெருமானை; நேர்தொழும்...நினைந்து - நேரேகண்டு வழிபடும் நல்லொழுக்கமே தமக்குறுதியாவது என்று நினைந்து; அணைந்து.....நண்ணினார் சார்ந்து, நிலம் பொருந்த வீழ்ந்து, வணங்கி அதனால் வாழ்வடைந்து, வெளிப்போந்து பொன் மதிற்றிருமுற்றத்தில் தனியிடமாகிய அரனெறி என்னும் தலத்தில் சிவபெருமானுக்கு இடமாகிய கோயிலினுள்ளே புகுந்து வணங்குதற்குச் சேர்ந்தனர். (வி-ரை.) புற்றின் மாணிக்கச் செழுஞ் சோதி - புற்றிடங் கொண்டெழுந் தருளிய இறைவர். திருவாரூர்த் திருமூலத்தானத்தில் எழுந்தருளியுள்ள வன்மீகநாதர். புற்றில் அரவும், அரவின் மணியும் மணியிற் சோதியும், உள்ளது இயல்பாகும்; இங்குப் புற்றாகிய இருப்பிடமும், அதனுள்ளே அருட்குறியாகிய திருமேனியும்;அதனுள் அருள் ஒளிப்பிழம்பாய் விளங்கும் இறைவருமாகக் கண்டுகொள்ள வைத்த உருவக நயம் காண்க. இவற்றை முறையே ஆசனம், மூர்த்தி மூர்த்திமான் என்று சிவாகமங்கள் வகுக்கும். |