நேர்தொழும் சீலம் - முன்னர் உணர்வு வகையால் இரவும் - பகலும் வழிபடுந் தன்மையின் இன்பமெய்தியதன்றி நேரே கரணங்களாலும் தொழப் பெறும் சீலம். நேரேயும் - என்று இறந்தது தழுவிய எச்சவும்மை தொக்கது. தம்பற்றாக - தமக்குறுதிதரும் பற்றுக் கோடாக. பற்று - நலம்பெறச் சாரும் உறுதிப்பொருள். "எவ்வூதியமும்" என முன்பாட்டிற் கூறியது. நினைந்து....போந்து - "எண்ணம்" முற்றிச் செயலாய் விளைந்து நிகழ்ந்து முற்றிய வொவ்வொர் படியினையும் தனித்தனி வினையெச்சங்களாற் கூறிக்காட்டிய நயம் காண்க. "புனிதரகு, ணினைந்துருகி விழுந்தெழுத்து நிறைந்துமலர்ந் தொழியாத, தனம் பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந்தழைத்தார்" (1461) என்ற அரசுகள் புராணமும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. போந்து - திருமூலத்தானநாதர் சந்நிதியினின்றும் வெளிப்போந்து. அம்பொற் புரிசைத் திருமூன்றில் - அழகிய பொன்மதில் சூழ்ந்த திருமாளிகையின் முன்னிடத்தில் பாங்கு ஓர் அரனெறியில் - திருமுற்றத்தின் ஒரு பக்கத்தில் உள்ள அரனெறி என்னும் தனித் தலத்தில். நம்பர்க் கிடமாம் கோயில் - நம்பர் விளங்க வீற்றிருத்தற் கிடமாகிய திருக்கோயில். இது திருவாரூர்ப் பெருங்கோயிலினுள் புறத்திருமுற்றத்தில் தென்கீழ்திசையில் உள்ள தனிக்கோயில். பதிகக் குறிப்புக்கள் III - பக் - 384 பார்க்க. 7 1873. | நண்ணி யிறைஞ்சி யன்பினா னயப்புற் றெழுந்த காதலுடன் அண்ண லாரைப் பணிந்தெழுவா, ரடுத்த நிலைமைக் குறிப்பினாற் பண்ணுந் தொண்டின் பாங்குபல பயின்று பரவி விரவுவார், எண்ணி றீப மேற்றுவதற் கெடுத்த கருத்தி னிசைந்தெழுவார், |
8 1874. | எழுந்த பொழுது பகற்பொழுதங் கிறங்கு மாலை யெய்துதலுஞ் செழுந்தண் பதியினிடை யப்பாற்செல்லிற்செல்லும் பொழுதென்ன ஒழிந்தங் கணைந்தோர் மனையில்விளக் குறுநெய் வேண்டியுள்புகலும் அழிந்த நிலைமை யமணர்மனை யாயிற் றங்க ணவருரைப்பார்; |
9 1875. | "கையில் விளங்கு கனலுடையார் தமக்கு விளக்கு மிகைகாணும்; நெய்யிங் கில்லை; விளக்கெரிப்பீ ராகி னீரை முகந்தெரித்தல் செய்யு"மென்றுதிருத்தொண்டர்க்குரைத்தார்தெளியா "தொருபொருளே பொய்யுமெய்யுமா" மென்னும்பொருண் மேற்கொள்ளும் புரைநெறியார். |
10 1873. (இ-ள்.) நண்ணி...பணிந்தெழுவார் - பொருந்தி வணங்கி அன்பு காரணமாக ஆசை பொருந்த மேல் எழுந்த காதலோடும் பெருமையுடைய சிவபெருமானைப் பணிந்து எழுவார்; அடுத்தநிலைமைக் குறிப்பினாலே அடுத்து வரும் நிகழ்சிக்காக அருள் வழியே மனத்திழெுந்த குறிப்பினலே;அடுத்து வரும் நிகழ்ச்சிக்காக அருள் வழியே மனத்திலெழுந்த குறிப்பினாலே; பண்ணும்...விரவுவார் - செய்யும் திருத்தொண்டின் பாங்கு பலவும் பயிலச் செய்து துதித்துஅங்குத் தங்குபவராகி; எண்ணில்....எழுவார் - அளவில்லாத விளக்குகளை ஏற்றுவதற்கு மனத்துள் எழுந்த கருத்துக்கிசைந்து அது செய்ய ஏற்றெழுவாராகி; 8 1874. (இ-ள்.) எழுந்த...எய்துதலும் - அவ்வாறு துணிந்தெழுந்த நேரமானது அங்குப் பொழுது இறங்கும் மாலை நேரமாகச் சேரலும்; செழுந்தண்..... |