பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1071

 

ஒழிந்து - செழிப்புடைய தண்ணிய தமது பதியின்கண் சேர்ந்து திரும்பும்படி சென்றால்பொழுது சென்றுவிடுமென்று கருதிஅதனைவிட்டு; அங்கு அணைந்து...உள்புகலும் - அங்கே அணைந்து விளக்குக்கு நெய்பெறுதலை வேண்டி ஒரு மனையினுள் புகுதலும்; அழிந்த.....ஆயிற்று - அது உண்மைநிலை யழிந்த அமணரது மனையாயிருந்தது; அங்கண் அவர் உரைப்பார் - அவ்விடத்தில் அவர்கள் சொல்வாராகி.

1875. (இ-ள்.) கைமில்....காணும் - கையில் விளங்கும் கனலை ஏந்திய பெருமானுக்கு விளக்கு மிகையாகும்; நெய் இங்கு இல்லை - விளக்குக்கு நெய் இங்கு இல்லை; விளக்கு...செய்யும்.....உரைத்தார் - நீர் விளக்கு எரிப்பீரானால் நீரை முகந்து எரிப்பீராக என்று திருத்தொண்டர்க்கு உரைத்தனர்; தெளியாது...புரை நெறியார் - தெளிவில்லாமல் ஒருபொருளே பொய்யும் மெய்யுமாகும் என்ற கொள்கை மேற் கொண்டொழுகுகின்ற குற்றமுள்ள நெறியினையுடைய அவ்வமணர்.

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

1873. (வி-ரை.) அன்பு - நயப்பு - காதல் - என்பன அன்பு மேன்மேல் முறுகி விளைந்து முற்றும் நிலைகள். நயப்பு - ஆசை; காதல் - நாயகன் நாயகிகளிடை வரும் அன்பு.

அடுத்த நிலைமைக் குறிப்பினால் - மேல்வரும் நிகழ்ச்சியின் பொருட்டுத் திருவருளால் நாயனாரது திருவுள்ளத்துத் தோன்றிய குறிப்பினாலே. இக்குறிப்பாவது, பலநாளும் வந்து திருவாரூரிற் புற்றிடங் கொண்ட புராதனரை வணங்கிச் சென்றவர் அன்று மிக்க அன்பு மூளத் தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்தனர்; பின்னர் அன்று சிறப்பாக அரனெறியிற் புக்கு வணங்கினர்; அவ்வணக்கம் முன்னரெல்லாம் காணாத அன்பு மூண்டெழுந்த நயப்பினை விளைக்க; அது ஆறாகக் காதல் பெருகிற்று; அஃது அவ்வணக்கத்தோ டமையாது தொண்டின் பாங்கு பலவும் பயின்று பரவி விரவச் செய்தது; பொழுது செல்லச் செல்லத் திரு விளக்கு எரிக்கும் கருத்தினை விளைத்தது; தம் ஊர் சென்றுவரின் பொழுது செல்லும் எனக் கொண்டு அவ்வூரில் விளக்கு நெய் தேடச் செய்தது; என்றிவ்வாறு இவை ஒன்றின்மே லொன்றாக விளைந்ததன் காரணம் அவரையும் அறியாது மேற்சரித நிகழ்ச்சியின் பொருட்டே போந்த அருட்குறிப்பு. அடுத்த நிலைமை - மேற்சரித நிகழ்ச்சி. குறிப்பு - அருள் காரணமாக வகும் குறிப்பு.

தொண்டின் பாங்கு பல - திருவலகு, திருமாலை, திருக்கோயிற்பணி முதலாயின.

எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு - எண்ணில் - பல. தீபம் ஏற்றுதல் - ஞானத்திற் கேதுவென்பர், "விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்" (தேவா). எண் நில் என்று கொண்டு அடியார் கருத்தில் நிற்கின்ற என்றலுமாம்.

கருத்தின் இசைந்து எழுவார் - கருத்தினுட் குறிப்புத் தோன்றிற்று; அதற்கு மனம் இசைந்தது; அதற்கு உடன் முயற்சி ஒருப்பட்டு எழுவாராகி.

இசைந்தெழுந்தார் - என்பதும் பாடம்.

8

1874. (வி-ரை.) எழுந்த பொழுது - அவ்வாறு செயல் மேற் கொண்டெழுந்த நேரம்.

பகற்பொழுது அங்கு இறங்கு மாலை யெய்துதல் - பகற்பொழுதாகிய நாட்கூறு ஞாயிறு மேற்றிசையில் இறங்கும் மாலைப் பொழுதாகப் பொருந்துதல்.

செழுந்தண் பதியினிடை அப்பால் செல்லில் - விளக்கு நெய்வேண்டித் தமது ஊராகிய ஏமப்பேறூரின்கண் போய்வருவதற்குச் சென்றால்.