பக்கம் எண் :


1074திருத்தொண்டர் புராணம்

 

மனதில் பெருக வருத்தமுடன் - என்க. தம்மால் அதற்குத் தீர்வு ஒன்றும் செய்யவியலாமை வருத்தத்திற்குக் காரணம்.

அப்பொழுதே - பெயர்ந்து - போந்து - சிவ நிந்தனை செய்தாரைத் தண்டித்தல் வேண்டும்; (சத்திநாயனார், விறன்மிண்டநாயனார் முதலியோர் வரலாறுகள் பார்க்க.) அஃதியலாதபோது சிவநாமஞ் சொல்லிச் செவிபொத்திக்கொண்டு அவ்விடம் விட்டுப் பெயர்ந்துபோதல் வேண்டும் என்பது விதி. அப்பொழுதே - ஒருகணமுந் தரிக்கலாற்றாமை குறிப்பு.

கோயில் முன் எய்திப் - பணிந்து விழ - சிவபெருமானே இதற்குத் தீர்வு தரவல்லவர் என்ற கருத்தினால் கோயிலுக்குச் சென்றனர். தீர்வாவது - அமணரது தீய சொல்லுக்குத் தண்டனையும், விளக்கு ஏற்றக்கொண்ட தமது கருத்து நிறைவேறும் வழியினையும் வகுத்தலாம்; இவற்றுள், கருத்து முடித்தல் மேல்வரும் பாட்டிலும், தண்டம் வகுத்தல் 1883லும் கூறுவார்.

மணிந்து விழுதல் - முறைப்படும் வகையால் அடி வீழ்தல்.

விழ - எழுந்து - விழுந்ததுவே எழுந்ததற்குக் காரணம் என்பது குறிப்பு. முறைப்பாடும் தீர்வும் இடையீடின்றி உடன்தொடர்ந்து நிகழ்ந்த விரைவும் குறிப்பு. கீழேவிழ - மேலே எழுந்தது என்ற நயமும் காண்க.

உயர் விசும்பில் - அசரீரி என்று சொல்லும் இறைவனது ஞானாகாயத் திருமேனியினின்றும். உயர் உயர்வுடைய. சடமாகிய பூதாகாயத்துக்கு வேறாய் அதனின் உயர்ந்த என்க.

ஒரு வாக்கு - ஒப்பற்ற அருளாகிய திருவாக்கு. வாக்கினது விவரம் மேல் வரும் பாட்டிற் காண்க.

11

1877. (வி-ரை.) வந்த கவலை - அமணரது அவமதிப்பால் வந்த; மனக் கருத்து முற்றுறாதபோது வரும் மனவருத்தம் கவலை எனப்படும். இங்குக்கவலை விளக்கெரிக்கச் செயலிலாமை முதற்கண்ணேயும், வெம்மைமொழி கேட்க நேர்ந்தமை பின்னேயும் வந்தன.

மாற்றும் - மாற்றிக் கொள்ளுக; "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் - மனக்கவலை மாற்ற லரிது" (குறள்) என்றபடி இங்குத் தாள் வீழ்ந்தார் கவலை மாற்றப் பெற்றார் என்க.

இனி, மாறா விளக்குப் பணிமாற - மாறா - இடையறாமல் - அளவுபடாமல்; "கோயிலடைய" (1879) "விடியுமளவும்" (1860) என்பன காண்க. பணிமாற - பணி செய்வதற்கு; மரபு வழக்கு; "திருஅலகு பணிமாறி" "திருவத்தயாமம் பணிமடங்கி."

இந்த மருங்கிற் குளத்து நீர் - திருக்கோயிலினுள் அடுத்துள்ள குளத்துநீர். இது தேவாசிரியனை அடுத்து மேல்புறத்துள்ள சங்கதீர்த்தம் என்பது கருதப்படும். அதுவே "இந்த மருங்கு" என்ற அணிமைச்சுட்டுக்கிலக்காய், புற்றிடங்கொண்டார் கோயில் முன் நாயனார் எய்திப் பணிந்துவிழுந்த இடத்தின் அணிமையில் உள்ளது. படம் பார்க்க. அரனெறியார் கோயில் முன்பும் முன்னாள் ஒரு சிறு குளம் இருந்ததாகக் கூறுவர்.

அந்திமதிய மணிந்தபிரான் - இருள் வரும் நேரத்தில் ஒளிப்பொருளை ஒளிதரச் செய்பவராதலின் இங்கு விளக்கு ஏற்றும் பரிசு நல்கினார். சாபத்தால் ஒளி குறைந்து அவியு நிலையில் வந்த மதியினை ஒளிவீசச் செய்தமைபோல, விளக்கு எரிவதனை அவியச்செய்யும் நீரினையே எரியச் செய்பவர் என்பதும் குறிப்பு.