முன் பாட்டில் பிறையணிந்த (1876) என்றதும் இக்கருத்தில் வந்த முற்குறிப்பு. இக்குறிப்பினை மணங்கொண்டு நாயனார் பணிந்து வீழ்ந்தனர் என்பதுமாம். மொழிகேளா - மொழியினைக் கேட்டு. செய்வ தறிந்திலர் - மேற்செய்வ தின்னதென்று தோன்றாத திகைப்பு. இது சடுதியில் வந்த பெருமகிழ்ச்சியாலாயது. தமது கடைத்தலையில் வந்து நின்றவர் திருநாவுக்கரசு நாயனார் என்று தெரிந்துபோது அப்பூதியார் "முன் செய்வதறியாதே" பலவும் செய்தமையும் (1801), நம்பிகள் தமது நாட்டில் வந்தாரென்று கேட்டபோது கழறிற்றறிவார் நாயனார் "செய்வ தொன்றுமறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து" பலவும் செய்தனவும் (வெள்ளானைங் சருக் - 17), பிறவும் இங்கு வைத்துக் காண்க. (இவ்வாறு வரும் திகைப்புப் பெருந் துன்பத்தாலுமாகும்.) 12 1878. | சென்னி மிசைநீர் தரித்தபிரா னருளே சிந்தை செய்தெழுவார், நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு நாதர் நாம நவின்றேத்தி, அந்நீர் முகந்து கொண்டேறி, யப்பர் கோயி லடைந் தகலுள் முந்நீ ருலக மதிசயிப்ப, முறுக்குந் திரிமே னீர்வார்த்தார்; |
13 1879. | சோதி விளக்கொன் றேற்றுதலுஞ் சுடர்விட் டெழுந்த; ததுநோக்கி ஆதி முதல்வ ரரனெறியார் கோயி லடைய விளக்கேற்றி ஏத நினைந்த வருகந்த ரெதிரே, முதிருங் களிப்பினுடன் நாத ரருளாற் றிருவிளக்கு நீரா லெரித்தார் நாடறிய. |
14 1878. (இ-ள்.) சென்னி.....எழுவார் - தலையின்மேல் கங்கையைத் தரித்த பெருமானது திருவருளினையே சிந்தித்து எழுவாராய்; நன்னீர்ப் பொய்கை நடுப்புக்கு - நல்ல நீருடைய அக்குளத்தின் நடுவுட் புகுந்து; நாதர்....ஏறி - நாதருடைய திருநாமமாகிய மகா மந்திரத்தினைச் சொல்லித் துதித்துக்கொண்டு அந்த நீரினை முகந்து எடுத்து கொண்டு மேல் ஏறி; அப்பர் கோயில் அடைந்து - அப்பருடைய அரனெறித் திருக்கோயிலினைச் சேர்ந்து; அகலுள்...வார்த்தார் - கடல் சூழ்ந்த உலகத்தார் அதிசயித்துக் காணும்படி அகலினுள் முறுக்கும் திரியின்மேல் அந்நீரினை வார்த்தனராகி; 13 1879. (இ-ள்.) விளக்கு ஒன்று சோதி ஏற்றுதலும் சுடர்விட்டு எழுந்தது - அவ்விளக்கு ஒன்றில் தீயைக் கொளுவுதலும், அது சுடர்விட்டு மேல்நோக்கி எழுந்து எரிந்தது; அது நோக்கி....ஏற்றி - அதனை நோக்கி ஆதி முதல்வராகிய அரனெறியப்பருடைய திருக்கோயில் முழுதும் எங்கும் திருவிளக்குகளை ஏற்று வித்து; ஏதம்...எதிரே - குற்றமே நினைந்து நிந்தைபகர்ந்த அமணர்களின் எதிரில் முதிரும்....நாடு அறிய - மிக்குப் பெருகிய மகிழ்ச்சியினோடு நாதருடைய திருவருளால் நாடெல்லா மறியும்படி நீரினை வார்த்துத் திருவிளக்கினை ஏரித்தனர். 15 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. 1878. (வி-ரை.) சென்னிமிசை நீர்தரித்தபிரான் அருளே - இதற்கு முன்னோரைப் பகீரதனுக்காக உயிர் தந்து எழுப்பிய கங்கை நீர் தரித்த பெருமான் அருள் இந்நீராலும் தீ எரியச் செய்யும் என்பது குறிப்பு. அருளே - அருளினையே ஏகாரம் பிரிநிலை. அருளே சிந்தை செய்து எழுவார் - அடிவீழ்ந்த நிலையில் திருவாக்கினைக் கேட்ட மிக்க மகிழ்ச்சியாற் செய்வதறியாது கிடந்த நாயனார் இஃது சிவனருளே |