பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1077

 

ஏத நினைந்த அருகந்தர் எதிரே - அவமதிப்புடன் நிந்தைபுரித்த அந்தஅமணர் முன்பே. அந்த என்ற முன்னறிசுட்டுத் தொக்கது. ஏதம் நினைந்த - அவர்கள் கூறிய சொல்லினன்றிச் சொல்லைத் தூண்டிய நினைப்பு ஏதமாம்; (தீமை) குற்றம் நினைப்பின்பாலதேயாம் என்ற நீதிநூல் வரம்பும் காண்க. புறச்சமயிகள் நேரிற் கண்டு மனமயங்கவும் உண்மை காணவும் அவர்கள் எதிரே; "உரிஞ்சாய வாழ்க்கை யமனுடையைப் போர்க்கும், இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப" (பிள் - மயிலை - 10) என்ற கருத்தைச், சைவ உண்மை விளங்கும் இடத்தில், நன்றியில் சமயத்தில் உள்ள சமண் சாக்கியர் முதலியோர் இச்செய்கை ஏற்றதன்றென வெடுத்துரைக்கக் கூர்ந்து பார்த்துக் காத்துக் கொண்டிருப்பர் என்று ஆசிரியர் விளக்கிக் காட்டியதும் பார்க்க,

முதிரும் களிப்பு - முன் கூறியபடி சிறதாகத் தொடங்கி மேன்மேல் வளர்ந்து முதிர்வதாகிய மகிழ்ச்சி.

திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய - "நமிநந்தி, நீராற் றிருவிளக் கிட்டமை நீணாடறியுமன்றே" (தேவா) என்ற திருவிருத்த ஆட்சி போற்றப்பட்டது காண்க. நாடறிய - புறச்சமியிகள் முதலிய எல்லோரும் உண்மை அறிந்து கொள்ள, "அறியும் அன்றே" என்ற தேவாரத்தால் எரித்த அப்பொழுதே நேரில் உடனிருந்து கண்டறிந்தனர் என்பது போதருதல் காண்க. இச்செய்தி தேவாரத்தினாற் பெற்ற சரித ஆதரவு கொண்ட பெருமையுடையது. நாடறிய என்றதனை இறுதியில் வைத்து வற்புறுத்திக் காட்டியது மிக்கருத்து.

14

1880.

நிறையும் பரிசு திருவிளக்கு விடியு மளவு நின்றெரியக்
குறையுந் தகளி களுக்கெல்லாங் கொள்ள வேண்டு நீர்வார்த்து,
மறையின் பொருளை யர்ச்சிக்கு மனையி னியதி வழவாமல்
உறையும் பதியி லவ்விரவே யணைவார் பணிவுற் றொருப்பட்டார்;

13

1881.

இரவு சென்று தம்பதியி னெய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழின் முறையே விமலர் தம்மை யருச்சித்துப்
பரவி யமுது செய்தருளிப் பள்ளி கொண்டு புலர்காலை
யரவ மணிவார் பூசையமைத் தாரூர் நகரின் மீண்டணைந்தார்.

14

1880. (இ-ள்.) திருவிளக்கு......எரிய விடியுமளவும் திருவிளக்குக்கள் அவியாமல் நின்று எரியும் பொருட்டு; குறையும் தகளிகளுக்கெல்லாம் - எரிவதனால் விளக்கு நெய்யாகிய நீர் குறையும் அகல்களில் எல்லாம்; நிறையும் பரிசு - நிறைவாகும் தன்மையால்; கொள்ளவேண்டும் நீர் வார்த்து - எரியும் தன்மைக்கும் அகலின் அளவுக்கும் ஏற்றவாறு கொள்ளத்தக்க நீரை விளக்கு நெய்யாக வார்த்து; மறையின்...வழுவாமல் - வேதப் பொருளாகிய சிவபெருமானைத் தமது மனையில் வைத்துப் பூசனை புரியும் நியதி தவறாமல்; உறையும்.....ஒருப்பட்டார் - தாம் வாழும் நகராகிய ஏமப்பேறூரின்கண் அன்றிரவே யணைவாராய் இறைவரைத் தொழுது புறப்பட்டனராகி;

15

1881. (இ-ள்.) இரவு.....அருச்சித்துப் பரவி - அவ்விரவே சென்று தம்நகரிற் சேர்ந்து மனையிற் புகுந்து நித்தம் செய்வதுபோலப் பொருத்தி நியமமாகச் செய்யும் பூசைமுறைச் செயல்களின் முறைப்படியே விமலரைப் பூசித்து போற்றிப், பின்னர்; அமுது செய்தருளி......அமைத்து - திருவமுது செய்தருளிப் பள்ளிகொண்டு, விடியற்காலம் எழுந்து அரவணிந்தாரது பூசையின் நியமத்தினை