பக்கம் எண் :


1078திருத்தொண்டர் புராணம்

 

முடித்துக்கொண்டு; ஆரூர் நகரின் மீண்டணைந்தார் - திருவாரூர்த் திருநகரத்தில் மீண்டும் வந்தணைந்தனர்.

16

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண் டுரைக்க நின்றன. தனி முடிபாக்கி உரைக்கினு மிழுக்கில்லை.

1880. (வி-ரை.) நிறையும் பரிசு - நிறைவாவது, கோயில் முழுதும் எங்கணும் ஒளி பொருந்துதலும், இரவு முழுவதும் நிறைதலும், மிகுதலும் குறைதலுமின்றிச் சுடர் ஒத்த அளவாற் பொருந்தி எரிதலும் முதலாயின.

நின்று எரிய - மிகையும் குறையுமின்றி ஒரே அளவாய் எரியும்படி.

குறையும் தகளி - எரிதலால் (நெய்) நீர் குறைகின்ற அகல்.

மறையின் பொருள் - வேதங்களால் இதுவே பொருள் என்று முடிபாகக் கொண்ட பொருளாகிய சிவன்.

மனையின்....நியதி - தமது மனையின்கண்ணே நித்த நியமமாகச் செய்யும் ஆன்மார்ந்த சிவபூசையின் கடமை. முன்னர்த் திருவாரூர்ப் பூங்கோயிலமர்ந்த பெருமானையும் அரநெறியப்பரையும் வணங்கிவந்தது பரார்த்த பூசைக்குரிய - திருக்கோயிலிற் செய்த - வழிபாடு. இது மனையில் ஆகம விதிவழி செய்யும் ஆன்மார்த்த பூசை. வழுவாமல் - இரவிலும் பூசிக்கு நியமமுடையவர் நாயனார் என்றதாம். வழுவாதபடி, வழுவாதியற்றும் பொருட்டு. "யாம விரவும்" (1870).

அவ்விரவே அணைவார் - தாம் உடனிருந்து எரிக்காவிடினும் விடியுமளவும் நின்று எரியும்படி விளக்குக்களுக்கெல்லாம் அளவுபட நீர் (நெய்) வார்த்து இரவுப்போது கழியா முன் தமது மனையின்கண் அணைவாராகி.

இரவு - நடுஇரவுக்கு முற்பகுதி. அவ்விரவே - நடு இரவு ஆவதன்முன். அதற்குள் செய்வது அந்நாளினுக்கும், அதன்பின் செய்வது பிற்றை நாளுக்கும் சேரும் என்பது விதியாதலின், அந்நாள் நியதியான இரவுப்பூசை காலம் வழுவாது செய்வதற்கு அவ்விரவே நடுயாமத்தின்முன் அணைந்தனர். இந்நாளில் நவீனர் கொள்ளும் நாட்கூறு நடுயாமத்தோடு முடியும் கூறுபாடும் ஒப்பிடுக.

அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம். அணைவார் - ஒருப்பட்டார் என்று முடிக்க. ஒருப்படுதல் - வழிப்படத் துணிதல். செல்லுதல் என்றலுமாம்.

அருச்சித்து - என்பதும் பாடம். இது சிறப்பின்று.

15

1881. (வி-ரை.) இரவு.....அமுது செய்தருளி - தமது பதியினுக்கு வழிச்செல்லுதலும், பதியிற் சேர்தலும், மனையிற் புகுதலும், என்றும்போல விமலரை அருச்சித்துப் பரவுதலும், அமுது செய்தருளுதலும், பள்ளிகொள்ளுதலும் - என்றித் துணைச் செயல்களையும் அவ்விரவு காலந் தவறாமல் விதி நியதியின்படி உரிய காலத்தில் செய்து முடித்தனர். நாயனாரது பதியாகிய ஏமப்பேறூர், திருவாரூரினின்றும் ஆறு நாழிகையளவில் உள்ளது. எனவே மாலைப் பொழுதில் விளக்குகேற்றும் நேரங் கடவாது இவ்வாறு நீரால் விளக்கெரித்த நாயனார் விளக்கு ஏற்றி மூன்று நான்கு நாழிகையளவும் தாமே அங்கிருந்து விளக்கு எரித்துப் பின்னர் அவ்விளக்கு விடியுமளவும் எரியும்படி நீர்வார்த்து அமைவு செய்துவிட்டுச் சென்றனர் என்பதும், அவ்வாறு சென்றதுவும், இரவு மனையில் தாம் செய்யும் சிவபூசை நியதி வழுவா தியற்றும் பொருட்டேயாம் என்பதும் பெறப்படும்.

புலர் காலை....பூசை அமைத்து - காலையில் தாம் செய்யும் நியமமாகிய ஆன்மார்த்த சிவபூசையினைச் செய்து முடித்துக்கொண்டு. "யாம இரவும் பகலு முணர்வொழியா லின்பம் எய்தினார்" (1870) என்றது காண்க. இறைவன்