புறம்பும் உள்ளும் திருப்பணிகள் முந்த முயன்று - புறம்புசெய் திருப்பணி - திருவலகு - திருமெழுக்கு இடுதல் - உழவாரப்பணி செய்தல் முதலாயின. உள்ளேசெய் திருப்பணி - திருவிளக்கு, திருமாலை, திருமஞ்சனம் முதலாயின. முந்த முயன்று - தாமதமின்றி விரைவாகச் செய்து. முறையே செய்தல் - முன்செய்வன பின்செய்வன என்ற கிரமம் அறிதலும், காலமறிதலும் முதலாயின. அரிய விளக்கு - அருமையாவது திருவருளால் நீரை எரித்த அருமைப்பாடு. அந்தியமைத்த - என்பதும் பாடம். 17 1883. (வி-ரை.) பண்டுபோலப் பலநாளும் - முன்னும் பல நாள்கள் செய்தனர். "பலநாளும்.....வணங்கினார்" (1871) என்றது காண்க. பண்டுபோல என்றது அந்தி யமையத் தரிய விளக்கேற்றுதல் ஒன்றொழிய ஏனையவை எல்லாம் முன்போலவே யியற்றினர் என்ற குறிப்புத் தருவது. ஒழுக - இஃது ஒரு நியதியான ஒழுக்கமாகவே நிகழ்ந்தது என்பதாம். தண்டியடிகளால் - குண்டர் அழிய - இதன் விரிவு தண்டியடிகள் புராணத்துட் பார்க்க. கலக்கம் - அப்போது உள்ள நிலையின் மாறுபாடு. கலகம் - வடமொழி. கலக்கம் - தமிழ்; கலங்குதல் என்பது பொருள். கலக்கம் விளைந்து - கலங்குதல் நிகழ்ந்தமையின்; வினையெச்சம் ஏதுப்பொருட்டு. இதுகலகம் என வழங்குவதுபோலும். ஆரூரில் பெருமை நிலவியது என்று கூட்டுக. தொண்டர் கழல் அமரர் பணியும் - தாம் நலம் பெறுதற்பொருட்டுத் தேவர்கள் அடியார்களைப் பணிந்து, அவர்களது கருணைபெறும் காலம் பார்த்து வாயில் காத்துக்கொண்டுள்ளார்கள் என்பது திருக்கூட்டச் சிறப்பில் உரைக்கப்பட்டது. தேவாசிரிய மண்டபம் என்ற பெயர்க் காரணமும் காண்க. அண்டர்பெருமான் - தியாகேசர் தேவருலகத்தில் எழுந்தருளியிருந்த குறிப்பு. விளைக்க - என்பதும் பாடம். 18 1884. | நாத மறைதேர் நமிநந்தி யடிக ளார்நற் றொண்டாகப் பூத நாதர் புற்றிடங்கொள் புனிதர்க் கமுது படிமுதலா நீதி வளவன் றான்வேண்டு நிபந்தம் பலவு மரியணையின், மீது திகழ விருந்தமைத்தான் வேதா கமநூல் விதிவிளங்க, |
19 1885. | வென்றி விடையார் மதிச்சடையார் வீதி விடங்கப் பெருமாடாம் என்றுந் திருவா ரூராளு மியல்பின் முறைமைத் திருவிளையாட் டொன்றுஞ் செயலும் பங்குனியுத் திரமாந் திருநா ளுயர்சிறப்பும் நின்று விண்ணப் பஞ்செய்த படிசெய் தருளு நிலைபெற்றார். |
20 1884. (இ-ள்.) நாதமறைதேர் நமிநந்தி யடிகளாற் நல்தொண்டாக - நாதவடிவாகிய வேதங்களைத் தேரும் நமிநந்தியடிகளாருடைய நல்ல திருத்தொண்டின் பயனாக; பூத....புனிதர்க்கு - பூதநாதராகிப் புற்றிடங்கொண்ட புனிதராகிய பெருமானுக்கு; அமுதுபடி முதலாம்......தான் வேண்டும் நிபந்தம் பலவும் - நித்த நிவேதனத்துக்குவேண்டிய திருவமுதுபடி முதலாகத் தான் வேண்டும் படியே நிபந்தங்கள் பலவற்றையும்; வேதாகம நூல் விதி விளங்க - வேதங்கள் ஆகமங்களாகிய முதல் நூல்களில் விதித்த விதிகள் விளங்கும்படி; நீதி வளவன் |