பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1081

 

அரியணையின்மீது திகழ இருந்து அமைத்தான் - நீதியுடைய சோழன் தனது சிங்காதனத்தில் விளங்க வீற்றிருந்து அமைத்தான்;

19

1885. (இ-ள்.) வென்றி...பெருமாள்தாம் - வெற்றியுடைய விடையையுடையாரும் மதியினையணிந்த சடையினையுடையாரும் ஆகிய வீதிவிடங்கப்பெருமானார் தாம்; என்றும்....செயலும் - என்றும் திருவாரூரினை ஆட்சி புரியும் இயல்பின் முறைமையாகிய திருவிளையாடல் பொருந்திய செயலினையும்; பங்குனி உத்திரமாம் திருநாள் உயர்சிறப்பும் - பங்குனி உத்திரமாகிய திருநாளில் உயர்ந்த திருவிழாவையும், நின்று...நிலைபெற்றார் - நின்று விழாக்கொண்டருள வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொண்டபடியே விழாக் கொண்டருளும் நிலைமையினையும் பெற்றனர். (நமிநந்தியடிகளார்)

20

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபாக வைத்துரைக்க நின்றன.

1884. (வி-ரை.) நாதமறை - நாதவடிவமாகிய மறை நாதம் - ஒலிவடிவான என்றதாம். நாதம் - சத்தியின் வடிவம்; சிற்சத்தியாகிய ஞானமயமாகிய வேதம் என்க. மறைதேர் - வேதங்களைத் தேர்தல் என்றது அவற்றில் உண்மைப்பொருளாகக் கொண்ட முடிபைத் துணிந்து கொண்டு அதன்படி ஒழுகுதல்.

நமிநந்தி அடிகளார் நல்தொண்டாக - விதிவிளங்க நிபந்தம் பலவும் வளவன் அமைத்தான் - என்று முடிக்க. அடிகளாரது தொண்டாக அரசன் அமைத்தலாவது அடிகளார் பொருட்டு வெளிப்பட விளங்கிய தெய்வத் திருவருள் நினைவாக அடிகளார் தாமே அமைத்தது போன்று அரசன் நியமித்தல். அமைத்ததுஅரசனே யாயினும் அடிகளது பெயரால் விளங்க அமைத்தான் என்பது.

பூதநாதர் புற்றிடங்கொள் புனிதர்க்கு - பூதநாதர் - உயிர்களுக் கெல்லாம் தலைவர். சிவபூதகணங்களின் தலைவர் என்றலுமாம். உயிர்களுக்குத் தலைவர் என்பது பசுபதி என்ற தன்மை. எல்லா உயிர்களுக்குள்ளும் நிறைந்து வீற்றிருந்து அவைகளை இயக்குவித்து ஆளுதல்.

அமுது படிமுதலாக நிபந்தம் பலவும் - படி - திட்டமாக அமைத்த கட்டளை. "வாசத் திருமஞ்சனப் பள்ளித் தாமஞ் சாந்த மணித்தூபந், தேசிற் பெருகுந்செழுந் தீப முதலா யினவுந் திருவமுதும்" (கழறிற் - புரா - 24) என்றபடி பூசைக்குரிய திரவியங்கள் பலவும் நித்தமாக அமைந்து வரும்படி செய்யும் திட்டம் - நிபந்தம் - என்க. சிறப்புப் பற்றி அமுதுபடியை எடுத்துக்கூறிப் பிறவெல்லாம் கருதவைத்தார். அமுதுபடி - திருவமுது. பாலமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது முதலாயின எல்லாம் அளவுப்படி கொள்க. இவை சிவாகமங்களுள் நித்தம் எனப்படுவன.

நீதிவளவன் அமைத்தான் - நீதியுடையனாதலால் அமைத்தான் என்று காரணக் குறிப்புப் பெற உடம்பொடு புணர்த்தி ஓதினார்.

அரியணையின் மீது திகழ இருந்து அமைத்தான் - இது மரபு. அரசனாணையின்படி செய்யப்படும் அரசாங்கத் திட்டங்கள் அரியணைமீது இருந்து செய்வனவாம் என்பது மரபு. இவற்றை எழுதும் முன்னைநாட் கல்வெட்டுக்களின் முறையும் அமைப்பும் காண்க.

வேதாகம நூல் விதி விளங்க - விதி - வேதங்களில் விதித்த மந்திரவிதிகளும் ஆகமங்களின் விதித்த தந்திர விதிகளும் ஆம். விளங்க - உலகில் இவையிவை இன்னின்னபடி செயல்முறை நிகழத்தக்கன என்று விளங்கும்படி, திருவாரூர்ப் படித்தரத்