திட்டங்களும், ஏனைத் திருவிழாச் சிறப்புக்களின் திட்டங்களும் மிகஉயர்ந்த நிலையிலும் முழு அமைப்பிலும் இன்றுவரை விளங்கும் தன்மையும் இதனாற் பெறப்படும். 19 1885. (வி-ரை.) வென்றி......விதிவிடங்கப் பெருமாள் - தியாகராசப் பெருமான். "அணிவீதி மழவிடைமேல்......நின்றான் வீதிவிடங்கப்பெருமான்" (130), "சடைமருங்கி விளம்பிறையும்" (131) ளன்ற பாட்டுக்களிற் கூறியபடி மநு வேந்தனுக்குக் காட்சி கொடுத்த திருமேனி இங்கு நினைவு கூர்தற்பாலது. என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் - இறைவர் விளங்க வீற்றிருந்து அருள்புரியும் தன்மை தெரிய; ஆளும் என்பது மரபு; தியாகராசர் அரசராம் பெயர்க்கும் ஏற்றபடி ஆளும் என்றார். "அமரர்நா டாளாதே யாரூராண்ட அயிராவணமே" (தேவா) "எல்லையிலா வாட்சிபுரிந் தின்புற்று மகிழ்ந்த" (திருஞான - புரா - 1132); என்றும் - ஆளும் "முன்னோ...பின்னோடு......திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே? (தேவா) என்றபடி திருப்பாற்கடலுக்கும் தேவருலகத்துக்கும் சென்றருளி வீற்றிருந்து, திருவாரூருக்கு முசுகுந்தர் மூலம் வருவதற்கு முன்னும் திருவாரூரிலே எழுந்தருளியவர் என்பதும் குறிப்பு. இயல்பின் முறைமை...செயலும் - ஆட்சி புரியும் தன்மை விளங்கப் பலநாளும் செய்யும் பல திருவிளையாடல்கள். இவை தியாகராச லீலைகள் என்று தலபுராணத்தினுள் விரிக்கப்பட்டுள்ளன. திருவாலவாயுடையாரது திருவிளையாடல்களைத் திருவிழாக் கொண்டாடுதல்போல் இவையும் அவ்வப்போது விழாக் கொண்டாடப் பட்டன. இவை தல ஐதீகம் பற்றி நிகழும் உற்சவங்கள். பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும் - பங்குனி மாதத்தில் உத்திரத் திருநாளைப் பெருநாளாகக் கொண்டு முன் ஒருமாத அளவில் கொடியேற்றிப் பெருந் திருவிழாக்கொள்ளுதலும். உயர் சிறப்பு - பெருத்திருவிழா - திருவாரூர்ப் பெருமானது திருவிழாக்கள் ஆண்டிற்பலவாக, அவற்றுள்ளே பங்குனி உத்திரவிழாப் "பெருவிழா"வாகும். இது உருத்திர பாததரிசனம் என்று தேற்றம்நக அறியப்படும். தியாகப்பெருமான் திருவாழித் தேரில் எழுந்தருளும் பெருமாள். இவை சிவாகமங்களுள் நைமித்திகம் - (நிமித்தம் பற்றிச் செய்யப்படுவது) எனப்படுவன. நின்று விண்ணப்பஞ் செய்தபடி - திருவிழாக்கொண்டருள வேண்டுமென்று விண்ணப்பிக்க அவ்வாறே, ஆராய்ந்து, செங்க ணமரர் புறங்கடைக்கட் சென்றீண்டி, யெங்கட்குக் காட்சியரு ளென்றிரப்ப" (ஞானவுலா); "புகலிசேர், வீதி யெழுந்தருள வேண்டுமென விண்ணப்பம், ஆதரத்தாற் செய்தவவர்க்கருள்" (ஆளுடைய பிள்ளையார் - திருவுலாமாலை) முதலியவை காண்க. செய்தருளும் நிலை - அவர் விண்ணப்பித்ததனை ஏற்றுக்கொண்டு அவ்வாறே திருவிளையாடல் உகந்தும், உயர்சிறப்புக்கொண்டருளியும் செய்தருளும்தன்மை. முன் பாட்டால் நித்தியமும், இப்பாட்டால் நைமித்திகம் என்ற சிறப்புக்களும் கூறிய அமைதி காணப்படும். "சிறப்பொடு பூசனை" (குறள்). நேர் பெற்றார் - என்பதும் பாடம். 20 1886. | இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ் செய்தே, யேழுலகும் மன்னும் பெருமைத் திருவாரூர் மன்ன ரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடி யருள வெந்நாளும் நன்மை பெருக நமிநந்தி யடிக டொழுதார் நாமுய்ய. |
21 |