பக்கம் எண் :


1084திருத்தொண்டர் புராணம்

 

மேவ வன்பர் தாமுமுடன் சேவித் தணைந்து விண்ணவர்தங்
காவ லாள ரோலக்க மங்கே கண்டு களிப்புற்றார்.

22

(இ-ள்.) தேவர்...எழுந்தருள - தேவர் நாயகராகிய தியாகேசர் எழுச்சியாக ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள; யாவர்.....அணைந்து - இவர் இன்னார் என்று கண்டறியாது ஒருங்கே கலந்து சேவித்து எல்லாக் குலத்திலுள்ளவர்களும் உடனாகக் கலந்து வந்து பொருந்த அன்பராகிய நமிநந்தியடிகளாரும் அவர்களோடு உடனாகச் சேவித்து அணைந்து; விண்ணவர்தம்.....களிப்புற்றார் - தேவர்களது காவலராகிய தியாகேசரது திருவோலக்கத்தை அங்குக் கண்டு மகிழ்ச்சி யடைந்தனர்

(வி-ரை.) எழுச்சி....எழுந்தருள - தேவர் பெருமானது எழுச்சியானது எழுந்தருளா நிற்ப; எழுச்சி எழுந்தருள என்றது "கறைமிட றணியலு மணிந்து" என்புழிப்போல நின்றது.

திருமணலி - திருவாரூருக்கும் ஏமப்பேறூருக்கும் அணிமையில் உள்ள ஓர் ஊர். இங்குத் தியாகேசர் திருவாரூரினின்றும் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் வழக்கம் முன்னாளில் இருந்தது என்றும், பின்னாளில் அது நின்றுபட்டது என்றும் கருதப்படுகின்றது.

யாவர் என்னாது உடன்சேவித்து எல்லாக் குலத்தினுள்ளோரும் மேவ - திருக்கோயிலினுன் இன்ன குலத்தினர் இன்னபடி இன்ன இடத்தில் நின்று ஏனையோருடன் கலவாது தனித்தனி நின்று சேவிக்க வேண்டுமென்பது ஆகமங்களுள் விதிக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலினுள்ளே புகாது வெளிநின்று சேவிக்கும் குலத்தவருமுண்டு. நோய், ஆசௌசம் முதலாயின காரணங்களால் திருக்கோயிலினுள் புகுதலை விலக்கப்பட்டாரும் உண்டு. ஆனால் இறைவர் திருக்கோயிலினின்றும் எழுச்சிபெற்றுத் திருவீதியில் எழுந்தருளும் காலத்தில் இவ்விதிவிலக்குக்கள் இல்லையாதலின் யாவரென்னாது என்றும், எல்லாக் குலத்தினுள்ளோரும் உடன் சேவித்து என்றும் கூறினார். இதுபற்றிப் "புறத்திருத்தொண்டர்" என்று திருநாளைப்போவார் நாயானர் புராணத்திலுரைத்தவையும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் சரிதப் பகுதிகளும் ஈண்டு வைத்துச் சிந்திக்கத்தக்கன. இவ்வாறுஉள்ள விதி விலக்குக்களின் உண்மையுணராது, இதுபற்றி இந்நாளில் பெரும் பூசல் விளைத்தல் அறியாமையின்பாற்படும்.

தேவர் பெருமான் என்றும் - னிண்ணவர்தங் காவலாளர் என்றும் கூறியவை தியாகேசர் தேவருலகத்திருந்தபோதும், அங்கு நின்று இங்கு எழுந்தருளியபின் இப்போதும் தேவர்களால் வழிபடப்படும் வரலாற்றுக் குறிப்பு.

ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் - திருவிழாச் சேவித்தலின் சிறப்புப் பற்றி ஆளுடையபிள்ளையாரது திருமயிலைத் தேவாரங் காண்க. இத் தியாகேசர் திருவிழாச் சிறப்பினை அடியார் கண்டு வழிபடும் பெருமைபற்றி ஆளுடையஅரசுகளது திருவாரூர் "முத்து விதானம்" (குறிஞ்சி) என்ற திருப்பதிகமும் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. அமர்நீதியார் திருநல்லூரில் திருமடம் அமைத்தமர்ந்த புராண வரலாறும் கருதுக. ஓலக்கம் - உற்சவங் கொண்டருளும் காட்சி.

22

1888.

பொழுது வைகச் சேவித்துப், புனிதர் மீண்டுங் கோயில்புகத்
தொழுது, தம்மூர் மருங்கணைந்து, தூய மனையுட் புகுதாதே,
இழுது மிருள்சே ரிரவுபுறங் கடையிற்றுயில வில்லத்து
முழுதுந் தருமம் புரிமனையார் வந்துட் புகுத மொழிகின்றார்;

23