பக்கம் எண் :


1086திருத்தொண்டர் புராணம்

 

இழுதும் இருள்சேர் இரவு - இழுதும் இருள் - மைக்குழம்பு போன்ற இருள். "வண்ண நீடிய மைக்குழம் பாமென்று, நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து" (455), "கருரு மையிரு ளின்கணங் கட்டுவிட் இருகுகின்றது போன்றது" (454) என்பன காண்க.

புறங்கடையில் துயில - வழிபோய் வந்த அயர்ச்சியினால் புறங்கடையில் அமர்ந்து துயில முயன்றாராக. இஃது குளித்து நியமம் முடிக்குமுன் வந்த சிறு அயர்ச்சியாலாயது.

இல்லத்துத் தருமமுழுதும் புரிமனையார் என்க. இல்லறத்துக்குரிய தருமங்கள் முற்றும் செய்தற்குத் துணையாக நிற்றல் மனைவியாரது கடனாதலின் அவ்வாறு முழுதும் தருமம் புரிமனையார் என்றார். தருமம் - இல்லறம்.

மொழிகின்றார் - என என்று கூட்டுக. மொழிகின்றார் என்ற முற்றெச்சம் என என்ற வினையெச்சத்துடன் முடிந்தது.

உட்புகுத மொழிகின்றார் - மனைப்புறங் கடையிற் சிறிது துயிலப்புக்க கணவனாரை மனையின் உள்ளே புகும்படி உரைப்பாராகிய மனையார் இல்லற தருமம் முழுவதும் புரிவாராதலின் உட்புகுந்து பள்ளியமர்வீர் என்று வாளா கூறிவிடாது பூசனை முடித்தும், கடன்முறை அங்கி வளர்த்தும், அமுது செய்தும் பள்ளிகொள்வீர் என்று தம் நாயகரது உடலுக்கும் உயிர்க்கும் உரிய ஊதியமாகிய கடமைகளைக் கூறும் அமைதி வரும் பாட்டில் விரித்தல் காண்க.

23

1889(வி-ரை) திங்கள் முடியார் பூசனைகள் முடித்தல்-இரவு அருச்சனை செய்யும் சிவழசை நியதி காம கண்டர் செய்ய கழல் வழிபட்டொழுகுக் தலைமை நிலையாம விரவும் பகலும் (1870) என்று இந்நியதியைத் தொடக்கத்திலே அறவித்தது காண்க

கடன் முறையால் அங்கிதனை வேட்டு - இது அந்தணர்க்குரிய வேள்வியும், சிவபூசையின் முடிபில் அதன் அங்கமாகச் செய்யும் நித்திய வேள்வியுமாம். இவ்விரண்டினையும் குறிக்கக் கடன் முறையால் என்றார்.

பூசனைகள் முடித்து - அங்கிதனை வேட்டு - அமுதுசெய்து என்றமையால் அவ்விரண்டு நியமமும் முடித்தன்றி இரவிலும் அமுது செய்தல் கூடாமை என்பதாயிற்று.

அவர்க்கு - அவ்வாறு மொழிந்த மனைவியாருக்கு - விடையாக.

அவர்க்கு - என்று - எனச் - செப்ப - என்று வரும் பாட்டுடன் முடிக்க.

உடன் நண்ண எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று - எங்கும் - என்றதனால் தங்கும் இடத்தாற்றூய்மையற்றாரும் என்பதும், எல்லாரும் என்றதனால் பிறப்பாலும் தொழிலாலும் ஒழுக்கம் முதலிய பிறவாற்றலும் தூய்மையற்றாருங் என்பதும் குறிக்கப்பட்டன.

உடன் நண்ணப் - போத என்று கூட்டுக. உடன் கலந்து தீண்டும்படி புடைபட்டு போந்தமையால். இழிவு - தூய்மையில்லாதாரைத் தீண்டுதலால் ஒருவதற்குத் தொடக்குறுதலாகிய தூய்மையற்ற தன்மை; இதனைத் தீட்டு (தீண்டுதலால் வருவது) விழுப்பு - என்று வழங்குவர்.

இழிவு தொடக்குதல் - இந்நாள் நவீனக் கலைஞானிகளும் இதனுண்மையை ஒப்புவர். நோயாளியைத் தீண்டும் தோறும் மருத்துவர் தம்மையும் மருத்துவக் கருவிகளையும் தூய்மைசெய்து கழுவிக்கொள்ளுதல் காண்க. இனிக், கருமப்பகுதியின் பக்குவ வேறுபாட்டால் மன முதலிய அந்தக்கரணங்களின் தூய்மையற்ற தன்மையுடையோரின் தீண்டுதலானது புறக்கரணங்களின் வழியே சென்று உட்கரணங்களை மிகவும் தாக்கிப் புறத்தினும் மிக, அகத்துட் கேடு விளைக்கும்; இது