நுண்ணிய நிலை. இதனைச் சில நவீனர் மறந்து பலவும் பிதற்றி ஒழிவர். ஆயின் நவீனருள் மனத்தத்துவக்கலை ஆராய்ச்சியாளர் இதனை ஒப்புவர். நல்லாரிணக்கமும், தீயோர் சார்பு விலக்கமும் இதனை உள்ளுறுத்தெழுந்த விதிகளேயாம்.  தொடக்குதல் - தொடுதலினாற் பற்றிப் படர்தல்.  24  1890. (வி-ரை.) குளித்து அடுத்த தூய்மை செய்தே - குளித்தல் - புறத்தூய்மையும் அடுத்த தூய்மை செய்தல் - புறத்தினை அடுத்த அகத்திடத்தைத் தூய்மை செய்தலும் குறித்தன. அடுத்த தூய்மை செய்தல் - திருநீறிடுதலும், அகோரம் முதலிய உரிய மந்திரங்களைச் செபித்தலும், அதுபோன்ற பிறவுமாம்.  வேதநாதர் பூசனையைத் தொடங்கவேண்டும் - பூசனை தொடங்குவதற்குமுன் செய்யவேண்டும். இவ்விதிகளை வேதங்கள் விதித்தலால் வேதநாதர் என்றார்.  சீதநன்னீர் முதலான - குளித்தற்கேற்றது குளிர்ந்த நீரே என்பது குறிப்பு. வெந்நீரிற் குளித்தல் பிற்றைநாட் செயற்கை வழக்கு. நன்னீர் - என்றது பல வாற்றாலும் அசுத்தப்படுத்தப்படாத தூய்மையுடைய நீர் என்றபடி. சீதநன்னீர் - ஏனை அகத்தூய்மைக்குரிய வழிபாட்டுக்கும் உரியது. முதலான - தூய்மை செய்தற்குரிய திருநீறும் - தோய்த்துலர்ந்த உடையும், மண்ணும், செபவடமும் முதலாயின.   காதல் மனையார் - கடிதணைந்தார் - இழுதுமிருள்சேர் இரவு முற்றுவதாதலின் நள்ளிரவின் முன்னர், முன்னே சொன்ன கடன்கள் முடித்து நாயகரைப் பள்ளிகொள்ளச் செய்தல் அவரது பாதுகாவலுக்கேற்றது என்ற ஆர்வம் காதல் காரணமாய் மனைவியாருக்கு வருவது என்ற காரணக் குறிப்புப்படக் காதல் மனையார் என்று உடம்பொடு புணர்த்தி ஓதினார். கடிது (அணைந்தார்) என்ற குறிப்புமது. அணைந்தார் - சென்றனர்.  25 1891.  | ஆய பொழுது தம்பெருமா னருளா லேயோ? மேனியினில்  ஏயு மசைவி னயர்வாலோ? வறியோ? மிறையுந் தாழாதே  மேய வுறக்கம் வந்தணைய விண்ணோர் பெருமான் கழனினைந்து  தூய வன்பர் துயில்கொண்டார்; துயிலும் பொழுது கனவின்கண்,   |  
 26 1892.  |  மேன்மை விளங்குந் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாடாம்  மான வன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி "ஞான மறையோ ராரூரிற் பிறந்தா ரெல்லா நங்கணங்க  ளான பரிசு காண்பா"யென் றருளிச் செய்தங் கெதிரகன்றார்.   |  
 27  1891. (இ-ள்.) ஆய...அருளாளேயோ? - அவ்வாறு மனைவியார் சீத நன்னீர் முதலான கொண்டுவரக் கடிதணைந்த அச்சிறிய நேரத்தில் தம் பெருமானது திருவருளினாலேயோ?; மேனியினில்....அயர்வாலோ? - அவர்தம் திருவுடம்பில், வழிச்சென்று வந்த அயர்ச்சியினாலோ?; அறியோம் - இன்ன காரணத்தாலென்று நாம் அறியமாட்டோம்; இறையும்...அணைய - சிறிதும் தாழ்க்காது பொருந்திய உறக்கம் வந்து சேர; விண்ணோர்.....துயில் கொண்டார் - தேவர் பெருமானது திருவடிகளையே நினைந்த வண்மாய்த் தூய அன்பராகிய நாயனார் துயில் கொண்டனர்; துயிலும்போது கனவின்கண் - அவ்வாறு துயிலும்போது அவரது கனவிலே;   26  1892. (இ-ள்.) மேன்மை......வந்தருளி - பெருமை விளங்குதற்கிடமாகிய திருவாரூரின்கண் எழுந்தருளிய வீதிவிடங்கப் பெருமாள் தாமே, பெரிய அன்பராகிய நமிநந்தியடிகளுடைய பூசனையை ஏற்பதற்கு வருபவர் போல எழுந்தருளி  |