பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1089

 

ஆரூர்ப் பிறந்தார் எல்லாம் ஞான மறையோர்: ஆதலின் (அவர்) தம்கணங்கள் ஆன பரிசு என்று கூட்டுக. "திரு ஆரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார்" (தண்டியடிகள் - புரா - 1) என்றபடி முன்னைத் தவத்தால் ஞானம் பெற்று முத்திபெறத் தகுந்த பக்குவமுடைய ஆன்மாக்களே திருவாரூரில் வந்து பிறக்கும்பேறு பெறுவர்; ஆதலின் பிறந்தார் எல்லாம் ஞான மறையோராவர்; ஆதலால் அவர் முத்திபெற்று நம் கணங்களாவார் என்றதன்மை. இதுபற்றியே "திருவாரூர்ப் பிறந்தார்களெல்லார்க்குமடியேன்" என்று திருத்தொண்டத் தொகையுள் இவர்களைத் தொகையடியார் கூட்டத்தினுள் வைத்துப் போற்றினார். "திருவாரூர்ப் பிறக்கமுத்தி"" என்பது மிக்கருத்து. இக்கருத்தறியாது ஞானமறையோய் என்று பாடங்கொண்டு, நமிநந்தியாரை இறைவர் விளித்ததாக உரைகொள்வாருமுண்டு.

எதிர் அகன்றார் - எதிரினின்றும் அறைந்தருளினர்.

27

1893.

ஆதி தேவ ரெழுந்தருள, வுணர்ந்தா "ரிரவர்ச் சனைசெய்யா
தேத நினைந்தே" னெனவஞ்சி, யெழுந்த படியே வழிபட்டு
மாத ரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாத னார்தந் திருவாரூர் புகுத வெதிரந் நகர் காண்பார்,

28

1894.

தெய்வப் பெருமா டிருவாரூர்ப் பிறந்து வாழ்வா ரெல்லாரும்
மைவைத் தனைய கண்டரவர் வடிவே யாகிப் பெருகொளியான்
மொய்வைத் தமர்ந்த மேனியராம் பரிசு கண்டு, முடிகுவித்த
கைவைத் தஞ்சி யவனிமிசை விழுந்து பணிந்து களிசிறந்தார்.

29

1893. (இ-ள்.) ஆதிதேவர் எழுந்தருள - முன் கூறியவாறு ஆதிதேவர் மறைந்தருளினாராக; உணர்ந்தார் - உணர்ந்தவராகி; இரவு......அஞ்சி - "இரவிற் செய்யும் பூசனையைச் செய்யாமல் பிழைபட நினைந்தேன்" என்று அஞ்சி; எழுந்தபடியே வழிபட்டு - உணர்ந்து எழுந்த அவ்வாறே உட்புகுந்து வரிபட்டு; மாதரார்க்கும்......மொழிந்து - மனைவியார்க்கும் போந்த செய்தியைச் சொல்லி; விடியல்......புகுத-விடியற்காலையில் விரைவினோடு சென்று இறைவருடைய திருவாரூரினுள் புகுத; எதிர் அந்நகர் காண்பார் - எதிரில் அத்திருநகரத்தைக் காண்பவராகிய நாயனார்;

28

1894. (இ-ள்.) தெய்வம்...எல்லாரும் - தேவர் தலைவராகிய தியாகேசரது திருவாரூரில் பிறந்து வாழ்வார்கள் எல்லாரும்; மை வைத்தனைய...பரிசு கண்டு - மை வைத்தது போன்ற கண்டத்தை யுடைய பெருமானது திருவடிவத்தையே உடையவர்களாகிப் பெருகும் ஒளியினால் திரண்ட மேனியினைக் கொண்டவர்களாய் விளங்கும் தன்மையினைக் கண்டு; முடி குவித்த...களிசிறந்தார் - உச்சியின் மேல் கூப்பிய கை தூக்கி வைத்து அஞ்சி நிலம் தோய வீழ்ந்து வணங்கி மிகவும் களிப்பினையடைந்தார்.

29

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1894. (வி-ரை.) தெய்வப் பெருமான் - "தேவர் பெருமான்" (1887); பெருந்தெய்வம் என்றலுமாம்.

பிறந்து வாழ்வார் - வாழ்வார் - சிவனையும் அடியாரையும் மறவாது போற்றுதலால் வாழ்வின் பயன் பெற்று வாழ்பவர். பிறந்தார் என்னாது பிறந்து வாழ்வார் என்றதும் இக்கருத்து. அவ்வாறு பெறாதோர் பிறந்தும் பயன் பெறாமையிற் பிறந்திலரே யாவர் என்பதும் குறிப்பு. "மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே" (தேவா).