மைவைத்த கண்டரவர் வடிவே யாகி - என்றது சிவசாரூபம் பெற்ற நிலை. இது சிவயோகங் கைவந்த பெரியோர் ஞானம் பெற்றுச் சிவசாயுச்சிய மடையதன் முன் பெறும் பதமாம். சரியையாதி நான்கனுள் இரண்டாவது கிரியையாளர் பெறும் பதம். "ஞான மறையோர்" (1892). பெருகு ஒளியால் மொய் வைத்து அமர்ந்த மேனி - பேரொளிப் பிழம்பாய்ச் சிவவொளியிற் றோன்றும் சோதி வடிவம். மொய் வைத்து - மொய்த்தலைச் செய்து; பெருகுஒளி - இது சிவஞான வொளி. மற்று எல்லா ஒளிகளுக்கும் மேலானது. "ஒளியா யொளியத னொளியா யொளியத னொளியுந் தணிதருமொளியாகி" (பேரூர்ப் புராணம் - நிருத்தப்படலம்) "மாயை யரக்கையின்மேலளவின் றுயர்ந்த சிவமயமாய்...சூழ்ந்த வொளியிற் றோன்றினார்" (1260). திருஞான - புரா - 829 - 831 - முதலியவை காண்க. சிவசாயுச்சியத்துட் கலந்து ஒன்றாவதற்கு முன்னைநிலை. மைவைத் தனைய கண்டரவர் வடிவேயாகி - பெருகு ஒளியால் அமர்ந்த மேனியர் ஆம் பரிசு - ஆரூரில் வந்து பிறந்த தன்மையாலே காலாந்தரத்தில் சிவசாரூபம் பெற்று முத்தியடையும் தன்மை. ஆம் - இனி ஆகும் என்ற குறிப்பும் தருவது. ஆம் பரிசு கண்டு முன்னர் "ஆன பரிசு காண்பாய்" (1892) என்று அருளிக்காட்ட, அவ்வாறே ஆகும் பரிசு கண்டார் என்க. "காட்டுவித்தா லாலொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" (தேவா). முன்னர் அவ்வாறு காணாது "எல்லாரும்போத இழிவு தொடக்கிற்று" (1889) என்று கண்டார். இப்போது இறைவன் றிருவருள் காட்ட அது மாறிச் சிவவொளி கண்டார். முடிகுவித்த......சிறந்தார் - இவை உண்மை கண்டவுடன் நிகழ்ந்த மெய்ப்பாடுகள். மைவைத்தனைய மணிகண்டர் - என்பதும் பாடம். 29 1895. | படிவ மாற்றிப் பழம்படியே நிகழ்வுங் கண்டு பரமர்பால் "அடியேன் பிழையைப்பொறுத்தருள வேண்டு" மென்று பணிந்தருளாற் குடியுந் திருவா ரூரகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து நெடிது பெருகுந் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார்; |
30 1896. | நீறு புனைவா ரடியார்க்கு நெடுநா ணியதி யாகவே வேறு வேறு வேண்டுவன வெல்லாஞ் செய்து மேவுதலால் ஏறுசிறப்பு மணிப்புற்றி லிருந்தார் தொண்டர்க் காணி" யெனும் பேறு திருநா வுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்; |
31 1897. | இன்ன வகையாற் றிருப்பணிக ளெல்லா வுலகுந் தொழச்செய்து நன்மை பெருகு நமிநந்தி யடிக ணயமார் திருவீதி சென்னி மதியுந் திருநதியு மலைய வருவார் திருவாரூர் மன்னர் பாத நீழன்மிகும் வளர்பொற் சோதி மன்னினார். |
32 1895. (இ-ள்.) படிவம்......கண்டு - முன் காட்டிய படிவத்தை மறைக்க முன்னிருந்தபடியே நிகழ்வதனையும் கண்டு; பரமர்பால்...பணிந்து - இறைவரிடம் "அடியேனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்" என்று விண்ணப்பித்து வணங்கி; அருளால்...வாழ்வார் - திருவருளினாலே தமது தலத்தினின்றும் திருவாரூரினில் குடிபுகுந்து வாழ்வாராகி; குவலயத்து... நிலவுவார் - உலகத்தில் நெடிது பெருகுகின்ற திருத்தொண்டுகளிற் பலவற்றையும் நிகழும்படி செய்து நிலவுவாராகி; 30 |