னையே தொழுதிருந்தார்" (1362) என்றவிடத் துரைத்தவை பார்க்க. அத்தெளிவின் முதிர்ச்சியின் விளைவு 1382-ல் உரைக்கப்படுவது. பெரியோர் - இங்குப் பிறர் எவராலும் செய்தற்கரிய செயல் செய்தமையின் பெரியோர் என்றார். "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள்). படிறுய்த்திடு - படிதுற்றடு - படிறுற்றிடு - கரைவரைமேல் - ஏவச்செறு - என்பனவும் பாடங்கள். 114 வேறு 1380. | அண்ண லருந்தவ வேந்த ரானைதம் மேல்வரக் கண்டு விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச் "சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த திருப்பதி கத்தை மண்ணுல குய்ய வெடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார். |
115 1381. | வஞ்சகர் விட்ட சினப்போர் மதவெங் களிற்றினை நோக்கிச் "செஞ்சடை நீண்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம்மடி யோநாம்! அஞ்சுவ தில்லை" யென் றென்றே யருந்தமிழ் பாடி யறைந்தார். |
1380. (இ-ள்.) வெளிப்படை. பெருமையுடையாராகிய அரிய தவவேந்தர், அந்த யானை தம்மேல் வருதலைக்கண்டு, தேவர்கள் தலைவராகி இடப வாகனத்தை விரும்பி ஊர்ந்து வருவோராகிய சிவபெருமானைத் துதித்துச் "சுண்ண வெண்சந்தனச் சாந்து" என்று தொடங்கும் திருப்பதிகத்தை இந்த மண்ணுலகத்தவர் யாவரும் உய்யும்படி எடுத்து மிக மகிழ்ச்சியுடனே பாடுகின்றாராகி, 115 1381. (இ-ள்.) வெளிப்படை. வஞ்சனையுடையோராகிய அமணர்கள் ஏவிவிடுத்த மதமும் கோபமுமுடைய யானையை நோக்கிச், "சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியினையுடைய கூத்தராகிய, தேவர்க்கெல்லாம் பெருந் தேவராகிய, வெஞ்சுடரினையும் மூவிலையினையுமுடைய சூலமேந்திய திருவீரட்டானேசுவரருடைய அடியோம் நாம்! அஞ்ச வருவதொன் றில்லை" என்றென்றே, அரிய தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளினார். 116 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. 1380. (வி-ரை.) அண்ணல் - பெருமையுடையோர். பெருமையுடைய தவம் என்றலுமாம். தவ வேந்தர் - தவஞ் செய்வாருள் தலையாயவர். விண்ணவர் தம் பெருமான் - ஈண்டு விண்ணவர் என்றது உலகத்திற் காணப்படும் புள், விலங்கு முதலிய ஒவ்வொன்றிற்கும் அதனதன் செயலை விளைத்தற்கதிதெய்வமாகியுள்ள மந்திரத் தலைவர்களைக் குறித்தது. தம் பெருமான் என்றது அந்தந்த அதிதெய்வமாய மந்திரம் இடமாக நின்று பயன் கொடுப்பதாகிய சிவசத்தியைக் குறித்தது. "கருடசானத் தீர்விடம் போற்றான்" (சிவஞானபோதம் - 9-ம் சூத்.) என்ற வெண்பாவின் கீழ், "ஆதி பௌதிகம், ஆதி தைவிகம், ஆத்தியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும்" என்று தொடங்கி மாதவச் சிவஞான முனிவர் உரைத்தவை இங்கு சிந்திக்கத்தக்கன. இங்கு மதயானை சினத்துடன் தம்மைக் கொல்லும்படி முன்னே வர, அதனை வென்று தணிப்பித்தற்குரிய அதிதெய்வ மந்திர உருவத்தைத் தெளிவுற்ற பெரியோர் அத்தெய்வங்களாகிய விண்ணவர்களின் பெருமானாகச் சிவனை நினைந்துகொள்வது இயல்பாகும். மேல்வரும் பாட்டிலும் "தேவர்க்குந் தேவர்பிரானார்" என்று இக்கருத்தையே தொடர்ந்து கூறுவதும் காண்க. "வண்ண வுரிவை யுடையும்" என்று யனை உரித்த |