பாசம் - பாசத்தால். பாசம் - கயிறு. வாளா கடலில் வீழ்த்தப்படினும் எவனும் தப்ப முடியாது; கல்லினோடு பிணித்து இட்டால் இறத்தல் உறுதி; என இவ்வாறு கூறினார். பாய்ச்சுதல் - வேகமாக எறிதல். நூக்குதல். "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்", "ஒல்லை நீர்புக நூக்க" என்பன தேவாரம். பாய்ச்சுக - என்பதும பாடம். 126 1388. | ஆங்கது கேட்ட வரச னவ்வினை மாக்களை நோக்கித், "தீங்கு புரிந்துவன் றன்னைச் சேம முறக்கொடு போகிப் பாங்கொரு கல்லி லணைத்துப் பாசம் பிணித்தோர் படகில் வீங்கொலி வேலையி லெற்றி வீழ்த்துமி" னென்று விடுத்தான். |
(இ-ள்.) வெளிப்படை. அது கேட்ட அரசன், அந்தத் தொழில்செய்யும் மாக்களைப் பார்த்துத் "தீமை செய்த தருமசேனனைத் தப்பவிடாமற் கொண்டு போய்ப் பக்கத்தில் ஒரு கல்லினோடு சேர்த்துக் கயிற்றினாற் கட்டி ஒரு படகில் ஏற்றி மிக முழங்குகின்ற கடலினுள் வீசி எறிந்து விழுத்திவிடுங்கள்" என்று ஏவி விடுத்தான். (வி-ரை.) ஆங்கது - அது. "ஆங்கவைபோல" (சிவஞானபோதம் 5. சூத்) என்புழிப்போல ஒரு சொன் னீர்மைத்து அரசன் அது கேட்ட ஆங்கு என்று கேட்டபடியே, கேட்டபொழுதே, கேட்ட இடத்தே என்றுரைக்கவும் நின்றது. அவ்வினை மாக்கள் - படகு செலுத்துவோரும், கல்லிற் கட்டி வீழ்த்தும் தண்டத் தொழில் செய்வோரும், கண்காணிப்போரும் என்க. வினை - இங்குத் தீவினை என்ற குறிப்பும், மாக்கள் - அறிவில்லாத விலங்கனையர் என்ற குறிப்பும்பட நின்றன. "மாவு மாக்களும் ஐயறி வினவே" என்ப ஆதலின் தமக்கெனப்பகுத்து அறியும் அறிவும் செயலுமின்றித் தீயவாயினும் ஏவியவற்றை அவ்வாறே செய்வோர் என்பது ஆயின் அரசனாணைவழி நிற்போர் பின்னென்செய்வர்?எனின், "மைந்தனைத் தேர்க்காலின்கண் ஊர்க" என ஏவி விடுக்கப்பெற்ற மந்திரி அது செய்யாததன்று தன்னாருயிர் விடுத்தானுமுளன். ஆதலின் மந்திரத் தலைராகிய ஆசிரியர் இவ்வாறு குறிப்பித்தனரென்க. அரசனாணைவழி நிற்கும் அமைச்சராயினும் பொய்க்கதை படித்துப் போதுபோக்கிய அரசனை அது செய்யத் தகாதது; படிப்பதும் கேட்பதும் நற்றவக் கதையேயாவன என்று தெருட்டி வழிப்படுத்திய ஆசிரியருடைய செயலும் இங்குக் கருதற்பாலது. இராமன் காட்டுக்குச் செல்ல உள்ள நாளினை அவனது முடிசூட்டுதற்கென்று வகுத்த நூலவரைக் "கணித மாக்கள்" என்று கூறிய கம்பன் பாட்டு இக்கருத்தைக்கொண்டேழுந்தது காண்க. வண்டியிற் பூட்டிய விலங்கினம்போலத் தொழில் செய்யும் மாக்களாகிய மக்களும் உலகில் உளர் என்பது. "சேந்தற்குற்றுழிப் பிரிவு" என்ற இறையனாரகப் பொருள் (35) சூத்திரப் பகுதியின் கீழ் "கருமஞ் செய்வதென்பது இறப்பவும் இளிவந்ததோ ரொழுக்கம்; பிறர் குறிப்பின்றித் தன்குறிப்பு இல்லை எனப்படம ஆகலின்" என்று நக்கீரனார் கண்ட உரையும் இங்குக் கருதற்பாலது. தீங்கு புரிந்தவன்றன்னை - சமணர் வயப்பட்டதனால் அரசன் அவ்வழியே நன்மையைத் தீமையாகக் காண்கின்றான். சேமமுறக் கொண்டுபோகி - மந்திரிகளையும் சேனையையும் அனுப்பித் தரும சேனரைத் தன் முன்புக்குக் கொண்டுவரச் செய்த பெருமுயற்சி கருதி, அவரைத்தனது நேர் காவல்பெற்ற அங்கு நின்றும் கொண்டு போகும்போது அவர் வழியிற்றப்பிவிடாதபடி பாதுகாவல் செய்து கெண்டுபோய் என்றபடி. இந்நாளினும் கொலை முதலிய தண்டத்தீர்ப்பு அடைந்தோரை நீதிவிதித்த மன்றத்தினின்றும். |