பக்கம் எண் :


160திருத்தொண்டர் புராணம்

 

சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் - எப்பரிசு நேரிடினும் எந்தையை ஏத்துவன் என்ற துணிபை, அஞ்செழுத்தினைத் துதிக்கும் வகையால் நிறைவாக்கினர். சிவன் அஞ்செழுத்து - சிவனை உள்ளடக்கிய மகாமந்திரம். "ஆதி மந்திர மஞ்செழுத்து" (திருஞான - புரா - 698) முதலியவை காண்க. சிவனை அடைவிக்கவல்ல - சிவனருளைத் தேடித் தரவல்ல - அஞ்செழுத்து என்பதுமாம். "நற்றுணையாவது", "பாவத்தை நண்ணிநின் றறுப்பது", "நலமிகக் கொடுப்பது", "நல்லக விளக்கது", "நன்னெறி யாவது" என்ற இத்தேவாரத் திருவாக்குக்கள் காண்க. சிவனைக் குறிக்கும் சிகாரமாகிய ஒன்றில் ஒடுங்கிப் பின் ஐந்தெழுத்தாய் விரியும் என்ற நூற்கருத்தும் காண்க. "தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந் தன்மை கண்டு" என்ற திருவாதவூரர் புராணம் காண்க. "இறைசத்தி பாசமெழின்மாயை யாவி, யுறநிற்கு மோங்காரத் துள்" என்பது திருவருட்பயன் (82).

துதிப்பார் - துதிக்கும் வகை "அஞ்செழுத்தை யன்பொடு பற்றியவுணர்வினால்" என்று மேற்பாட்டினிற் கூறுவாராதலின் துதிப்பார் - பாடினார் என முற்றெச்சமாக மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிபுகொள்ள வைத்தார்.

மாகடல் - என்பதும் பாடம்.

125

1391. (வி-ரை.) சொற்றுணைவேதியனென்னும் - சொற்றுணைவேதியன் என்ற சொற்களை முதலில் வைத்துத் தொடங்கும்.

தூமொழி நற்றமிழ்மாலையா - தூமொழி - தூய்மையையுடைய - தூய்மையை விளைக்கின்ற - மொழிகளால் அமைந்த. நற்றமிழ் - நன்மையைத் தருகின்ற தமிழ். தூய்மை செய்தலால் முன்னிருந்த தீமைகளையும் தொடக்குகளையும் எல்லாம் அறநிக்குதலும், நன்மை தருதலால் இனிச் செம்மைத் தன்மை விளைத்தலும் குறிக்கப்பட்டன. முன்னர்த் திருவதிகையை அடைந்து திருவருளால் உணர்வு பெற உணர்ந்து (1334) "கூற்றாயினவாறு" என்ற உரைத்தமிழ் மாலை சாத்தித் துயர் நீங்கப் பெற்றபோதே துன்ப நீக்கமும் இன்பப்பேறும் பெற்றனராயினும், இப்போது அதன் பின்னர் ஈர்த்து வயப்படுத்தி அவ்வின்ப நிலையினை அழிக்க முயன்ற மாயைக்கூட்டங்களின் தொடக்குக்கள் முழுதும் அறவே, முற்றும் செம்மைநெறி சாரவருதலால் இவ்வாறு கூறினார்.

மாலையா - மாலைஆக. ஆக என்பது ஆ என நின்றது மாலையாக - அஞ்செழுத்தைப் பாடினார் என்று முடிக்க.

நமச்சிவாய என்று - நமச்சிவாய என்பதனை ஒவ்வொரு பாசுரங்களின் ஈற்றிலும் வைத்து.

அற்றமுன் காக்கும் அஞ்செழுத்து - அற்றம் - துன்பம் - கெடுதி. எவ்வகைய துக்கம்வரினும் தன்னை எண்ணுவோரை முன்னின்று காவல் புரிவன சிவன் றிருநாம மானஐந்தெழுத் தருண்மந்திரம். முன் - முன்னின்று. முன்நினைப்பினாலே - நினைத்த - எண்ணியபோது என்றலுமாம் . "பாவத்தை நண்ணிநின் றறுப்பது", "நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது" என்ற தேவாரங்கள் தூய்மை செய்து துன்பம் போக்குதலையும், "நலமிகக் கொடுப்பது" என்பது முதலிய திருவாக்குக்கள் நன்மை ஆகச் செய்தலையும் குறித்தன.

"வந்தகூற் றஞ்ச வுதைப்பன", "ஏத்து வார்க்கிடரான கெடுப்பன", "கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத், தல்லல் கெடுப்பன", இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும், அம்மையினுந் துணை", "பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட், கார் வணமாவன", வினைப்பகைக் கத்திர மாவன" (பஞ்சாக்கரப் பதிகம் - காந்தாரபஞ்சமம்) என்றும், "நாம நவிற்றினால் - வார்மது வொப்பது", "இயமன் றூதரு மஞ்சுவர்", "எல்லாத் தீங்கையு நீங்குவர்",