நமச்சிவாயத் திருப்பதிகம -பொது திருச்சிற்றம்பலம்   | பண் - காந்தார பஞ்சமம்  |  
  | சொற்றுணை வேதியன் சோதி வானவன், பொற்றுணை திருந்தடி பொருந்தக்கைதொழக்  கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே.  |  
 
  | பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ; யாவினுக் கருங்கல கருங்கல மரனஞ் சாடுதல்; காவினுக் கருங்கலங் கோட்ட மில்லது; நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.  |  
 
  | விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழ, லுண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை, நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.  |  
 
  | இடுக்கண்பட்டிருக்கினு மிரந்தியாரையும்,விடுக்கிற்பிரானென்று வினவுவோமல்லோ அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாழற்ற, நடுக்கத்தைக்கெடுப்பது நமச்சி வாயவே.  |  
 
  | வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்; அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் ; திங்களுக் கருங் திகழு நீண்முடி ; நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.  |  
 
  | சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால், நலமில னாடொறு நல்கு வானலன் ; குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர், நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.  |  
 
  | வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள், கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும், நாடினே னாடிற்று நமச்சி வாயவே.  |  
 
  | இல்லக விளக்கது விருள் கெடுப்பது ; சொல்லக விளக்கது சோதி யுள்ளது ; பல்லக விளக்கது பலருங் காண்பது ; நல்லக விளக்கது நமச்சி வாயவே.  |  
 
  | முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன், றன்னெறி யேசர ணாத றிண்ணமே, யந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம், நன்னெறி யாவது நமச்சி வாயவே.  |  
 
  | மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன், பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத், தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லியே . திருச்சிற்றம்   |  
  |