யாயின. மாறாட என்பது போல்வனவாக என உவமச் சொல்லாற்றலும்பட வந்தது. உருவும் தொழிலும் பற்றிய உவமமும் தற்குறிப்பேற்றமும் உள்ளுறுதத தன்மையணி. "முகில் முழவ மயில்கள்பல நடமாட" என்றபடி முகிலைக் கண்டபோது மயில்களாடுவது மியல்பாகும். மாறாட - கண்டோர் மயிலோ முகிலோ என்று தடுமாற்றம் அடைய ஆட என்று கொள்வதுமொன்று. "வரைவளர்மாமயி லென்ன மாடமிசை மஞ்சாடும்" (திருநா - புரா - 332). எயிற்குலவு மனம் பதிகள் - வியலகலிடங்கள் பரந்து - பயிர்க்கணயல் வியலிடங்கள் பரந்து - என்பனவும் பாடங்கள். 10 1276. | மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி யறந்தருநா வுக்கரசு மாலால சுந்தரரும் பிறந்தருள வுளதானா னம்மளவோ? பேருலகிற் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு. |
11 (இ-ள்.) வெளிப்படை. பாவத்தை விளைவிக்கின்ற தீநெறிகள் மாறும்படி, திருநீலகண்டராகிய சிவபெருமானுடைய மெய்ந்நெறியறத்தை உலகுக்குத் தரும் திருநாவுக்கரசு நாயனாரும் ஆலாலசுந்தர நாயனாரும் அவதரித்தருள உள்ளது இத்திருநாடு என்றறிவோமாயின், இந்தப் பெரிய உலகத்தில் சிறந்ததாகிய திருமுனைப்பாடி நாட்டின் திறத்தினைப் பாடுகின்ற சீர்ப்பாடு நம்மளவின் அடங்குவ தாகுமோ? (ஆகாது). (வி-ரை.) "திருமுனைப்பாடி வளநாடு" (1267) என்று, நாட்டுச் சிறப்பினைக் கூறத்தொடங்கிய ஆசிரியர் அச்சிறப்புக்களி லெல்லாம் தலைசிறந்ததாய், உடம்பினை ஓம்பும் பயனோடு ஒழியாது உயிரினை ஓம்பி நலந்தருவதாய் உள்ள பெருந் தனிச் சிறப்பினைக் கூறி முடித்துக் காட்டுகின்றார். மறந்தரு தீநெறி மாற - "மீட்பது நின்னெறி யல்லாப் புன்னெறி" (கோயினான் - 24) என்ற பட்டினத்தார் திருவாக்குக் காண்க. தீநெறி என்றது பசுபாசவயப்பட்டனவாகிய எல்லா நெறிகளின் தொகுதி. சிவ அற நெறியல்லாத மற்றியாவையும் மறமாகிய பயனையே தருவன என்பதராம். "திருவீழி மிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே" என்பது நாயனாரின் திருவாக்கு. தீநெறி மாற - நெறி - அறம் - தரும் என்று கூட்டுக. மாற்ற என்பது மாற என நின்றது. "புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி" - (கந்தபுராணம்) என்றதும் காண்க. குளிகை தீண்டியபோது செம்பு பொன்னாதல்போலச், சிவநெறி புகுந்தபோது தீநெறி தானே மாறும் என்றலுமாம். சிவநெறியில் உயிர் நிற்கவே, பசுபோதம் சிவயோதமாகவும், பசு கரணங்கள் சிவகரணங்களாகவும், உயிரைக் கட்டிய பாசம் சிவானுபவத்துக்குத் துணைசெய்யும் நிமித்தமாகவும் மாறுவன என்பது ஞானசாத்திர உண்மை. மணிகண்டர் வாய்மை நெறி அறம் - மணிகண்டர் - திருவருளின் பெருக்கினை உலகுக்கு விளக்கமாக எடுத்துக் காட்டுவது திருநீலகண்டமாகும். தீமை மாற - வாய்மையும், மறம் மாற - அறமும் தரும் என்றார். மறம் தரும் தீ நெறி மாற என்றதனாற் பாசத்தினை நீக்கலும், மணிகண்டர் வாய்மை நெறி தரும் - என்றதனால் சிவத்தினைப் பெறுதலும் ஆகிய இருபயனும் உயிர்களுக்குத் தருதல் எமது பரமாசாரிய மூர்த்திகளிருவருைடைய திருவவதாரப் பயனாம் என்று குறித்தபடி கண்டு கொள்க. நாவுக்கரசும் ஆலாலசுந்தாரும் பிறந்தருள - நாவுக்கரசரை முன் வைத்தது இப்புராண முடையவரான சிறப்பினாலும், காலத்தால் முற்பட்டவராய்த் திருத்தொண்டத் தொகையினுள் சுந்தரமூர்த்திகளாற் றுதிக்கப்பட்டமையாலும் பிறவாற்றாலுமாம். ஆலாலசுந்தரர் - பெயர்க்காரணமும் பிறவும் 32-ல் உரைக்கப் பட்டன. |