பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்195

 

மன்றத்துப்புன்னை - பொது வெளியில் உள்ள பூமரம் கனிமரம் இவைகள் பலராலும் கல்லேறுண்டும் பறியுண்டும் அலைக்கப்படுதல் போலப் பலபல புலனிச்சைகளா லலைக்கப்பட்டு. ஒன்றினால் - மனம் ஒன்றுதலினால். விழுப்பதற்கு - வீழ்ப்பதற்கு - இறக்கச் செய்வதற்கு "விழுப்பதன்முன்" (தேவா). -(9) பிணிவிடா - நோய் நீங்காத. பணிவிடா விடும்பை - பணிசெய்ய விடாத துன்பம். தமக்குப் பணிசெய்யும் பிடிப்பினின்றும் விடாத என்றலுமாம். பாசனம் - பாத்திரம். சுற்றம் என்றலுமாம்.

VII திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

மடக்கினார் புலியின் றோலை மாமணி நாகங் கச்சா
முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேற்
றொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்கு
லடக்கினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே.

1

திருச்சிற்றம்பலம்

முன் பதிகம் முன்னிலையில் "வீரட்டனீரே" என்று செய்யும் அருள் விண்ணப்பம். இஃது படர்க்கை முகத்தால் "வீரட்டனாரே" என்று அவரது அருளை வியந்துரைத்தது. -(2) பாடிய பாணி - கூத்துப்பாட்டு. இப்பாட்டு அவரது கூத்தை ஒரு நாடகம்போல அலங்கரித்துக் கூறுவது. தற்குறிப்பேற்றம். -(3) கொம்பினார் - பெண்கள். வேனற்கோமகன் - மன்மதன். நம்பினார் - அவனை நம்பினவரான தேவர்கள். கோல நீர்மை - காணலாகா வகையதோர் நடலை - உருவங்காண முடியாதபடி எரித்த துன்பம். வெம்பினார் - பகைவர். (4) மறி - மான். செறிபட - நிறைந்து பொருந்த. பொறி - பாம்பின் படம். -(5) நரி ..... இழந்தது - இஃது ஒரு பழமொழி. ஒரு நரி தசைத்துண்டத்தை வாயிற் கௌவிக் கொண்டு ஆற்றைக் கடந்தபோது, ஆற்றினுள் பிறழ்ந்த வரால்மீனைக் கண்டு, அதனைக் கௌவச் சென்றதனால் வாயிலிருந்த தசைத் துண்டத்தை யிழந்தது போல வேறொன்றிற் பற்றும் ஆசையினால் முன்கிடைத்த பற்றினை இழத்தல். மால்கொள் .... செய்வார் - வேறொரு பற்றினைப் பற்றும் ஆசைகொடுத்து, (முன் மயக்கத்தாற் பற்றியதொரு பற்றினை) விடும்படி செய்பவர். -(6) புள் - கழுகு முதலியன. அலைத்து உண்ட ஓடு - கொத்தி நிணம் தின்று கழித்த மண்டை ஓடு. பலாசம் ... சுடலை - பலாசங் கொம்பின் எரிந்த துண்டங்கள் கிடக்கும் மயானம். துள்ளலை ஏற்றுப் பாகன் - துள்ளும் இடப ஏற்றினை ஊர்பவன். அள்ளல் - சேறு; பிறவிச் சேறு. வெண்ணீறணிந்தவர் - என்னை ஆளும் வீரட்டனாரே என்று முடிக்க. -(7) கூறிட்ட - கூறினர். சொற்பின்வருநிலை. கூறு - பாகம். கூறுதல் - சொல்லுதல். ஆறு - அங்கம். நான்கு - வேதம். கீறு இட்ட - கீற்றுப்போன்ற, ஆறிட்டு முடிப்பர் - கங்கையாற்றினை உள்வைத்துச் சடையினை முடித்துக் கட்டுவர். -(9) நாணிலாரைவர் - ஐம்பொறிகள் தீமைசெய்யக் கூசாமையின் நாணிலார் என்றார். இப்பாட்டு இறைவன் உயிர்களுடன் பிரியாது உடனிருக்கும் தன்மை, (ஆயினும்) காணலாகாத் தன்மை, உயிர்களுக்குத் தனுவைக் கொடுத்து, வினைகளை நுகரச்செய்து கழிப்பிக்கும் அருட்டன்மை, முதலிய இறைவனது உபகாரமும் இலக்கணமும் கூறிற்று. -(10) ஆர்த்த வாயினால் அன்றே அலறும் படி செய்தனர். இப்பதிகத்தில் கெடிலவேலி - பழனவேலி - வேலி - சூழவுள்ளது என்ற பொருளில் வந்தது.

VIII திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

முன்பெலா மிளைய கால மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்