| பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ள மன்பனாய் வாழ மாட்டே னதிகைவீ ரட்டனாரே. |
1 திருச்சிற்றம்பலம் முன்பெலா மிளைய காலம் .... கருத்தழிந்து - இது நாயனார் சமணத்தினின்றும் சைவம் புகுந்தபோது வயது முதிர்ந்திருந்த நிலையைக் குறிப்பாலுணர்த்திற்று. "பின்பக லுணங் கலட்டும் பேதைமார்" போன்றேன் - பழமொழி. பசித்துக் கழிந்த முன்பகலெல்லாம் வீண் பேச்சிற் போக்கி மாலையில் அடிசில் சமைக்கும் பேதையர். உணங்கல் - சோறு. (2) பெருங்கடல் - வரையுச்சி - தாழ்வும் உயர்வும் குறித்தன. அனைத்தும் - தாழ்வும் உயர்வும் - (துன்ப இன்பங்கள்) ஆகிய உலக நுகர்ச்சிகள். -(3) ஏதம் - குற்றம். ஆதன் - அறிவில்லாதவன். பரிசிலேன் - பரிசு - தன்மை. -(9) மந்திரம் - மலை. சிந்திரம் ஆக - நன்மையாக. சிந்துரம் - சிவப்பு என்று கொண்டு கொழுந்தோடு கூட்டி உரைப்பாரு முண்டு. கந்திரம் - இசை. -(10) மைஞ்ஞலம் - மெய்ஞ்ஞரம்பு - கைஞ்ஞரம்பு - நகரம் ஞகரமாக வந்தது எழுத்துப்போலி. எழுவிக்கொண்டு - வீக்கி. கின்னரம் - கீதம். சாமகானம். IX திருச்சிற்றம்பலம் | திருவிருத்தம் |
| மாசிலொள் வாள்போன் மறியு மணிநீர்த் திரைத்தொகுதி யூசலை யாடிங் கொண்சிறை யன்ன முறங்கலுற்றாற் பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே. |
1 திருச்சிற்றம்பலம் முதல் மூன்று பாசுரங்கள் எந்தையார் இருக்கும் திருவீரட்டம் என்ற கோயில் கெடில வடகரையில் உள்ளது என்று கெடிலத்தின் செழும்புனற் சிறப்புடன் கூறுவன. எந்தை - வீரட்டம் - கெடில வடகரைத்தே என்க. கரைத்து - கரையில் உள்ளது. ஏகாரங்கள் தேற்றம் - (4) யானுடையச் சில்குறை வேண்டுகின்றது ஒன்றுளது - அஃது திங்கட் குழவி(யை) எப்போதும் குறிக்கொண்மின் என்பது. குறை - விண்ணப்பம்; திங்கட்குழவியைப்போல வந்தடைந்தாரை எப்போதும் காத்தளிக்குதிர் என்பது குறிப்பு. -(5) பாவவேதனை - நிற்பித்திடுகின்றதால் என்று கூட்டுக. ஆர் அட்டதேனும் - இன்னார் என்று அறியப்படாத இழிந்தவரால் சமைக்கப்பட்ட சோறாயினும். வேரட்ட - நிலையாக. வேர் - வியர்வு எனக் கொண்டு வியர்வு சொரிய என்றலுமாம். நிற்பித்திடுகின்றது - நிற்கும்படி செய்கின்றது. இறைவனை எண்ணாதாரே பிச்சையேற் றுண்டுழல்வர் என்பது. "சிதவல் சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போரும் ... அல்லாப் படிறருமே" என்றது (பொன்வண் - அந் - 12) காண்க. -(6) அடைந்தார் ... நாமங்களே - நடலை - துன்பம். அவர் நாமங்கள் துன்பம் போக்கும் துணையாவன. நாமம் - ஐந்தெழுத்து. நடலைக்கு நற்றுணை - நோய்க்கு மருந்து என்பது போல நான்காம் வேற்றுமை பகைப்பொருளில் வந்தது. - (10) காளங்கடந்தது - விடத்தை வென்றது. மாதிற்கு நன்கிசைந்த - வேடங்கள் என்று கூட்டுக. X திருச்சிற்றம்பலம் | அடையாளத் திருத்தாண்டகம் |
| சந்திரனை மாகங்கைத் திரையான் மோதச் சடாமகுடத் திருத்துமே; சாமவேதக் கந்தருவம் விரும்புமே; கபால மேந்து கையனே; மெய்யனே; கனக மேனிப் பந்தணவு மெல்விரலாள் பாக னாமே; பசுவேறு மே;பரம யோகி யாமே யைந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே; யவனாகி லதிகைவீ ரட்டனாமே. |
1 திருச்சிற்றம்பலம் |