XII திருச்சிற்றம்பலம் | திருவடித் திருத்தாண்டகம் |
| அரவணையான் சிந்தித் தரற்றும் மடி; யருமறையான் சென்னிக் கணியா மடி; சரவணத்தான் கைதொழுது சாரும் மடி; சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணா மடி; பரவுவார் பாவம் 1பறைக்கும் மடி; பதினெண் கணங்களும் பாடும் மடி; விரவுநீர்த் தென்கெடில நாடன் னடி; திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி. |
திருச்சிற்றம்பலம் பறிக்கும் - என்பது பாடம். திருவடியின் தன்மைகளைப்பற்றித் துதிக்கின்றமையால் இப்பெயரால் வழங்கப்படும். அடி என்பது திருவருணிறைவு; உபசாரம். -(1) அரவணையான் - திருமால். சிந்தித்தரற்றும் "நாகப் பள்ளிகொள் வானுள்ளத் தான்." அருமறையான் - பிரமதேவன். சரவணத்தான் - முருகக்கடவுள்; கைதொழுது சாரும் - திருச்சேய்ஞலூரிலும் திருச்செந்திலிலும் முருகப்பெருமான் சிவபூசை செய்த வரலாற்றைக் கந்த புராணம் பேசும் - (2) குறைந்தடைந்தார் - வணங்கி விண்ணப்பிப்பவர். -(3) வைதெழுவார் காமம் பொய் போகா - கைதெழுதல் - குற்றங்கள் போலக் கூறிப் போற்றும் வகை. "குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும், வணங்கி வாழ்த்துவ ரன்புடையாரெலாம்" (கடம்பூர் - 6) என்ற குறுந்தொகையும், "மழைதரு கண்டன் குணமிலிமானிடன் றேய்மதியன், பழைதரு மாபரனென்றென் றறைவன் பழிப்பினையே", "பிச்சனென் றேசுவனே" (நீத் - விண் - 46 - 49) என்ற திருவாசகமும் முதலியவை காண்க. காமம் - விரும்பியவை. பொய் போகாமையாவது விரும்பியவாறே பெறுதல். இனி, இவ்வாறன்றி, வைதெழுவார் - என்றதற்கு, "அல்லார் புறங்கூற", "நிச்சம் மலர்தூற்ற", "வசவுணும்" என்றபடி சமணர் முதலாகப் பழிக்கின்ற பிறர் என்று பொருள் கொண்டு, காமம் பொய்போகா என்றதற்கு, அவர்களது தீமை பொய்க்காது அவர்களையே சார என்று உரைப்பினுமமையும். கணக்கு வழக்கு - கணக்காலும் வழக்காலும் அளவுபடுதல். நாம் தொழுதேத்தி நெய் ஆட்டும் - என்க. ஊடறுத்து - அளவுகடந்து மேற்சென்று. -(4) பிழைத்தார் பிழைப்பறிய - பிழை செய்தவர்களுடைய பிழையை அறிய. (6) திருமகட்குச் செந்தாமரை - நிலையாகத் தங்குமிடம். உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வா - பெண்ணுருவும் ஆணுருவும். -(7) அரைமாத்திரையி லடங்குதல் - பிரணவத்தின் இறுதி மகரவொற்றாகிய அரை மாத்திரை ஒலியினுள் ஒடுங்குதல். அகல - மளக்கிற்பா ரில்லா - (ஆயினும்) தன் அகலத்தை அளக்க வல்லவர்களில்லாத. XII திருச்சிற்றம்பலம் | காப்புத் திருத்தாண்டகம் |
| செல்வப் புனற்கெடில வீரட் டமுஞ் சிற்றேமமும் பெருந்தண் குற்றா லமுந் தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூ டலுந் தென்னானைக் காவுஞ் சிராப் பள்ளியு நல்லூருந் தேவன் குடி மருகலு நல்லவர்க டொழுதேத்து நாரை யூருங் கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக் கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே. |
திருச்சிற்றம்பலம் இவை இவை இறைவனுடைய காப்புக்களே என்று பாசுரத்தோறும் முடிவடைவதால் இப்பெயர் பெற்றது. காப்பு - காவல் புரிவது - காவலுள் நிற்பது. ஆகுபெயராய்க் காக்கப்படும் தலம் குறித்தது. ஒவ்வொரு பாசுரமும் கெடில வீரட்டமும் இன்னும் சில தலங்களும் என்று தொடங்குதலால் இத்திருப்பதிகம் திருவதிகைத் தேவாரங்களுள் தொகுக்கப்பட்டது. செல்வப் புனல், சிறையார் புனல், தீர்த்தப்புனல், (தீர்த்தம் - தூய்மை) என்று பலவும் கெடிலத்தின் நீர்ச் |