பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்203

 

லும், மாத்து - அறியாமை என்றலுமாம். தர்மா - நான் அறிவேன் என்ற தமது ஆணவத்தால். ஏமாப்பு - அரண், இன்பமென்றலுமாம். -(2) சந்தி - மூன்று சந்தி காலம். சமாதி - அழுந்தியறிதல். அந்தியான். அழகிய தீயின் உருவுடையான். அழகன் - தலத்துச் சுவாமிபெயர். சிந்தியாதவர் தீவினையாளர் - "சேரா தார் தீநெறிக்கே சேர்கின் றாரே" (மிழலை - தாண்), -(3) காமாத்தம் - காமம் - ஆத்தம் - காமம் - தீய இச்சைகள். ஆத்தம் - ஆப்தம், உற்றது, நன்மை தருவது போமாற்றை என்பது எதுகை நோக்கிப் போமாத்தை என நின்றது. -(4) வஞ்ச ஆறுகள் - வஞ்சித்து உயிரை ஈர்க்கும் புலன்களாகிய வழிகள். ஆறு - வெள்ளம் என்றதும் குறிப்பு. -(5) இராமனும் வழிசெய் ஈசன் - இராமன் வழிபட்டது தலவரலாறு. -(6) உண் முயறல் - மனத்துள் அழுந்த வைத்துக் கூடுதல். -(7) குழற்கோலச் சடை - குழல் - அம்மை பாகத்து முடி. குழல் கோவலமாகக் கலந்தசடை. குழலும் சடையும் என்றலுமாம். ஓர் ஆற்றினான் - சடையில் கங்கையாற்றை வைத்தவன். "சலந்தாழ் சடைவலந் தண்ணங்குழலிடஞ் சங்கரற்கே" (பொன். அந். 65), -(8) கண்ணிற் பாவையன்னான் - கண்ணின் மணியினுள் பாவை போன்றவன். "கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய்" (தாண்), "கருமணியிற் பாவாய்நீ" (குறள்).-(9) மீண்டரோடு எனைவேறுபடுத்து - ஓடு - நீக்கப்பொருளில் ஐந்தனுருபின் பொருளில் வந்தது. நாயனாரது சரிதக் குறிப்பு. உயக்கொண்ட - உய்யும்படி ஆட்கொண்டருளிய. வீரட்டம் - திரு அதிகை - (10) விடலை - மூர்க்கன். இடமதாகக்கொண்டு - கொண்டு - கொடுத்து - வைத்து.

II திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

வண்ணங்க டாம்பாடி வந்துநின்று வலிசெய்து வளைகவர்ந்தார் வகையா னம்மைக்
கண்ணம்பா னின்றெய்துகனலப்பேசிக்கடியதோர்விடையேறிக்காபாலியார்
சுண்ணங்க டாங்கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத்தோன்ற
வண்ணலார் போகின்றார் வந்து காணீர்! அழகியரே யாமாத்தூ ரைய னாரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- அழகியராகிய இறைவனது காட்சியில் ஈடுபட்ட தலைவி கூற்றாக அகப்பொருட் டுறையில் அமைந்தது இத்திருப்பதிகம். கனவிடைத் தலைவனைக் கண்டு மனங்கொடுத்து மால்கொண்ட தலைவி, கனவிழந் துரைத்தல் இத்துறையின் கருத்து. "இடுமின் பிச்சை!" என்றாருக் கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்; பட்டிமையும் படிறுமே பேசுகின்றார்; பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின்றார் தாம்; அல்லலே செய்தடிகள் போகின்றார்தா மழகியரே!; அண்ணலார் போகின்றார் வந்து காணீர்! - என்பன காண்க. சிவன்பால் ஈடுபட்டுப் பசுத் தன்மையிழந்த உயிரின் உயர்நிலை குறித்தது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வண்ணம் - ஒரு பாவின்கண் நிகழும் ஓசை விகற்பகம். (தொல் - பொரு. 313). சந்தப்பாட்டு - இசைப் பாட்டு என்றலுமாம். வலிசெய்து வளைகவர்தல் - மால் செய்தலால் உடல் இளைக்கும் - வளை கழலும் என்பது. "இன வெள்வளை சோரவெ னுள்ளங் கவர் கள்வன்" (பிள்ளையார் - பிரமபுரம் - நட்டபாடை 3). கனலப் பேசி - இச்சைநோய் மீதூரும்படி பேசுதல். "படிறே பேசி" (6) பட்டிமையும் படிறுமே பேசுகின்றார். (3). "உள்வெந் நோய் செய்தார்" (தேவா.) கடியது - கடிய நடையுடையது. வேண்டு நடைநடக்கும் வெள்ளேறு" (திருவெண்காடு - தாண் - 1). சுண்ணங்கள் - திருவெண்ணீறும் சாந்தமும் குறித்தது. அழகியரே - பெயரால் மட்டு