பக்கம் எண் :


254திருத்தொண்டர் புராணம்

 

இக்கருத்துப்பற்றியே "பாலனாய் விருத்த னாகி" என்று மேல் 10-வது பாட்டில் அருளுவதும் காண்க. இது விருத்த குமார பாலரான திருவிளையாடலைக் குறிக்குமென்று கூறுவாருமுண்டு. -(10) ஞாலமாம் தில்லை - "எப்வுவனங் களுநிறைந்த திருப்பதி" (1444). நீலஞ்சேர் கண்டனார் - முதற்பாட்டில் "நஞ்சடை கண்டனாரை" என்ற கருத்தையே முடித்துக்காட்டியபடி. இக்குறிப்பெல்லாம் பெற ஆசிரியர் "களனிற் பொலிவிட முடையார் நடநவில் கனகப்பொது" (1430) என்று, கண்டபோதே நாயனார் காணும் காட்சியாகக் காட்டுதல் காண்க. -(11) நெதியன் - நெதி - தீமை - "அருநெதி நல்ல நல்ல" (கோளறுபதிகம்). அதிசயம்போல - அதிசயமாக - நிலாவெறிக்க எரியாடுதலும், காணலாகாப் பெரியான் காணுமாறு சிற்றம்பலத்தாடுதலும் அதிசயம் என்றபடி. அதிசயம் பொலிய - என்று பாடக்கொள்வாருமுண்டு.

1442. (வி-ரை.) உகக்கடையில் - என்க. மிதந்த - ஒவ்வோருகமுடிவிலும் வரும் பெரு நீர் வெள்ளத்தினுள் மூழ்கிவிடாது மேல் மிதந்ததாதலின் இந்நகர் தோணிபுரம் எனப்படும்.

கழுமலம் - சீகாழியின் பன்னிரண்டு பெயர்களுள் இறுதியாய்ப் போந்த பெயராகும். ஒவ்வோருகங்களிலும் ஒவ்வொரு காரணம்பற்றி இத்திருநகருக்கு ஒவ்வொரு பெயர் போதரும். "கழுமலமாந் திருப்பதியை" (257) என்றவிடத்துரைத்தவை பார்க்க. கடையுகத்தில் - மிதந்த - திருக்கழுமலம் என்றதனால் இப்பெயர் இந்நகருக்குக் கடைசியாய்ப் போந்த பெயர் என்பதும் குறிப்பிட்டனர். கழுமலம் - இந்தப் பெயராலே நாயனார் இங்குத் திருவிருத்தப் பதிகங்கள் கட்டளையிடுவதும், "பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம், நாலைஞ்சு புள்ளின மேந்தின" என்ற பதிகத் தொடக்கம் கடையுகத்தில் மிதந்த செய்தியினை வெளிப்படுப்பதும் குறித்தபடியாம்.

விடையுகைத்தார் திருவருளால் - "விடையேறி" வெளிவந்து அருளியதனைப் பிள்ளையார் தமது முதற்றிருப்பதிகத்தின் முதற்பாட்டில் தேற்றமாக முதலிற் குறிப்பிடுகின்றதனைக் குறிப்பிட்டபடி.

திருவருளால் - ஊட்ட என்று கூட்டுக. "இறையவர் தாம் - மலைக்கொடியைப் பார்த்தருளித் துணைமுலைகள், பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத் தூட்டென்ன?" என்பது (திருஞான - புரா - 66)ஸ்ரீ கண்க. தோணியப்பனார் அருளியபடி அம்மையார் ஊட்டினர்.

திருமுலைப்பாலோடும் - சிவம் பெருக வளர் ஞானங் குழைத்து - "திருமுலைபொன் வள்ளத்துக் கறந்தருளி" (67), "எண்ணரிய சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி" (68) என்பன ஆளுடையபிள்ளையார் புராண வரலாறுகள்.

அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் - சிவஞானம். அடைய - முழுவதும். உயிர்கள் வந்த அடைந்துய்யும்படி என்றலுமாம். "தாவில்சரா சரங்களெல்லாம், சிவம் பெருக்கும் பிள்ளையார்" (திருஞான - புரா - 26). எல்லாவுலகங்களும் சிவநெறி பெருக்கிய தன்மை பிள்ளையாரது சரிதத்தின் பல பகுதிகளிலும் கண்டு கொள்க. சைவ வுலகம் திருநீற்றுச் செல்வம் பெற்று வாழ்வடைவதும், பனைகளும் சிவமே மேவியதும், திருமணங் காணப் பெற்றாரெல்லாம் சிவம் பெற்றதும், பிறவும் கருதுக.

உடையபிள்ளையார் என்க. உடைய - ஆளுடைய. திருவார்த்தை - அவதரித்து ஞானம் பெற்றதும். ஓசையுடைய பொன் தாளம் பெற்றதும், சிவிகை பெற்றதும் என்ற இப்பெருமைகள். "மாசின்மணியின் மணிவார்த்தை" என்ற திருவாசகமும், "திருவார்த்தை" என்ற திருவாசகப்பகுதியும் காண்க. திரு - ஆண்டவனது, வார்த்தைக்குள்ள அருமைப்பாடு, பிள்ளையாரைப்பற்றிய வார்த்தைக்கு முரியது என்றபடி.