பக்கம் எண் :


256திருத்தொண்டர் புராணம்

 

1444. (இ-ள்.) அப்பொழுதே ... அருள்முன் பெற்று - அப்பொழுதே திருவம்பலத்திலே அருட்கூத்தியற்றுகின்ற திருவடியை வணங்கிக் கூத்தனாரது திருவருள் விடையை முன் பெற்றுக்கொண்டவராய்; பொய்ப்பிறவிப்பிணி ... போந்தே - பொய்யாகிய இப் பிறவிநோயை ஒட்டுந் தன்மை வாய்ந்த திருவீதியினைத் திருமேனி நிலத்திற் புரளப் புரண்டு வலமாக வந்து சென்றே, பின்; எப்புவனங்களம் ... இறைஞ்சி ஏத்தி - எல்லா உலகங்களிலும் நிறைவுடையதாகிய அத்திருப்பதியினது திருவெல்லையினைப் பணிந்து துதித்து; செப்பரிய பெருமையினார் ... பாடிச் செல்வார் - சொல்லுதற்கரிய பெருமையையுடைய சிவபெருமானது திருநாரையூரினைச் சேர்ந்து பணிந்து மற்செல்வாராய்.

79

1445. (இ-ள்.) தொண்டர் குழாம் புடைசூழ - திருத்தொண்டர்களது கூட்டம் தம்மைச் சுற்றிலும் சூழ்ந்துவர; தொழுத கரத்தொடு ... பொழிந்து காட்ட - அஞ்சலியாகக் கூப்பிய கைகளுடனே, திருநீற்றினால் நிறைந்த திருக்கோலமானது கண்டவர்களது மனங்களெல்லாம் கரைந்து உருகும் கருணையானது வெளியே மேற்பொழிந்து காட்ட; தெண் திரைவாய் கல்மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் - தெள்ளிய அலைகளையுடைய கடலில் கல்லே மிதப்பாக ஊர்ந்து கரையேறிய திரநாவுக்கரசர் பெருமானும் : வண்தமிழால் எழுதும்மறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் - வளப்பமுடைய தமிழினாலே, எழுதும் வேதத்தைச் சொல்லியருளிய திருஞானசம்பந்த நாயனாருடைய சீகாழித் தலத்தின் பக்கத்தில் வந்து சார்ந்தார்.

180

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1443. (வி-ரை.) "இவன் எம்மான்" என - விடம் உண்டவரைக்காட்டியியம்ப - என்க.

காட்டி இயம்பிய வரலாறு - ஆளுடையபிள்ளையார் புராணத்துள் 73 - 76-ம் திருப்பாட்டுக்களிற் கூறப்படுவது.

அமுதம் உண்டபோதே - விடம் உண்டவரைக் காட்டி - என்றது முரண் அணி. உண்டபோதே - அப்பொழுதே - என்று காலத்தையும், உண்டதனால் என்று காரணத்தையும் குறித்தது.

கேட்டலுமே - காதல்கூர - கேட்டவுடன். காதல் எழுவது தலையன்பின் இலக்கணமாகும். சிவபெருமானிடத்திலும் அவர் அடியாரிடத்திலும் நாயனார் வைத்திருந்த ஆழ்ந்த அன்பின்றிறம் வெளிப்பட்டவாறு.

அதிசயமாம் காதல் - முன் அதிசயமாம்படி (1441) என்றது ஆண்டவனது அருட்காட்சியாலாகியது; அது கண்டபோது விளைந்தது இங்குக் கூர்ந்தது அது போலவே அடியார் திறங்கேட்டதனாலாகியது; அதனின்மிக்க உள்ளநிகழ்ச்சி.முன் அதிசயமாம்படி என்ற ஆசிரியர் இங்கு அதிசயமாங் காதல்கூர என்று விதந்துகூறிய நயமும் இக்கருத்துப்பற்றிது.

ஏழ் இசை - வண் தமிழ்மாலை - காட்டி யியம்ப வல்ல - தமிழியலின் சிறப்பும், இசைச் சிறப்பும், (நாடகத்தமிழ் இயல்பின்) காட்டுதலாகிய பொருளின் சிறப்பும் குறிப்பித்தபடி காண்க.

காட்டி இயல்ப வல்ல - பிறராற் காணுதற்கெட்டாதவரைக் காட்டுதலும், பிறரால் இயம்புதற்கரியவரை யியம்புதலும் வல்ல என்க. வல்ல என்றது. அவ்வறினருமை குறித்ததனோடு, பிள்ளையார்க்கு அதன் எளிமையும் குறித்து நின்றது.