"கோயில் வாயிற் றிசைநோக்கிக் கைதொழுதான்" (திருஞான - புரா - 475) என்றவாறு காண்க. நீறுதுதைந்த கோலம் - துதைதல் - மிகுதியாய் நிறைய அணிந்திருத்தல். "தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும்" (1405); "விருப்புறுமேனி கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாட" (1436) முதலியவை காண்க. கோலம் கண்டவர்தம் மனம் கசிந்து கரைந்துருகும் கருணை புறம் பொழிந்து காட்ட - கோலம் உள் நிறைந்த கருணையைப் புறம்பு பொழிந்து காட்டிற்று; ஆதலின் அதனைக் கண்டவர்களது மனம் கசிந்தன; பின் கரைந்தன; பின் உருகின என்க. "இந்தக் கருணை கண்டால்" (1406) என்று திருவதிகைத் திருவீதியில் நாயனாரைக் கண்டவர்கள் உரைத்த செய்திபோல நாயனாரது திருக்கோலங் கண்டவர் யாவர்க்கும உண்ணிறைந்து வழிவதுபோன்ற அவரது கருணையே தேற்றமாகப் புலப்பட்டது. அதனால் கண்டவர்கள் யாவரும் மனங்கசிந்து உருகினர். கருணை வரையறையின்றி எவ்லாவுயிர்களின் மேலும் செல்லும் இரக்கம். புறம் பொழிதலாவது - கருணை என்ற மன நிகழ்ச்சி புறத்திற்காணும்படி மெய்ப்பாடுகளை உண்டாக்குதல். "திருமேனி தன்னி லசைவும்" முதலாயின உள்ளிருக்கும் அன்பினை வெளிப்படுப்பன. தெண்திரையில் ... தாமும் - வண்தமிழால் ... மொழிந்த பிரான் - இருவரும் திருவருள் பெற்ற பெரியவர்கள் என்பது குறிக்க இவ்வாறு கூறினார். பிரான் போலவே தாமும். தாமும் - உம்மை இக்குறிப்புப்பற்றியது. "பொங்குகடற் கன்மிதப்பிற் போந்தேறு மவர் பெருமை, யங்கணர்தம் புவனத்தி லறியாதார் யாருளரே?" (அப்பூதி - புரா - 15) என்று அப்பூதிநாயனார் அறிந்தவாறு தேற்றப்பட உலகமறிந்தபடி நாயனாரது பெருமை இஃது. ஆளுடையபிள்ளையாரது சிறப்புக்களில் முதலில் தேற்றப்படத் தந்தையாரும், அதுகொண்டு பின்னர் உலகரும் அறிந்தது அவரது தெய்வத் திருமறைத் திருவாக்கேயாகும். "வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடுங், கூறு மருந்தமி ழின்பொருளான குறிப்போர்வார்" (திருஞான - புரா - 85). ஆதலின் இவ்விரண்டினையும் உடன் கூட்டிக் கூறினார் என்க. வண்தமிழ் - அந்நாட்பயந்த பயன்களை, இந்நாளும் வேட்டவர்க்கு வரையாது கொடுக்கும் வள்ளன்மையுடைய தமிழ். தமிழால் எழுதுமறை மொழிந்த பிரான் - இறைவனது திருவாக்காகிய வேதங்கள் என்னும் எழுதா மறைகளின் பொருள்களை எழுதும் மறையாகத்தமிழால் அருளியவர். "விருப்புடன் பாட லிசைத்தார் வேதந் தமிழால் விரித்தார்" (திருஞான - புரா - 289) முதலியவை பார்க்க. நான்மறை எனப்படுவன தமிழிலே முன் இருந்தன என்பது புதியகொள்ககை. அஃது ஆசிரியர் முதலிய முன்னோர்களது கருத்தன்று என்பது. சார்ந்தார் - நாயனார்தாம் சாரத்தக்க சார்பாகக்கொண்டனர் என்பதுகுறிப்பு. தெய்வமறை - என்பதும் பாடம். 180 1446. | நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளி நேரே முன்னாள் ஆண்டவர செழுந்தருளக் கேட்டருளி யாளுடைய பிள்ளை யாருங் காண்டகைய பெருவிருப்புக் கைமிக்க திருவுள்ளக் கருத்தி னோடு மூண்டவருள் மனத்தன்பர் புடைசூழவெழுந்தருளிமுன்னே வந்தார். |
(இ-ள்.) நீண்டவரை வில்லியார் - பெரிய மேருமலையை வில்லாகவுடைய இறைவர்; வெஞ்சூலை ... கேட்டருளி - வெவ்விய சூலைநோயினைக் கொடுத்தருள் செய்து முன்னாளில் நேரே ஆடகொண்டளிய அரசுகள் எழுந்தருளுகின்றார் என்ற செய்தியினைக் கேட்டருளி; ஆளுடைய பிள்ளையாரும் ... கருத்தினோடும் - ஆளுடைய பிள்ளையாம் அவரைக் காணும் தகைமையதாகிய பெருவிருப்பம் மிக |