பக்கம் எண் :


260திருத்தொண்டர் புராணம்

 

மேலோங்கிய திருவுள்ளக் கருத்தினையுடையவராய்; மூண்ட ... எழுந்தருளி - அருள் மூண்ட மனத்தினையுடைய அன்பர்கள் பலரும் தம்மைப் புடைசூழ்ந்துவர எழுந்தருளிவந்து; முன்னே வந்தார் - முன்னர் வந்தருளினார்.

(வி-ரை.) நீண்டவரை - மேரு. நீண்ட - பெருமையால் நீளமுடைய. வெஞ்சூலை ... ஆண்ட அரசு - சூலை அருளுருவமானதால் அதனை மடுத்து ஆட்கொண்டதனைப் பெரிய பேறாகக் கருதியருளினார் ஆளுடைய பிள்ளையார். "அருள் பெருகு சூலையினா லாட்கொள்ள வடைந்துய்ந்த" (அப்பூதி - புரா - 16) என்று நாயனார் தமது கருத்தாக இதனையே தமக்குக் கிடைத்த பேறாகக் கூறுவதும் காண்க. மடுத்தல் - பெருகக் கொடுத்தல். இறைவன்பால் நேசம் செலச் செய்யும் எவ்விதஇடுக்கணும் துன்ப முதலியவையும் அவனது அருளுருவமாகவே காணத்தக்கன என்பது பெரியோர் துனிபு.

காண்தகைய பெருவிருப்பு - எதிர்சென்று கண்டு வணங்கிக் களிக்கும் பேறு கிடைத்ததனால் நேர்ந்த விருப்பம். "ஆக்கிய நல்வினைப் பேறென்று எதிர்கொள" (திருஞான - புரா - 269) பார்க்க.

கைமிக்க - கைகூடும் என்பது போலக், கை என்பது உறதிப்பாடு குறிக்கும் முன்மொழி. உபசர்க்கம் என்பர் வடவர். கை - ஒழுங்கு - ஒழுக்கம் என்பாருமுண்டு. அருள் முண்டமனத்து அன்பர் - என்க. தம்மைப்போலவே விருப்பமுள்ள மனத்தன்மையைத் திருவருளால் அவ்வாறே பெற்ற அடியார்கள். இவர்கள் பிள்ளையாருடன் சேவித்து இருந்தவர்கள்.

முன்னே வந்தார் - எதிர் கொண்டு சென்றனர். "விண்டோழிந்தன நம்வினை ... மெய்த் தொண்டரோ டினிதிருந் தமையாலே" (திருவலஞ்சுழி - 2) என்பது பிள்ளையாரது அருட்குறிப்பினைக் காட்டும் திருவாக்கு. "மெய்க்காதற் றொண்டர் திருவேடம்" (திருஞான - புரா - 271) பார்க்க.

181

1447.

தொழுதணைவுற் றாண்டவர சன்புருகத் தொண்டர்குழாத் திடையே சென்று
பழுதில்பெருங் காதலுட னடிபணியப் பணிந்தவர்தங் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க்கையா லெடுத்திறைஞ்சி விடையின்மேல் வருவார் தம்மை
யழுதழைத்துக் கொண்டவர்தா "மப்பரே" யெனவவரு "மடியே" னென்றார்.

182

(இ-ள்.) விடையின் மேல் வருவார் தம்மை அழுது அழைத்துக் கொண்டவர் தாம் . இடபத்தினை ஊர்தியாகக் கொண்டு எழுந்தருளும் சிவபெருமானை, அமுது அழைத்துத் தம்முன் வெளிப்பட்டுவரக் கொண்ட ஆளுடையபிள்ளையாரும்; தொழுது அணைவுற்று - (எதிர் கொள்ள வந்தவர்) தொண்டர் திருவேடத்தினைத் தொழுது எதிரில் அணைதலுற்ற; ஆண்ட அரசு அன்பு உருகத் தொண்டர்குழாத்து இடையே சென்று பழுதுஇல் பெரும் காதலுடன் அடிபணிய - ஆளுடைய அரசுகள் தம்மைச் சூழ்ந்த தொண்டர் கூட்டத்தினிடையேபோய், அன்பின் பெருக்கினாலே உள்ளுருகப் பழுதில்லாத பெரிய அளவிடற்கரிய காதலுடன் தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்க; பணிந்தவர் தம் கரங்கள் பற்றி எழுதரிய மலர்க்கையால் எடுத்து - அவ்வாறு அடி வீழ்ந்து பணிந்த அவருடைய திருக்கரங்களைப் பற்றிக்கொண்டு படி எழுதுதற்கரினவாகிய மலர் போன்ற