இருவரும் ஒன்றுபோலச் சிறப்புடையதலாலும், நாயனார் பிள்ளையார் கழல் வணங்க வந்தாராக, அவ்வாறே பிள்ளையாரும் நாயனாரைக் கண்டு தொழ எழுந்தருளி முன் வந்தாராக, இத்தன்மையால் இவரொடு இவர் கூடினார் எனக்கூறலாமையாதாலானும் இவ்வாறு கூறினார். இக்கருத்தையே தொடர்ந்து மேல்வரும் பாட்டில் விரித்து "ஒருவரொரு வரிற்கலந்த உண்மை" என்று பாராட்டிய திறமும் காண்க. கூட்டம் - கூடிய நிகழ்ச்சி. இயைதல் - உணர்ச்சியில் ஒன்றாய் நயந்து கலத்தல் குறித்தது. "ஆரூரர் தாமுந் தொழுது கலந்தனரால்" (வெள் - சருக் - 19), "இவர்கள் தந்த மணிமே னிகள்வேறா மெனினு மொன்றாந் தன்மையராய்" (மேற்படி 20), "ஒருவரொரு வரிற் கலந்து" (மேற்படி 21) என்பனவும், "கலந்துநின்னடியாரோடு" என்ற திருவாசகமும், பிறவும் காண்க. "நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழா, னேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின்மிழிலைக், கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே" (11-ம் திருமுறை - ஆளு - பிள் - அந் - 80) என்று இக்கருத்தையே நம்பியாண்டார் நம்பிகள் எடுத்துக் காட்டினதும் காண்க. சிவம்பெருகும் ஒலி - அரகர முழக்கம். அடியார்கள் சிவானந்தம் மேலிட்டபோது அரவோசை முழக்குதல் சைவமரபு. உலகமெல்லாம் - கூத்தப்பெருமான் இப்புராணம் தொடங்க எடுத்துக் கொடுத்த முதல். இந்நிகழச்சியின் அருமை குறிக்க இங்கு அதனைப் பொறித்தனர் ஆசிரியர். "உருகுகின்றது போன்ற துலகெலாம்" (454), "ஓதி யேறினாருய்ய வுலகெலாம்" (திருஞான - புரா - 216) முதலியவை பார்க்க. 183 1449. | "பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேனென் றரசுவப்பப் பெருகு ஞான வள்ளலார் வாகீசர் தமைவணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க, வுள்ளநிறை காதலினா லொருவரொரு வரிற்கலந்த வுண்மை யோடும் வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார் கழல்வணங்கும் விருப்பின் மிக்கார். |
184 1450. | அருட்பெருகு தனிக்கடலு முலகுக் கெல்லா மன்புசெறி கடலுமா மெனவு, மோங்கும் பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவனமுய்ய விருட்கடுவுண் டவரருளு மகில மெல்லா மீன்றாடன் றிருவருளு மெனவுங் கூடித் தெருட்கலைஞா னக்கன்று மரசுஞ் சென்று செஞ்சடைவா னவர்கோயில் சேர்தா ரன்றே. |
185 1449. (இ-ள்.) பிள்ளையார்.....அரசு உவப்ப - ஆளுடைய பிள்ளையாரது கழல்களை வணங்கும் பேறு பெற்றேன் என்று ஆளுடைய அரசுகள் மகிழ்வடைய; வாகீசர் தமை வணங்கப் பெற்றதற்குப் பெருகு ஞான வள்ளலார் மகிழ்ச்சி பொங்க - திருநாவுக்கரசுகளை வணங்கப் பெற்றதன்பொருட்டுப் பெருகும் ஞான வள்ளலாராகிய - பிள்ளையார் பெருமகிழ்ச்சிவடைய; உள்ளநிறை......உண்மை  சீகாழியில் பிரம தீர்த்தத்துடன் கூடிய திருத்தோணி
|  திருமுண்டிச்சுரம்
|
|