பக்கம் எண் :


266திருத்தொண்டர் புராணம்

 

யோடும் - மனத்தினுள் நிறைந்த மிக்க ஆசையினால் ஒருவர் மற்ற ஒருவருள்ளே கலந்த உண்மை நிலையினோடும்; வெள்ளநீர் ...... விருப்பின் மிக்கார் - வெள்ளப் பெருக்கில் மிதந்த திருத்தோணியிலே எழுந்தருளியிருக்கும் இறைவரது திருப்பாதங்களை வணங்கும் விருப்பத்தினால் மிக்கவர்களாகி,

184

1450. (இ-ள்.) அருட்பெருகு......கடலும் ஆம் எனவும் - அருளினால் பெருகும் ஒப்பற்ற ஒரு கடலும், உலகங்களுக்கெல்லாம் அன்பினால் செறிகின்ற ஒரு கடலும் போல்வார் இவர்கள் என்று சொல்லவும்; ஓங்கும்...கண் இரண்டெனவும் - ஓங்குகின்ற பொருளுடைய சமயங்களின் முதன்மைபெற்ற சைவநெறியானது பெற்ற புண்ணியக் கண்கள் இரண்டும் போல்வார் இவர்கள் என்று சொல்லவும்; புவனம் உள்ள இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள் தன் திருவருளும் எனவும் - உலகமெல்லாம் உய்யும்பொருட்டுக் கரியவிடத்தினை உண்டருளிய சிவபெருமானது திருவருளும், உலகங்களையெல்லாம் ஈன்றெடுத்த அம்மையாரது திரு அருளும் போல்வார் இவர்கள் என்று சொல்லவும்; தெருள் கலைஞானக்கன்றும் அரசும் - தெருளுதற்கேதுவாகிய கலைஞானக்கன்றாகிய பிள்ளையாரும் திருநாவுக்கரசரும்; சென்று - பிள்ளையாரது திருமாளிகையினின்றும் போய்; செஞ்சடை வானவர் கோயில் சேர்ந்தார் - சிவந்த சடையயினையுடைய தேவதேவராகிய இறைவரது திருக்கோயிலை அடைந்தார்கள்; அன்றே - அப்பொழுதே.

185

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1449. (வி-ரை.) பிள்ளையார் ... அரசு உவப்ப - பிள்ளையாரது திருவார்த்தையை அடியார்கள் உரைப்பக் கேட்டபோதே அவரைக்கண்டு கழல் வணங்க வேண்டுமென்று விரும்பிய வண்ணமே காணவும் கழல் வணங்கவும் பேறுபெற்றேன் என்று மகிழ்வது நாயனாரது மனநிலை.

பெருகுஞான ... மகிழ்ச்சி பொங்க - பிள்ளையார் தொண்டர் திருவேடத்தினைத் தாம் தேடிச்செல்லாமல் தானே நேரில் தோன்றக் காணவும் வணங்கவும் பெற்றேன் என்று மகிழ்ச்சி பொங்கப் பெற்றது பிள்ளையாரது மனநிலை. தேடிவந்து கண்டு வணங்கிய நாயனாரினும், தேடாமலே காணக்கிடைத்தபிள்ளையாரது மகிழ்ச்சியே பெரிதாயிற்று என்பார் அரசு உவப்ப என்றதற்கு மேலாக வள்ளலார் மகிழ்ச்சி பொங்க என்றார்.

உள்ளநிறை காதல் - உள்ளத்தைக் காதல் முழுதும்கொண்டு நிறைந்தது. அதில் பிறிதொன்றற்கும் இடமில்லை.

ஒருவர் ஒருவரிற் கலந்த உண்மை - அரசுகள் பிள்ளையாரிடத்தும், பிள்ளையார் அரசுகளிடத்தும் சிறிதும் மாறுபாடில்லாத அன்பு கலந்த ஒருமைப்பாடு.

திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் - சிவபாத இருதயர் திருவாலவாயிற் செய்ததுபோல, நாயனார் தோணிபுரம் சார்ந்தவுடன் தோணிபுரேசரை வணங்கிப் பின்னர்ப் பிள்ளையாரை வணங்கும முறையன்றி, இவ்வாறு முன்னர்ப் பிள்ளையாரைக் கண்டு வணங்கிப், பின்னரே தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் என்றநிலை என்னையோ? எனில், "நாடிய பொருள் கைகூடும்" என்றதற்குச் சங்கோத்தர விருத்தியில் எமது மாதவச் சிவஞான யோகிகள் உரைத்தவாறு, பிள்ளையாரது மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த விருப்பு வாய்ப்ப (1443) அருள் பெற்றுத் தோணிபுரம் சார்ந்தனராதலின் அதனையே முன்னர்ச் செய்தனர் என்க. அன்றியும் அடியார் கூட்டம் ஆண்டவனது சார்பினை வலியுறுததலால் மிக்க பயன்தருவதென்பதும் ஞானசாத்திரங்களிற் கண்டவுண்மை. பிள்ளையாரைக் கண்டு வணங்