கலை பயிலுதல் உதவுவதென்றபடி. நீத்தம் கொளவீசி என்றது நீர் பாய்ச்சி என்றும், புலன் என்றது நிலம் என்றும், கொளுவுதல் என்றது சூடு உதவுதல் என்றும் குறிப்புப் பொருள் தர நிற்பதும் காண்க. "கொள்ளுத்துவதன்முன்" (1220) என்றது காண்க. "முகைத்த மலரின் வாசம்போற் சிந்தை மலர உடன்மரும் செவ்வி யுணர்வு" (1218) என்றவிடத் துரைத்தவை பார்க்க. இவ்வாறன்றிப், பொருள் நீத்தங் கொளவீசி - என்பதற்கு மிகுதியான பொருள்களைத் தானம்செய்து எனவும், புலன் கொளுவ என்பதற்குப் புலன்களின் வழி அறிவு பெற எனவும் உரைப்பாருமுண்டு. கலைபயிலத் தொடங்குவித்தார் - புகழனார் என்ற எழுவாய் தொக்கி நின்றது. "சிலை பிடிப்பித்தார்கள்" (689) "ஒதுவிக்குஞ் செய்கை பயந்தார் செய்வித்தார்" (1219) முதலியவை பார்க்க. "தந்தை மகற்காற்று நன்றி யவையத்து, முந்தி யிருப்பச் செயல்" என்பது குறள். இதனை வடவர் அக்கராப்பியாசம் என்பர். சுருள் நீக்கி மலர்விக்கும் என்றதனால் முந்தை யறிவின் தொடர்ச்சியாலாகிய உணர்வு முன்னரே மனத்தினுட் டங்கிக் கிடந்தமை குறிப்பா லுணர்த்தப்பட்டது. இக்குறிப்பினைச் "சிந்தைமலர்ந் தெழுமுணர்வின் செழுங்கலையின் றிறங்க ளெல்லா, முந்தைமுறை மையிற்பயின்று" என மேல்வரும் பாட்டில் விரித்தமை காண்க. மயிர்நீக்கு மணவினை என்பது உடலுக்கும் நலந்தருவதும், கலைபயிற்றுதல் உயிருக்கு நலந்தந்து உடன்வருவதுமாவன என்ற குறிப்புப்பெற இப்பாட்டில் இவை யிரண்டும் ஒருங்குவைத்துக் கூறப்பட்டன. 20 1286. | தந்தையார் களிமகிழ்ச்சி தலைசிறக்க முறைமையினாற் சிந்தைமலர்ந் தெழுமுணர்விற் செழுங்கலையின் றிறங்களெல்லாம் முந்தைமுறை மையிற்பயின்று, முதிரவறி வெதிரும்வகை, மைந்தனார் மறுவொழித்த விளம்பிறைபோல் வளர்கின்றார். |
21 (இ-ள்.) வெளிப்படை. தந்தையார் கொண்ட பெருமகிழ்ச்சி மேன்மேலும் வளர, முறைமையினால், சிந்தை மலர்ந்து எழுகின்ற உணர்வினாலே, செழமையரகிய கலைகளின் வகைகள் எல்லாம் முன்னைய தொடர்பினை லெளிதிற் பயின்று முதிர்ச்சி யடைய அறிவு வெளித்தொன்றுந் தன்மையால், மைந்தனார், மறுவை நீக்கிய இளம் பிறைபோல வளர்கின்றாராயினார். (வி-ரை.) தந்தையார்....தலைசிறக்க - தமது மகன் கலையறிவின் முதிர்வதனைத் தந்தையர் மிகவிரும்பி மகிழ்வர் என்பது உலகியல்பு. முறைமையினால் என்பது இப்பிறப்பிற் பயின்று வளர்வதனையும், முறைமையில் என்பது முன்னைப்பயிற்சியினால் தங்கியிருந்ததனையும் உணர்த்தின. முறைமையினாற் - பயின்று எனவும், முறைமையில் - முதிர என்றும் கூட்டுக. எதிர்தல் - வெளித்தோற்றுதல். அறிவு எதிரும் வகை - அறிவு, பிறர் அறியும் படி வெளிப்பட்ட அளவில் அக்கால எல்லையில் நின்றது என்பது குறிப்பு. ஐந்து வயதளவில் கலைபயிலத்தொடங்கிய மருணீக்கியாருக்குப் பத்து ஆண்டு அளவில் அந்தக் கலைப் பயிற்சியின் வளர்ச்சி கூறப்படுவதாம் என்பது குறிப்பு. திலகவதி யாருக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் நிரம்பும் பருவம் மேல்வரும் பாட்டில் கூறப்படுதல் காண்க. மறு ஒழித்த இளம்பிறைபோல் - பிறைபோல என்று வாளாகூறின் மதிக்கு உள்ள கறையும்குறையம் கூடி உடன் எண்ண வருமாதலின், இங்கு உவமிக்கப்படும் பிறை மறுஓழித்த பிறை என்றார். இல்பொருளுவமை. மறு என்று பொதுப்படக் |