பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்29

 

கூறியவதனால், வளர்ந்தபின் தேய்தலாகிய மறுவும் முயற்கறையினுடன் கொள்ள நின்றது. வளர்ந்தார். என்னாது வளர்கின்றார் - என்ற குறிப்புமது. "வானத் தின்மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை" (திருஞான புரா - 728), "நீளிரு ணீங்க வந்த கலைச்செழுந் திங்கள் போலும்" (மேற்படி - 751) என்பனவும் இங்கு நினைவுகூர்தற்பாலன.,

தந்தைதாய் - சிந்தைமகிழ்ந்து - தலைசிறக்கும் முந்துமுறை - என்பனவும் பாடங்கள்.

21

1287.

அந்நாளிற் றிலகவதி யாருக்காண் டாறிரண்டின்
முன்னாக வொத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர்,
மின்னார்செஞ் சடையண்ணல் மெய்யடிமை விருப்புடையார்,
பொன்னாரு மணிமௌலிப் புரவலன்பா லருளுடையார்.

22

1288.

ஆண்டகைமைத் தொழிலின்க ணடலரியே றெனவுள்ளார்,
காண்டகைய பெருவனப்பிற் கலிப்பகையா ரெனும்பெயரார்,
பூண்டகொடைப் புகழனார் பாற்பொருவின் மகட்கொள்ள
வேண்டியெழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார்.

23

1287.(இ-ள்.) வெளிப்படை. அக்காலத்தில் திலகவதியம்மையாருக்குப் பன்னிரண்டு வயதளவு நிரம்ப, ஒப்புடைய முதல் வேளாண் குலத்திலும் குடியிலும் வந்த தலைவரும், மின்போல ஒளிவீசும் சிவந்தசடையினையுடைய அண்ணலாாராகிய சிவபெருமானிடம் மெய்யடிமைத்திறம் புரிவதில் விருப்ப முடையவரும், பொருன்னாலியன்று மணிகளழுத்திய முடிதாங்கிய அரசனிடம் அருளுடையவரும்,

22

1288.(இ-ள்.) வெளிப்படை. வீரத்தன்மையுடைய போர்த்தொழிலில் வலிய ஆண் சிங்கம் போலவுள்ளவரும், காண ஆசைப்படத் தக்க பேரழகுடைய வரும் ஆகிய கலிப்பகையார் என்னும் பெயருடையவர், கொடையறம் பூண்ட புகழனாரிடம் ஒப்பரிய மகளாரை மணமகளாராகக் கொள்ளும் பொருட்டு, விரும்பி எழுகின்ற காதலினால் மேலோர்களை அனுப்பினார்.

23

இந்த இரண்டு பாட்க்களும் தொடர்ந்து ஒருமடிபு கொண்டன.

1287.(வி-ரை.) அந்நாளில்...முன்னாக - திலகவதியம்மையாருக்கு மணம் பேச உரியகாலம் நேர்ந்தமைகூறப்பட்டது. பன்னிரண்டாண்டளவில் பெண்களுக்கு மணப் பருவமாகக் கணிக்கப்படுதல் தமிழரது மரபு. "இவனும் பதினாறாட்டைப் பிராயத்தானாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையராய்" (இறையனாரகப்பொருள் உரை - 1-வது சூத்திரம்) என்றது
காண்க.

ஒத்த - குடி - குணம் முதலிய பலவாற்றாலும் ஒப்புடைய. மேலே காட்டிய இறையனார். அகப்பொருளுரை காண்க.

ஒத்த முதல் வேளாண்குலக் குடித் தலைவர் - என்க. முதல் வேளாளர் என்றது வேளாளர்களுக்குள் உள்ள பல பகுப்பிலும் முதன்மை பெற்ற பிரிவு என்றபடி.

மரபு - குலம் - குடி முதலியவைபற்றி 1280 - 1282 பார்க்க. இவையே மணம் பேசும்போது முன் வைத்துப பேசி மணந் துணிவது முந்தையோர் வழக்கு. 1289 பார்க்க.

மின்னார்....விருப்புடையார் - சிவன்பா லடிமைத்திறத்தின் விருப்ப முடைமை, ஏனைய தன்மைகளுள் முதலிற் கருதற்பாலது என்றதாம். அடிமை