பக்கம் எண் :


32திருத்தொண்டர் புராணம்

 

அணைந்தார் - மணம் பேசச் செலவிட்ட மேலோர். அணைந்தார் என்றமையால் அவர்கள் அச்செய்தி கொண்டு மிண்டு சென்றமை கூறப்பட்டது.

வதுவை வினை - இசைவினால் மணம் நிறைவாயிற்று; வினை என்ற சடங்கு மட்டும் நிகழ எஞ்சி நின்றது வதுவை முடிப்பதன்முன் என்னாது வினை முடிப்பதன் முன் என்றார். திலகவதியார் இக்கருத்தே கொண்டமை 1297-ல் உரைக்கப்பட்டது காண்க.

முன் - அரசகாரியத்தைத் தமது வதுவை வினையின் முன் செய்யத்தக்க பெருங் கடமையாக ஏற்ற வீரம் குறிக்க. "புரவலன்பா லருளுடையார்" (1287) என்றது காண்க. இது தமிழ் மக்கள் மேற்கொண்ட கடமையும் வீர உணர்ச்சியும் குறிப்பதாம்.

மன்னவற்கு வடபுலத்தோர் மாறு ஏற்க - மன்னவற்கு - நான்கனுருபு பகைப் பொருளில் வந்தது. மாறு ஏற்றல் - பகையாகக் கிளம்பிப் போரினை ஏற்று வருதல்.

வடபுலத்தோர் - வடநாட்டரசர். புலம் - நாடு. அந்நாளில் வடநாட்டரசர்க்கும் நடுநாடு என்னும் திருமுனைப்படி நாட்டினை உள்ளிட்ட தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ அரசர்க்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன என்பது தேச சரிதத்தர்ல் அறியப்படும் உண்மை. சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார் "வடபுலத்து வாதாவித் தொன்னகரந் துகளாக"ச் சேனை செலுத்திப் போர்வென்ற வரலாறும், மூர்த்தி நாயனார் புராணத்தில் வடுகக் கருநாட மன்னன் பாண்டிய நாட்டைவென்று அடிப்படுத்திய செய்தி கூறப்படுவதும் இங்கு நினைவு கூர்க. இங்குக் குறித்த மன்னவன் மகேந்திரவர்மன் - குணபரன் - (திருநாவுக்கரசு நாயனாரை அலைபுரிந்து பின்னர் உண்மை கண்டு சைவததை அடைந்தவன்) என்ற அரசனாதல், அல்லது அவனைச் சார்ந்த வேறு சிறு மன்னனாதல் கூடுமென்பது கருதப்படும்.

அன்னவர்க்கு விடைகொடுத்தான் - விடைகொடுத்தல் - சேனையுடன் சென்று போர்புரிந்து வருக என்று ஏவி விடுத்தல். மரபு வழக்கு. எழவாய் தொக்கி நின்றது.

அவ்வினை - அவ்வாறு விடுக்கப்பட்ட போர்வினை. அவ்வினைமேல் - அவர் என்றும், அவ்வினை (யி - மேலவர் என்றும் கூட்டி உரைக்க நின்றது.

அகன்றார் - இனி அவர் திரும்பி வராமைக் குறிப்பும் உணர்த்தி நின்றது.

மணவிசைவு - மற்றதன்மேல் - என்பனவும் பாடங்கள்.

25

1291.

வேந்தற்குற் றுழிவினைமேல் வெஞ்சமத்தில் விடைகொண்டு
போந்தவரும் பொருபடையு முடன்கொண்டு சிலநாளிற்
காய்ந்தசினப் பகைப்புலத்தைக் கலந்துநெடுஞ் சமர்க்கடலை
நீந்துவார் நெடுநாள்க ணிறைவெம்போர்த் துறைவிளைத்தார்.

26

(இ-ள்.) வெளிப்படை. அரசனுக்கு இவ்வாறு பகைவனால் போர் நேர்ந்ததனால், அதனை நீக்கும் தொழிலாகிய போரின்மேல் செல்ல விடைபெற்றுக் கொண்டு சென்றவராகிய கலிப்பகையாரும், போர்செய்யும் படைகளையும் தம் முடன் கொண்டு சென்று, சில நாள்களில் சினத்தோடு அடர்த்துவந்த பகைவர்களை அடைந்து, அவர்களுடன் கொடிய போர்க்கடலை நீந்தி வெற்றிகொள்ளும் கருத்தினராய், நீண்டகாலம் நிறைந்த கொடிய போர்த்தொழிலைச் செய்தனர்.

(வி-ரை.) வேந்தற்குற்றுழி - வினைமேல் - வேந்தற்குற்றுழிப் பிரிவு என்பது அகப்பொருளில் கற்பியலின்கண் நிகழும் ஒருபகுதி. "மன்னோர் பாங்கிற் பின்னோராகும்" (30), "உயர்ந்தோர்க்குரிய வோத்தி னான" (31), வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய, வேனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே" (32) என்ற தொல்காப்பியம் அகத்திணையியற் சூத்திரங்களையும், "பின்னோர்" ஆகுப - பின்னோ