இப்பால் - இங்குத் திருவாமூரில் முன்பாட்டிற் சொல்லிவந்த செய்தி அப்பால் வடபுலதது மன்னரது அமர்க்களத்துச் செய்தியாதலின், அதிற்சென்ற நம் மனத்தை அங்கு நின்றும் வேறு பிரித்துத் திருவாமூருக்குக் கொண்டு வருவதற்கு இப்பால் என்று அண்மைச் சுட்டினாற் கூறினார். அணங்கு அனையாள் - முன்னரும் அணங்களைய (1289) என்றது காண்க. அணங்கனையாள் தனைப்பயந்த தூயகுலப் புகழனார் - அம்மையாரை முதலிற்பெற்றாராதலானும், பின் சரிதநிகழ்ச்சியில் நாயனார் பரசமயங் குறித்து நின்றதனை மீட்டுச் சைவ சமய பரமாசாரியராந் தன்மையிற் செலுத்திய சிறப்பு அம்மையாருக்கு உரியதாதலானும், தூயகுலம் பின்பு அவ்வாறு அம்மையாரால் நாட்டுப்படுதல்பற்றி "நந்தமது குலஞ்செய்த நற்றவத்தின் பயனனையீர்" என்று சொல்லி நாயனார் வந்து அடைய நின்ற சிறப்பானும், இங்கு, மருணீக்கியாரைப் பயந்த என்னாது இவ்வாறு கூறினார். தொன்றுதொடு நிலையாமை மேயவினைப் பயம் - வினைப்பயனே உயிர்களுக்கு நிலையாமை பொருந்திய இறப்பு பிறப்பும் தருவது; இது தொன்று தொட்டு வரும் பெருவழக்கு என்பதாம். "சாவதும் புதுவதன்றே" என்ற புறப்பாட்டும் காண்க. விட்டு அகல - விட்டு அகலும்படி. அகல உழந்து - என்றபடி. முன்னரும் யாக்கைநிலைக் கேற்பப் பிணிகள் வந்திருக்கக் கூடுமாயினும், இப்பிணியானது தீயஅரும் பிணியாய்ப் புகழனாரை - இவ்வுலகைவிட்டு நீங்கச் செய்யும் அளவும் நிற்றொழிந்தது என்றபடி. தீய அரும் என்ற அடைமொழிகளின் கருத்துமது. வினைகள் அனுபவித்துக் கழித்தாலன்றி வீடுபெறல் தடைபடும். எனவே நோய் முதலியன அனுபவிக்கும் தோறும்கன்மானுபவம் கழிந்துபட்டு வீட்டையும் நிலை அணுகுவதாம். தீய அரும்பின் உழந்த புகழனார் தீவினைகளை அனுபவித்துக் கழித்தவராய்ச் சிவகதிக் கணியரானார் என்பது. "விண்ணுலகிற் சென்றடையும் புண்ணிய மிகுதியுடையரேனும் தீவினையும் அனுபவித்தன்றிக் தொலையாமையின் தீயவரும் பிணியுழந்து என்றார்" என்பர் ஆறுமுகத்தம்பிரானார். வினைப் பயத்தாலே - அகல் என்றும், வினைப்பயத்தாலே - பிணி உழந்து என்றும் கூட்டி உரைக்க நின்றது. இவ்வுலகைவிட்டு - விண்ணுலகிற்சென்று - நீங்கியது இவ்வுலகம்; புகுந்தது விண்ணுலகம் என்றதாம். விண்ணுலகில் சென்று அடைந்தார் - மனையறம் புரிந்து விருந்தளித்தும் ஒக்கல் வளர் பெருஞ்சிறப்புடனிருந்தும், கொடை பூண்டும், நல்வாழ்வு வாழ்ந்ததனால் இவ்வாறு கூறினார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந், தெய்வத்துள் வைக்கப்படும்", "செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா, னல்விருந்து வானத் தவர்க்கு" முதலிய திருக்குறட் கருத்துககளை இங்கு வைத்துச் சிந்திக்க. பிணியுழன்று விண்ணுலகை - என்பது பாடம். 27 1293. | மற்றவர்தா முயிர்நீப்ப, மனைவியார் மாதினியார் சுற்றமுடன் மக்களையுந் துகளாக வேநீத்துப் பெற்றிமையா லுடனென்றும் பிரியாத வுலகெய்துங் கற்புநெறி வழுவாமற் கணவனா ருடன்சென்றார். |
28 (இ-ள்.) வெளிப்படை. மற்று அவர் தாம் உயிர் துறக்க, அவரது மனை வியாராகிய மாதினியார் சுற்றத்தார்களுடன் மக்களையும் துகளாகவே |