பக்கம் எண் :


36திருத்தொண்டர் புராணம்

 

புராணம். இதனைக், கணவன் மனைவி யிவர் கூட்டுறவினுள் இந்நாளிற் காணப்படும் பலவிதமான அலங்கோல நிலையுடன் ஒப்புநோக்கி உயர்வு கண்டுகொள்க. இந்தக் கற்புநெறி ஒழுக்கம் இன்னும் சிறந்த நிலையில் காணப்படும் திலகவதியம்மையாரது சரித நிகழ்ச்சி பற்றி 1297-ல் உரைப்பவையும் பார்க்க. கணவனாருடன் சென்றார் - இங்கு உயிர் நீத்து, அங்கு அவருயிருடன். சேர்ந்தார்.

28

1294.

தாதையா ரும்பயந்த தாயாரு மிறந்ததற்பின்
மாதரார் திலகவதி யாருமவர் பின்வந்த
காதலனார் மருணீக்கி யாருமனக் கவலையினாற்
பேதுறுநற் சுற்றமொடும் பெருந்துயரி னழுந்தினார்.

29

(இ-ள்.) வெளிப்படை. தந்தையாரும் பெற்ற தாயாரும் இறந்த பின்னர், பெண்மணியாராகிய திலகவதியம்மையாரும் அவர் பின்வந்து அவதரித்த மகனாராகிய மருணீக்கியாரும் மனதிற்பொருந்திய கவலையினால் வருந்துகின்ற நல்ல சுற்றத்தாருடனே பெருந்துன்பத்தில் அழுந்தினார்கள்.

(வி-ரை.) தாதையாரும் பயந்த தாயாரும் - தந்ததை தாய் என்னும் இருமுது குரவருள் "அன்னையும் பிதாவும்" என முன்வைத்து ஒதத்தக்க தாயாரைப் பின்வைத்தோதியது, இங்கு அவர்கள் உயிர்நீத்த காலமுறைமை பற்றியாகும். மகவு, இரண்டு திங்கள் தந்தை கருப்பத்தினுள் தங்கிப் பின் தாயார் கருப்பையினுட் சேர்ந்து, பின்பு முறையே அங்கு நின்றும் வெளிப்படுகின்றது என்பது உடல்நூல் வல்லோர் கண்ட முடிபாதலின் அம்முறைபற்றி ஒதினார் என்றலுமாம். பயந்த என்றதும் அக்குறிப்புப்பட நிற்பது காண்க. "தந்தையார் போயினார் தாயரும் போயினார்" என்ற தேவாரமும் காண்க. "தந்தைதாய்ப்பேண்" என்ற வைப்பு முறையும் காண்க.

மாதரார் - பெண்மகவு என்ற பொருளிலும், காதலனார் - ஆண்மகவு என்ற பொருளிலும் வந்தன. மாதரார் - மாதர் ஆர் என்று பிரித்து, மாதர் - அழகு - அழகு நிறைந்த என்றுரைப்பாருமுண்டு.

மாதரார் திலகவதியார் - காதலானார் மருணீக்கியார் - இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள்.

மனக்கவலை - தமது இளம்பிராயம் பற்றியும் முன்னறி தெய்வங்களாகிய தந்தை தாயர் இருவரையும் ஒருசேர இழக்க நேர்ந்தமைபற்றியும் மனத்துள் மூண்ட கவலை.

பேதுறுதல் - வருத்தப்படுதல். நற்சுற்றம் - மக்களின் நிலைபற்றியும், உலகின் நலம்பற்றியும் வருந்தினாரன்றித் தாம்பெறும் உபகாரமாகிய தந்நலங்கருதி வருந்தினா ரல்லர் என்பார் நற்சுற்றம் என்றார், தம்மைப் பேணிய நன்றியின்பொருட்டு வருந்தினார் என்றலுமாம்.

அழுந்தினார் - பெருந்துயராகிய கடலினுள் மூழ்கினார். குறிப்புருவகம்.

மாய்ந்ததற்பின் - என்பதும் பாடம்.

29

1295.

ஒருவாறு பெருங்கிளைஞர் மனந்தேற்றத் துயரொழிந்து
பெருவான மடைந்தவர்க்குச் செய்கடன்கள் பெருக்கினார்,
மருவார்மேன் மன்னவற்கா மலையப்போங் கலிப்பகையார்
பொருவாரும் போர்க்களத்தி லுயிர்கொடுத்துப புகழ்கொண்டார்.

(இ-ள்.) வெளிப்படை. பெருங்கிளைஞர் மனந்தேற்ற, அவ்விரு மகாரும் ஒருவாறு வருத்தம் நீங்கிப், பெரிய விண்ணுலகடைந்த பெற்றோர்க்குச் செய்யக்