பக்கம் எண் :


38திருத்தொண்டர் புராணம்

 

முன்னர் நிகழ்ந்த அதனை ஒருவாறு தேறிய அவர்கள் எவ்வாற்றானுந் தேறமுடியாத தென்றாகப் பின்னர் வந்த நிகழ்ச்சி யிருந்ததென்பதனையும், "பட்டகா லிலே படும்" என்னும் பழமொழிப்படி துன்பங்கள் ஒருவற்கு மேன்மேல் அடுத்து வரும் இயல்புடையன என்பதனையும், அறிவிக்க இவ்விரண்டினையும் ஒருசேர அடுத்து வைத்து இவ்வொரு பாட்டினாற் கூறினார். "ஆயநா ளிடையிப்பால்" (1294) என முன்னரும் இவற்றைத் தொடர்ந்து அடுத்துவைத்துத தொடங்கிக் காட்டியமுறையும் காண்க.

பொரு - பொருதல் - பகைமை. முதனிலைத் தொழிற்பெயர்.

30

1296.

வெம்முனைமேற் கலிப்பகையார் வேல்வேந்த னேவப்போய்
அம்முனையிற் பகைமுருக்கி யமருலக மாள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்து பெருவார்த்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேற் றிருவனைய திலகவதி யார்கேட்டார்.

31

(இ-ள்.) வெளிப்படை. கொடிய பகைவர்மேல் அரசன் ஏவலின்படிச் சென்று, கலிப்பகையார், அந்தப் போர்முகத்திற் பகைவரை அழித்து விண்ணுலகத்தை ஆட்சி கொள்வதற்காகத் தமது கடனை நிறைவேற்றி பெருவார்த்தையினை ஊரவர் சொல்லச், செங்கமலமீதில் இருக்கும் திருமகளை ஒத்த திலகவதியார் கேட்டனர்.

(வி-ரை.) வெம்முனை - பகைவர். வேந்தன்ஏவ - "விடைகொடுத்தான்" (1290) என்றது பார்க்க.

அம்முனை - அந்தப் பகைவருடன் செய்த போர். முருக்குதல் - அழித்தல்.

அமருலகம்....கழித்த - போர்முனையில் இறந்துபட்டமை குறிக்க மங்கல வழக்காற் கூறினார். போரில் இறக்கும் விரர்கள் வீரசுவர்க்கம் என்ற விண்ணுலகத்தை அடைகுவர் என்பது மரபு. "வானிடை யின்பம் பெற்றார்" (438) என்றதும் பிறவும் பார்க்க. 'போரில் வெற்றிகொண்டு உயிருடன் மீண்டிருப்பே மாயின் சின்னாள் வாழும் இவ்வுலகத்துப் புகழ் ஒன்றே கொள்வோம்; அவ்வாறன்றிப் பன்னாளும் பெரிய விண்ணுலகிற் சிறக்க வாழ்வேம்' என்று சென்றார் போல் என்றதுமோர் தற்குறிப்பேற்ற அணி நயம்.

கடன் கழித்தல் - கடமையைச் செலுத்துதல்.

பெருவார்த்தை - இறந்து பட்டமை கூறும் மங்கலவழக்கு. உலகர் பலரும் அறியக்கூறும் புகழ்மொழி என்றலுமாம்.

தலம் - தலத்துள்ளோர் - அவ்வூரவர். ஆகுபெயர். தம்மிடத்து என்றுரைப்பாரு முண்டு. போரில் இறந்துபட்டமையால் உற்றாராலன்றி ஊரவரால் அறிய வந்ததென்றது
காண்க.

செம்மலர்மேல் திருவனைய - 1282 பார்க்க. "திருமகளென்ற நின்ற தேவியார்" என்றதும் இங்கு ஒப்புநோக்கற்பாலது.

31

1297.

எந்தையுமெம் மனையுமவர்க் கெனைக்கொடுக்க விசைந்தார்கள்
அந்தமுறை யாலவர்க்கே யுரியதுநா னாதலினால்
இந்தவுயி ரவருயிரோ டிசைவிப்ப" னெனத்துணிய,
வந்தவர்த மடியிணைமேன் மருணீக்கி யார்விழுந்தார்.

32

1298.

அந்நிலையின் மிகப்புலம்பி "யன்னையுமத் தனுமகன்ற
பின்னையுநா னுமைவண்ங்கப் பெறுதலினா லுயிர்தரித்தேன்;
என்னையினித் தனிக்கைவிட் டேகுவீ ரெனில்யானும்
முன்னமுயிர் நீப்ப" னென மொழிந்திடரி னழுந்தினார்;

33