பக்கம் எண் :


40திருத்தொண்டர் புராணம்

 

"தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த"

(திருவிடை - மும் - கோவை - 7)

என்றது பதினோராம் திருமுறைத் திருவாக்கு.

அந்த முறையால் - நான் அவர்க்கே - உரியது - என்ற கருத்தும், கொடுக்க என்ற கருத்தைத் தழுவியது. அந்தமுறை - பெற்றோர் கொடுக்க இசைந்தமுறை. அந்த - முன்சொன்ன அந்த. உரியது - உரியவள் என்னாது உரியது என்று அஃறிணையிற் கூறியதும் தமக்கென உரிமை கொள்ளாது கணவன் வழி நின்ற நிலையினை வற்புறுத்தியது. பெற்றோர்கள் தம்மைக் கொடுக்க இசைந்த ஒன்றினானே மணம் நிகழ்ந்து விட்டதாக முடித்தனர் திலகவதியம்மையார். அதன்மேல் உலகறிய நிகழ உள்ள "வதுவை வினை" (1290) என்பன எல்லாம் அதனைக் காட்டும் வெளிச் சடஞ்குகளே என்ற மட்டில் நின்றொழிவன என்பதும் அம்மையார் கொண்ட கொள்கை. உண்மையில் பெற்றோரின் மனஇசைவே மணமாகுவது என்றபடி. மணச் சடங்குகள் பிறக்ால நிலைக்கேற்ப அவ்வப்போது மிருதி நூலியற்றிய முனிவர்களால் கட்டப்பட்டவை என "ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்று தொல்காப்பியம் கூறும். அவை காலந்தோறும் வேறுபடுவது அவற்றின் மரபேயாம். ஆனால் அதன் முன்னரே சிவாகமங்களுள் வகுத்தருளப் பட்ட மணச்சடங்கு முறைமைகள் உண்டு. அவை எவராலும் மாற்றப்படத் தக்கன வல்ல என்பதும் உணர்தற்பாலது.

ஆதலினால்........இசைவிப்பன் - முன்கூறிய கொள்கையினால், பெற்ற மணவாளன் இறந்துபடவே, மணவாட்டியாகிய தாம் மேலும் உயிர் வாழாது அவனோடு "உடனென்றும் பிரியாத வுலகெய்தும் கற்புநெறி" (1291) என்ற நிலையின்படி அம்மையார் இவ்வாறு துணிந்தனார் என்க. அத்துணிவு, அந்நாள் முந்தையோர் கண்ட முறையாலும், தமது அன்னையார் நடந்து காட்டிய நடையாலும் ஆயிற்றென்பதும் உணர்தற்பாலது. அவ்வாறு உடன் செல்லாது உயிர்தாங்க நேரின், மணிநூல் தாங்காது கைம்மை நோன்பும் அறமும் தாங்கி நாட்கழித்தலும் கற்புநெறி வழுவாதார் கடன் என்பதும் அம்மையார் பின்னர் மேற்கொண்டு நின்ற தவநிலையினால் உணரப்படும். இது பற்றித் தொல்காப்பிய முதலிய பழந்தமிழ் இலக்கணங்களிலும், புறநானூறு முதலிய இலக்கியங்களிலும் கண்டவை இங்கு நினைவு கூர்ந்து உண்மை உணர்ந்து கொள்ளற்பாலன. தபுதாரநிலை என்ற புறத்துறையும் காண்க.

மருணீக்கியார் வந்து அடியிணைமேல் விழுந்தார் என்க. வருதலாகிய செயல் முற்பட விரைந்து நிகழ்ந்ததனை உணர்த்துவார் வந்து என்ற சொல்லை முன்வைத்தோதினார். இதுபோலப் பின்னர்த் "தாளிணைமேல் விழுந்தயரும் தம்பியார் தமை" (1329) என்றவிடத்தின் வரும் நிகழ்ச்சியினையும் ஒப்பு நோக்கி ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டுகொள்க.

உரியதுதான் - இசைப்பன் - எனவே துணிய - என்பனவும் பாடங்கள்.                           32

1298. (வி-ரை.) அன்னையும் அத்தனும் - அறியவந்த முறை. அன்னைபோல இங்குத் தமக்கையாரை நினைந்த குறிப்பினால் முன்வைத்துக் கூறியதுமாம்.

பின்னையும் - உம்மை இழிவு சிறப்பு.

உமை வணங்க......தரித்தேன் - அன்னையும் அத்தனும் பிரிந்த பின்னர் அப்பரிவு தோன்றாவண்ணம் நீரே அன்னைபோலக் காத்தளித்தீர் என்றபடி.

கைவிட்டு - தனித்திருக்கும்படி விட்டு - நீத்து. கைவிடுதல் - நீத்தொழிதல். "கைகூடும்" என்பதுபோலக் கை என்பது ஏற்ற சொற்பொருளை வலியுறுத்து நிற்பதோர் இடைச்சொல். இதனை உபசர்க்கமென்பர் வடவர்,