அவர்களை ஆளுடைய இறைவரது பெருமையும் விதந்து பேசப்பட்டதாயிற்று. தொண்டர் பெருமை பாராட்டுதலும் கேட்டலும் சாதனமாம் என்பது. "ஒருப்படு சிந்தையினார்கள்" என்றதனாலும் குறிக்கப்பட்டது. "அடியார் பெருமையை விரித்துரைத்தலாவது மீண்டு நிலவுலகத்து வாராத முத்திப்பெருவாழ்வெய்தும் சிறப்புடையர் என்று அவர் பெருமையை விரித்துக்கூறல். ஏனைய பெருமைகள் அழிதன்மாலையவாய்க் கேடடைதலின்" என்பது ஆறுமுகத் தம்பிரானார் உரைக் குறிப்பு. பொற்றாளில் விருப்பு - தேவ தேவராயும் பெருங் கருணையாளராயும் உள்ளவராதலின் அவர் தாளில் விருப்பு மெய்ப்பயன்தரும் என்று விதந்து கூறினார். உடனுறைவின் பயன் - அடியாா கூட்டத்தின் பயனாவது எல்லாவற்றினும் சிறந்ததென்று முடிந்த பொருளாகச் சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரத்துள் அணைந்தோர் தன்மையில் வைத்துப் பேசப்படுவது. "தம்மைவிடுத்தாயும் பழய வடியாருடன் கூட்டி" என்று குமரகுருபர சுவாமிகள் வரங்கேட்பதனையும் இங்கு நினைவு கூர்க. போற்றி - உரைத்து - பயன் பெற்றார் - என்ற வினைகளுக்கு மேலுரைத்தவாறன்றி ஆளுடையபிள்ளையாரும் அரசுகளும் என்ற எழுவாய் கூட்டி உரைத்தனர் முன் உரைகாரர்கள். அவாகள் சிந்தையினார்கள் - என்பதே அவ்விருவரையும் குறிப்பதாகக் கொண்டுரைத்தனர். அவ்வுரை பொருநதாமை யறிக. "சீல மெய்த் தவர்களுங் கூடவே கும்பிடுஞ் செய்கை நேர்நின்று வாய்மைச், சாலமிக்குயாதிருத் தொண்டினுண் மைததிறந் தன்னையே தெளிய நாடிக், காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந் தருளினார் காழிநாடர்" (திருஞான - புரா - 523) என்று இதனை ஆசிரியர் மேற்கூறுவதற் கியைய இங்குப் பொருள் கொள்ளப் பட்டது. 244  1510.  | அந்நாளிற் றமக்கேற்ற திருத்தொண்டி னெறியாற்ற மின்னார்செஞ் சடையண்ணல் மேவுபதியெனைப்பலவு முன்னாகச் சென்றேத்தி முதல்வன்றா டொழுவதற்குப் பொன்னாரு மணிமாடப் பூம்புகலூர் தொழுதகன்றார்,  |  
 245  1511.  | திருநீல நக்கடிகள் சிறுத்தொணடர் முருகனார் பெருநீர்மை யடியார்கள் பிறரும்விடை கொண்டேக ஒருநீர்மை மனத்துடைய பிள்ளையா ருடனரசும் வருநீர்செஞ் சடைக்கரந்தார் திருவம்பர் வணங்கினார்.   |  
 246  1510.(இ-ள்.) வெளிப்படை. அந்நாளில், தங்களுக்கு ஏற்றதாகிய திருத்தொண்டின் கடனைச் செய்வதற்காக மின்போல விளங்கும் சிவந்த சடையினையுடைய சிவபெருமான் விளங்க வீற்றிருக்கும் தலங்கள் பலவற்றிலும் முன்னாகச் சென்று போற்றி முதல்வருடைய திருவடிகளைத் தொழுவதன் பொருட்டு அழகிய மணிகளையுடைய மாடங்கள் நிறைந்த பூம்புகலூரைத் தொழுது புறப்பட்டார்களாகி,  245  1511.(இ-ள்.) வெளிப்படை. திருநீலநக்க நாயனாரும, சிறுத்தொண்ட நாயனாரும், முருக நரீயனாரும், பெருநீர்மையுடைய பிற அடியார்களும், பிறரும் விடைபெற்றுக்கொண்டு ஏக, ஒன்றுபட்ட தன்மையுடைய மனத்தவர்களாகிய ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் வானினின்றும் இறங்கிவரும் கங்கைப் பெருக்கைச் செஞ்சடையினிடத்தே கரந்து வைத்த இறைவரது திருவம்பர்த் தலத்தை வணங்கினார்கள்.  246  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.  |