முன்வந்த வாகீசரை முன்னரும், பின்வரும் பிள்ளையாரைப் பின்னரும் எதிர்கொண்டனர். வந்தணைய மேவு - என்பதும் பாடம். 250 1516. | மாடவீதி யலங்கரித்து மறையோர் வாயின் மணிவிளக்கு நீடுகதலி தழைப்பூகம் நிரைத்து நிறைபொற் குடமெடுத்துப் பீடுபெருக வாகீசர் பிள்ளை யாருந் தொண்டர்களுங் கூட மகிழ்ந்து விண்ணிழிந்த கோயில் வாயில் சென்றணைந்தார். |
(இ-ள்.) வெளிப்படை. மறையோர்கள் திருநகரின் மாடவீதியை அலங்காரம் செய்து, தமது மாளிகைகளின் வாயில்களில் மணிவிளக்குக்களையும், நீடும் வாழைகளையும், இலைசெறிந்த கமுகுகளையும் வரிசைபெற வைத்தும், நீர் நிறைந்த பொற்குடங்களை ஏந்தியும், பெருமை பெருக, வாகீசர், ஆளுடைய பிள்ளையாரும் தொண்டர்களும் அங்குப் பின்னர் வந்து கூடும்படி, மகிழ்ந்து, விண்ணிழி விமானத்தையுடைய திருக்கோயிலின் வாயிலைச் சென்று அணைந்தனர். (வி-ரை.) மாடவீதி - திருக்கோயிலைச் சூழ்ந்து மாடங்கள் நிறைந்தவீதி; தேர் வீதி, கோயிலினுள் மாடவீதி என்பாருமுண்டு. அது பொருந்தாது. மறையோர் பீடு பெருக - என்று கூட்டுக. பீடு பெருக - சிறப்படைய - பெருமை பெருக. பெரியோாகளையும் அடியார்களையும் இவ்வாறு உபசரித்து வரவேற்றமையால் அவர்கள் பீடினாற் பெரியோராயினர். வரும் சரிதக் குறிப்புமாம். பீடு பெருகும் என்ற பாடம் பிழையென்று தோன்றுகிறது. வாகீசர் - பிள்ளையாரும் தொண்டர்களும் கூட - முன் வந்தணைந்த வாகீசர் பின்னணையும் பிள்ளையாரும் தொண்டர்களும் தம்முடன் பின் வந்து கூடும்படி. மகிழ்ந்து - மகிழ்ச்சியடைந்து. அடியார்களும் பிள்ளையாரும் வருதல் மகிழ்ச்சிக்குக் காரணம். இது திருநாவுக்கரசரது புராணமாதலின் அவரைப்பற்றிய நிகழ்ச்சிகள் மட்டில் இங்குக் கூறினார் என்க. மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் பார்க்க. விண்ணிழிந்த கோயில் - இக்கோயில் திருமால் வழிபட்டுத் தேவ லோகத்தினின்றும் கொணர்ந்து தாபித்தது என்பது வரலாறு; அதனால் விண்ணிழி விமானம் எனப்படும். "விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவு வீழிநகரே" (பிள்ளையார் - தேவா). 251 1517. | சென்றுள் புகுந்து திருவீழி மிழலை யமர்ந்த செங்கனகக் குன்ற வில்லி யார்மகிழ்ந்த கோயில் வலமா வந்துதிரு முன்றில் வணங்கி முன்னெய்தி முக்கட் செக்கர்ச் சடைமாவுலி வென்றி விடையார் சேவடிக்கீழ் விழுந்தா; ரெழுந்தார்; விம்மினார். |
(இ-ள்.) வெளிப்படை. சென்று திருக்கோயிலினுள்ளே புகுந்து திருவீழி மிழலையை விரும்பி வீற்றிருந்தருளிய செம்பொன் மேருமலையை வில்லாகவுடைய பெருமான் மகிழ்ந்த திருக்கோயிலினை வலம்வந்து, திருமுற்றத்தில் வணங்கி, முன்பு சேர்ந்து, மூன்று கண்களையும், செவ்வானம் போலும் சடையாகிய திருமுடியினையும், வெற்றி பொருந்திய விடையூர்தியையும் உடைய அப்பெருமானது திருவடியின் கீழே விழுந்து,எழுந்து, விம்மினார். (வாகீசர்.) (வி-ரை.) இஃது திருநாவுக்கரசர் செய்கையைக் கூறிற்று. அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல். |