பொதுவான வினைத்தொகை. பிற்சரிதக் குறிப்புக் காண்க. இருந்து - முன் பாட்டில் இருந்தார் என்றடி இருந்து. மாரிசுருங்கி - சுருங்கியதனால். வினையெச்சம் காரணப் பொருளில் வந்தது. வளம் பொன்னி நதியும். உம்மை உயர்வுசிறப்பு. "எந்நாளும் பொய்யா தளிக்கும் புன"லுடைய தெனவும், "வான் பொய்யினுந் தான்பொய்யாக் காவிரி" எனவும் விதந்து பேசப்படும் உண்மை நீர்வளமுடைய அதுவும். பருவம் - நீர்பெருகுதற் குரியகாலம்; பயிர்க்கும் உயிர்க்கும் இன்றியமையாது பெருக நீர் வேண்டும் காலம். "நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்" (குறள்) என்றபடி மழைக்கு ஆதாரமாகிய கடலும் குன்றுமாயின், மாரியினால் ஆதரவு பெறும், ஊற்றும் குறைதல் ஒருதலை. நீரின் இயன்ற உணவு அருகி - "ஏரினுழாஅ ருழவர்" என்று இதனைத் திருக்குறளுட் காரணங்காட்டி யுரைத்தமை காண்க. உணவு - இங்கு நெல் முதலிய உணவுக்குதவும் பண்டம் குறித்தது; ஆகுபெயர். நீரின் இயன்ற - நீரால் உளவாகும். இன் - விகுதி கருவிப் பொருள் தரும் ஆன் என்னும் மூன்றனுருபாய் வந்தது. இயன்ற - உளதாகும். "பசும்புற் றலைகாண் பரிது" என்றார் இதனைத் திருக்குறளாசிரியர். நிலவும் உணவினால் வாழும்; உலகில் வாழப்பெறும். பல மன் உயிர்களெல்லாம் - பல என்பது உயிர்களின் வகைகளையும், எல்லாம் - என்பது அவற்றின் தொகையையும் குறித்தன. முற்றும்மை தொக்கது. இலம்பாடு - இலம் - இல்லாமை; பாடு - படுதல் - உண்டாதல். இல்லாமை உண்டாதல். படர் - துன்பம். துயரம். கூர்தல் - மிகுதல். படர்கூர் வறுமை - துன்பம் மிகும் பஞ்சம். உயிர்களெலாம் - படர்கூர் - என்றதுபற்றி "வானின் றுலகம் வழங்கி வருதலால் என்னும் திருக்குறட் கருத்துக் காண்க. பாரின் - இன் - ஏழனுருபாகி வந்த உருபு மயக்கம். பாரில் வறுமை பரந்தது - என்று கூட்டுக. வளர் பொன்னி - நீரினியன்றி - உணர்வுருகி - உயிர்க்கெல்லாம் - படர்ந்ததால் - என்பனவும் பாடங்கள். 255 1521. | வைய மெங்கும் வற்கடமாய்ச் செல்ல, வுலகோர் வருத்தமுற நையு நாளிற், பிள்ளையார் தமக்கு நாவுக் கரசருக்குங் கையின் மானு மழுவுமுடன் காணக் கனவி லெழுந்தருளிச் செய்ய சடையார் திருவீழி மிழலையுடையா ரருள்செய்வார், |
256 1522. | "கால நிலைமை யாலுங்கள் கருத்தில் வாட்ட முறீரெனினும், ஏல வும்மை வழிபடுவார்க் களிக்க வளிக்கின் றோ"மென்று கோலங் காண வெழுந்தருளிக் குலவும் பெருமை யிருவருக்கும் ஞால மறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார். |
257 1521.(இ-ள்.) வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல - உலகமெங்கும் பஞ்ச காலமாய் நிகழ; உலகோர் வருத்தம் உற - உலகத்து உயிர்கள் பசியால் வருந்த; நையும் நாளில் - துன்பப்பட்டு அலையும் நாளில்; செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் - சிவந்த சடையினை உடையாராகிய திருவீழிமிழலை உடைய நாயகர்; கையில் மானும் மழுவும் உடன்காண - தமது கைகளில் மானும் மழுவும் காணும்படியாக; பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசருக்கும் கனவில் எழுந்தருளி - ஆளுடைய பிள்ளையாருக்கும் அரசுகளுக்கும் கனவில் தோன்றி யருளி; அருள்செய்வார் - அருளிச் செய்வாராய், 256 1522. (இ-ள்.) "கால நிலைமை.....அளிக்கின்றோம்" என்று "பஞ்சகாலமாகிய கால வேறுபாட்டின் நிலைமையினால் உங்கள் கருத்தில் வாட்டம் அடைய |