பக்கம் எண் :


430திருத்தொண்டர் புராணம்

 

மாட்டீர்கள்; இருந்தாலும், பொருந்தும்படி உங்களை வழிபடும் அடியார்களுக்குக் கொடுப்பதறகாக உங்களுக்கு அளிக்கின்றோம்" என்று கூறி; கோலம் காண எழுந்தருளி - தமது திருக்கோல முழுமையும் அவர்கள் கண்டுகொண் டிருக்கவேயும் மறைந்து; மிழலை நாயகனார் - திருவீழிமிழலை இறைவர்; குலவும் பெருமை...படிக்காசு வைத்தார் - விளங்கும் பெருமையுடைய இரு பெருமக்களுக்குமாக உலகமறியும்படி நித்தம் படிக்காசு வைத்தருளினார்.

257

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1521.(வி-ரை.) வற்கடம் - பஞ்சம். "அக்காலத்துப் பாண்டியனாடு பன்னிருயாண்டு வற்கடஞ் சென்றது" (இறை - அகப்பொ. உரை). வற்கடமாய்ச் செல்ல - பஞ்ச காலநிலையாய் நிகழ. நைதல் - மலங்கலங்கி வருந்துதல்.

பிள்ளையார் தமக்கும் நாவுக்கரசருக்கும் படிக்காசு வைத்த முறையில் முதலில் கிழக்குப் பீடத்தில் பிள்ளையார் பெறவும், பின்னர் மேற்குப் பீடத்தில் நாயனார் பெறவும் தந்த முறைபற்றிப் பிள்ளையாரை முன்வைத்தோதினார்.

மானும் மழுவும் உடன் காண - அடியார்க்கும் கவலை வருமோ என்று கருதி, அடிபரவித் துயின்றார்களாகத், தாமாந் தன்மையறியும்படி அக்கோலங் காணக்காட்டி.

அருள் செய்வார் - என்று - எழுந்தருளிப் படிக்காசு வைத்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.

சடையார் - மிழலையுடையார் - இருவர் கனாவிலும் தனித்தனி காண எழுந்தருளியபடியால் இருதன்மையாற் கூறினார். கனாவில் இரண்டு பேருக்கும் தனித்தனி தோன்றினாலும் படிக்காசு வைத்தது தாம் ஒருவரேயாதலின் மேல்வரும் பாட்டில் காசு வைத்த செயலைக் கூறுமிடத்து "படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்" என்று ஒரு தன்மையாற் கூறினார். திருஞான - புரா - 563, 564 பாட்டுக்களிலும் இவ்வாறே காண்க.

256

1522.(வி-ரை.) கால நிலைமை - வற்கடமாய் உலகிற் பசிப்பிணி வருத்துந் தன்மை. காலதத்துவத்தின் செயலால் உலகர் அடையத்தக்க துன்பநிலை.

உங்கள் கருத்தில் வாட்டழறீர் எனினும் - அவ்வாறு நிகழும்போதும் பசிநோய் உம்மை வருத்தாது என்றாலும் என்னும் பொருளில் வந்தது. "உலகியல்பு நிகழ்ச்சியா லணைந்ததீய உறுபசிநோ யுமையடையா தெனினும்" (திருஞான - புரா - 564) என்று இதனைப் பின்னர் விளக்குவார். ஏல - உள்ளக்கருத்துக்கியைய. ஏலுதல் - பொருந்துதல்.

வழிபடுவார்க் களிக்க அளிக்கின்றோம் - உங்களை வழிபடும் அடியார்க்கு நீங்கள் அளிக்கும்படி நாம் உங்களுக்கு அளிக்கின்றோம். செல்வம் பெறுவதெல்லாம் நல்வழியால் வேண்டுமவர்க்குக் கொடுக்கும்பொருட்டே என்பது இதன் குறிப்பு. "இச்செல்வம் சிவன் றந்ததென்று கொடுக்கறியா, திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன்" என்று பட்டினத்து அடிகள் இரங்கிக் கூறினது காண்க. "ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார், கூடு மனபினிற் கும்பிட லேயன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" என்ற தன்மையராதலின், இறைவர் இவர்கள் மூலம் உலகங் காக்கவும் அடிமைத்திறத்தின் பெருமை விளங்கவும் திருவுள்ளங் கொண்டு, "நீங்கள் பசிநோய் வருத்தமறியாதீர்; ஆயினும், நாம் தரும் காசினை மாறாது கொண்டு அடியார்க் களியுங்கள்" என்று முன் கனவில் அருளிச்செய்து, பின்னர்க காசு வைத்தருளினார். அவ்வாறு கனவில் அருளிச்செய்து, பின்னர்க் காசு வைத்தருளினர். அவ்வாறு கனவில் அருள் செய்திராவிடின் இப்பெருமக்கள் காசினை நோக்கியுமிரார் என்பது துணிபு. "ஈவ தொன்றெனக் கில்லையேல் அதுவோ வுனதின்னருள்" (திருவாவடுதுறை - காந்தார பஞ்சமம் - 1) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தின் கருத்தை "நீணிதி வேண்டினார்க் கீவதொன்று மற்றிலேன்; உன்னடி யல்ல தொன்றறியேன்" (திருஞான - புரா - 424) என்று ஆசிரியர் விரித்துரைப்பதுவும் இங்குக் கருதற்பாலது. "தன்கடன்னடி யேனையுந் தாங்கு