பக்கம் எண் :


432திருத்தொண்டர் புராணம்

 

மேற் காசுகண்டார்" (திருஞான-புரா - 565) என்பது காண்க. கிழக்கும் மேற்கும என்பதனைப் பிள்ளையாருக்கும் அரசுகளுக்கும் முறையே காசுவைத்தருள என்று நிரனிறையாகக் கூட்டுக.

மேற்குப்பீடம் - சுவாமிசந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ளது. இவை இன்றும் பாராட்டி வழிபடப்பெறுகின்றன.

அண்ணல் - பெருமையுடையார். இங்குத் திருவீழிமிழலை நாதரைக் குறித்து
நின்றது.

அண்ணல் வைத்தருள - என்று கூட்டுக. இக்கருத்தையே தொடர்ந்து "அண்ணல் வைத்த படிக்காசால்" (1526) என்பது காண்க. அண்ணலாகிய புகலி யாண்டகையார் என்று கூட்டியுரைத்து, வைத்தருள என்பதற்கு மிழலை நாயகனார் என்ற எழுவாய் முன் பாட்டினின்றும் வருவித்துக் கொணடுரைப்பாருமுண்டு.

புகலி ஆண்டகையார் தமக்கும் என்று பிள்ளையாரை முன் வைத்தது கிழக்குப் பீடத்தில் காசு முன்னர்க் கொடுப்பக் கண்டு எடுத்த அம்முறைபற்றி.

நண்ணும் - கும்பிட எழுந்தருளும். நானிலம் - குறிஞ்சியாதி நால்வகைப்படும் நில முழுதும்.

எண்ணில் அடியார் - எண் - நில் - இறைவரது திருவுள்ளத்தில் இவர்களைக் காக்கவேண்டுமென்று நிற்கும் (அடியவர்கள்). முன்பாட்டில் கூறிய கருத்துக் (1522) காண்க. எண்ணிலாத - அளவிறந்த என்றலுமாம். இவர்கள் நாயன்மார்களுடனே வழிபட்டிருந்தவர்கள்.

இருவர்களும் - நாயன்மார்களாகிய இருபெருமக்களும். இருந்தார் - இருந்தாராகி என்று வினையெச்சப் பொருள்கொண்டு, சோறிட்டார் - வறுமை தொலைத்திட்டார் என்று மேல்வரும் பாட்டின் வினைமுற்றுக்களுடன் கூட்டிமுடிக்க. வினைமுற்றாக வைத்து உரைப்பாருமுண்டு. வினைமுற்றாகக் கொள்ளுமிடத்து, எண்ணில் அடியாருட னமுதுசெய்து அங்கு இருந்தவகை எவ்வாறு? என்னில் மேல்வரும் பாட்டிற் கூறுவார் என்பர்.

இருவர்களும் - என்ற எழுவாய் இந்த இரண்டு பாட்டுக்களையும் தொடர்புபடுத்துவதனால் வினைச்சொல்லின் பின்னரும் இறுதியிலும் வைத்தோதினார்.

258

1524.(வி-ரை.) இத்திருப்பாட்டு மாகேசுவரபூசைக் காலங்களில் ஆசீர்வாதத்தின் ஓதும் பெருஞ்சிறப்புடையது. இறைவன் தந்த பொருளை அடியார்க்காக்கி நல்வழிப்படுத்திப் பயனடையும்படி உபதேசிக்கும் பெருமையுடையது. பொருள் படைத்த அன்பர்கள் எல்லாம் இதனைப் பின்பற்றி ஒழுகிப் பயனடையக் கடவர்.

அல்லார் கண்டத்து அண்டர் பிரான் - அமரர்கள் விடத்தால் வீந்திடாது பெருங்கருணையினாற் காத்து அமுதூட்டியவர்; அதுபோல் அடியவர்களையும் பஞ்சத்தால் வீந்திடாது அமுது அளித்துக் காப்பவர் என்பது குறிப்பு.

படிக்காசு பல்லாறு இயன்ற வளம் பெறுக - பலவாறும் வேண்டுமாறு வளங்களாகப் பெருகும்படி படிக்காசு உதவ. பல்லாறும் என முற்றும்மை விரிக்க. வளம் - உணவுப் பொருள்களும் பிற சாதனங்களும். பெருக - படிக்காசு ஒன்றே பல வளங்களும் ஆக்கும் கருவியாகப் பெருக்கெடுக்க.

பரமன் அடியார் ஆனார்கள் எல்லாம் - அடியார்களே ஆனவர்கள்; ஏனையோர்அல்லாதார்; ஆதலின் அவர்களே அருட்காசினா லியன்ற உணவு பெறுதற்குரியார் என்பது. "உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்", "அருட்கண்ணானோக்காதார் அல்லா தாரே" முதலிய திருவாக்குக்கள் காண்க. ஆனார்கள் என்ற குறிப்பினால் நீறும் மணியும் அணிந்து அந்நாள் வந்தவர்களும் என்பது தொனி. பண்டு திருநீறு பாங்கிற்பயிலாத அதிசூரன் , அன்று தம்மை வஞ்சனையால் வெல்ல எண்ணித் திருநீறணிந்தமை கண்டும், ஏனாதிநாதர் "வெண்டிருநீற் றின்பொலிவு