பக்கம் எண் :


46திருத்தொண்டர் புராணம்

 

1302. (இ-ள்.) வெளிப்படை. நிலையில்லாத உலக இயல்பினை உணர்ந்து, "நிலையாத இந்த உலக வாழ்க்கையிற் சிக்கி உழல் யானல்லேன்" என்று முற்றத்துறந்தும், சமயங்களின் நல்ல நெறியினைத் தெரிந்து உணர்தற்கு நம்பராகிய சிவபெருமான் அருள் செய்யாமையினாலே, கொல்லாமை என்றதனுள் மறைந்து இருப்புக் கொண்டு உறையும் சமண சமயத்தைச் சார்பவராகி,

37

1303. (இ-ள்.) வெளிப்படை. பாடலிபுத்திரம் என்று சொல்லப்படும் பதியினை அணைந்து அதனுள்ளே சமணர்களது பள்ளியினிடத்துச் சென்றணைந்தனர்; அவர் பக்கத்தில் வல்லமணர்கள் கூடி, அவருக்கு "வீட்டினை அறியும் வழி இதுவேயாகும்" என்று, வெளிப்பார்வையில் மெய்போலக்காட்டித் தம்முடன் அவர்கூட வரும் உணர்ச்சி உண்டாகத்தக்கதாகப் பல குறிப்புக்களையும் அவருக்குப் புகட்டினார்கள்.

38

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1302. (வி-ரை.) நில்லாத உலகியல்பு கண்டு - மருணீக்கியாரின் வாழ்க்கைத் திறத்தினைப் பல பகுதிகளாகப் பாகுபடுத்தி அறிவிக்கின்றனர் ஆசிரியர் - (1) இருணீக்கி ஒளிவிளங்கு கதிர்போல் வந்தவதரித்தார் (1283) - இளங்குழவிப் பதங்கடந்தார் (1294) - மறுவொழித்த இளம்பிறைபோல் வளர்கின்றார் (1286) - சுற்றமொடும் பெருந்துயரிலழுந்தினார் (1294) - துயரொழிந்து கடன்கள் பெருக்கினார் (1295) - (திலகவதியாரது) அடியணை மேல்விழுந்து, மொழிந்து, இடரின் அழுந்தினார் (1298) - மனத்துய ரொழிந்தார் (1300) என்றவரையிற் காண்பது அவரது வாழ்ககையின் இளம்பிராயங் குறித்த முதற் பகுதி. - (2) நிரம்பி என்றது இரண்டாம் பகுதி. அது அவரது வயது நிரம்பி வாழ்ந்த உலகவாழ்ககைப் பருவம் குறித்தது. - (3) தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாரய் (1300) - ஈகைவினைத் துறை நின்றார் (1301) என்றது அவரது வாழ்க்கைத்திறத்தின் மூன்றாவது பகுதி. இப்பகுதியில் நிலையினின்றும் அவரது மனம் ஒரு படி மேற்செல்ல, அவர் பிற உயிர்களிடத்துக் கருணை பூண்ட உலகநிலை அறச்செயல்களைச் செய்து வாழ்ந்தனர். இதில் தேசநெறி என்னும தன்னயமே உட்கொண்ட உலக மனைவாழ்க்கை நிலையுடையதன்று என்றமட்டில் கண்டனர் என்பது, - (4) இனி, அதனின் மேம்பட்டதாய், நில்லாத உலகியல்பு கண்டு, நிலையாவாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து........அமண்சமயம் குறுகுவார் (1302) - பாடலிபுத்திரம் அணைந்தார் (1303) - அமண்சமயத்தலைமையினின் மேம்பட்டார் (1305) என்று சமய ஆராய்ச்சி நிலையிற் புகுந்ததும், சமணத்திற் புக்குத் தருமசேனரானதும், திருவதிகை யணைவதனுக்கு...போவதற்குத் துணிந்தெழுந்ததும் (1326) ஆகியது, மூன்றாவது பகுதியின்மேம்பட்டுச் சென்ற, சமய விசாரணை - ஆன் விசாரம் என்ற வகைப்படும் நான்காவது பகுதி.- (5) அதன்மேல் இறைவார் அருளிய சூலைநோயினால் சமண் ஒழிந்து திருவதிகை அடைந்து, திலகவதியம்மையார் திருநீறும் ஐந்தெழுத்தும்தந்து இறைவர் பால் வழிப்படுத்தச் சென்று, திருவீரட்டர் திருவருளால் தமிழ்மாலைகள் சாத்தும் உணர்வுபெற்று ஒழுகிச், சிவநெறியிற் சரித்து, இறுதியில் திருப்புகலூரில் "புண்ணியர் உன் அடிக்கே போதுகின்றேன்" எனப் புகன்று சிவாநந்த ஞான வடிவேயாகித் திருவடிக்கீழ் எய்திய வரையில் எல்லாவற்றுக்கும் மேலாகியது ஐந்தாம் பகுதி. இவ்வாறு நாயனாரது வாழ்க்கை படிப்படியாய் மேல் வளர்ந்து சென்று மனம் - மொழி - (செயல்) மெய் எனற் மூன்றானும் உயர்ந்த நிலைகளைக் கண்டு கொள்க.

நில்லாத......துறந்து - உலகியல்பு - மனை - செல்வம் முதலியவற்றைக் கொண்ட உலக வாழ்க்கையும், அதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு மனைக்கண்