இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1539. (வி-ரை.) அங்கு நிகழ்ந்த அச்செயல் - 1532 - முதல் 1535 வரை உள்ள திருப்பாட்டுக்களிற் கூறியபடி நிகழ்ந்த அச்செய்திகளை எல்லாம். செயல் - செயல்களின் தொகுதி. திருவாயிலின் வழக்க நிகழ்ச்சி எய்திய செயல் என்றலுமாம். அதிசயித்து அடியவர்கள், தாம் இஃது இன்னவாறாகும் என்று அறியவாராதபடி நிகழக்கண்டதாகலின் அதிசயித்து என்றார். எங்கும் ஒன்றும் நிகர் இல்லாத என்க. ஒன்று - ஒன்றானும். முற்றும்மையும் ஒப்புப்பொருளில் வந்த ஐந்தனுருபும் தொக்கன. நிகரில்லாமை - இறைவர் திருவாக்குத் தமது திருவாக்காகும் தன்மை. இருவர் பாதம் இறைஞ்சினார் - இதுவரை அடைத்திருந்த வாயிலைத் திறப்பித்து, இறைவரை நேரே காணும் பேற்றினைத் தமக்குச் செய்துதந்தமை பற்றி வணங்கினர். நங்கள் - அன்று அடியார் வணங்கியது போலவே, அதுபற்றி நாமும் இறைஞ்ச உள்ளமை குறிப்பு. புகலிப் பெருந்தகையும் அரசும் - வைப்புமுறை திருக்கோயிலினின்றும் பிள்ளையாரை முன்வைத்து நாயனார் பின் சென்ற குறிப்புணர்த்திற்று உம்மைகள் எண்ணின்கன் வந்தன. மடத்தில் - திருவீழிழலையிற்போ லன்றித் திருமறைக் காட்டி. இருவரும் ஒரு மடத்திற்றங்கி யருளினர் என்பது. நண்ணியபின் (1539) - துயில்கொண்டாராகிய வாகீசர் (1540) - துயிலும் பொழுதின்கண் - உடையவர் தாம் - அவர்க்குத் - துன்னி - வா என்றார் (1541) - என்று இந்த மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. பாய்த்திழிய - என்பது பாடம். 274 1540. (வி-ரை.) அரிதில்.....கருதி - திறத்கத் தாம் அரிதிற்பாட - என்க. அரிதில் - அருமை - மிகவேண்டி வலிந்து செயல் முடித்தல். பாட - பாடவும். திறக்கத் தாம் பாடிய அருமையும் அடைக்க அவர் பாடிய எளிமையும் கருதி என்பதாம். தாம்பாட அரிதிற் றிறக்க - தாம் பாடியபோது கதவம் அரிதாகத் திறக்கவும் என்று கூட்டியுரைப்பாருமுண்டு. எளிமை - இலகுவில் செயல் முடித்தல். பதினொரு பாட்டுக்கள் பாடியும், "இரக்கமில்லீரே" என்று இறைவரை வலிந்து கூறியும், தாம் கதவம் திறப்பித்த செயலை அரிதென்பதும், அவர் எடுத்த திருப்பாட்டில் அடைப்பித்த செயலை எளிதென்பதும் நாயனார் உட்கொண்ட கருத்து. கருதி - கருதல் அளவையாற் றுணிந்து. "நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன்" - இது நாயனார் கருதல் அளவையாற் றுணிந்த முடிபு. அயர்ந்தேன் - விரும்பினேன். அயர்தல் - விரும்புதல். "செலவயர்தும்" (புற - வெண் - 17 - வென்றி - 1). நம்பரது திருவுள்ளம் விரைவில் கதவம் திறக்கும் செயலில் இல்லை என்பதை அறியாமையின் யான் அதனை வேண்டினேன்; "வேண்டி நீயா தருள்செய்தாய் யானு மதுவே வேண்டி னல்லால், வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு முன்றன் விருப்பன்றே" (திருவா - குழைத் - 6) என்றபடி உன் திருவுள்ளம் விரும்பியதனை நான் அறியாது "சரக்கவிக் கதவந் திறப்பிம்மினே", "இரக்கமொன்றில்லீர்" என்று விரும்பி வேண்டினேன் என்பது. நம்பர் திருவுள்ளம் பற்றுவது எளிதிற்கைகூடும்; அவ்வாறு பற்றாதது அரிதின்முயற்சியளவிற் கூடும்; என் விருப்பம் அரிதிற் கூடியது; ஆதலின் திருவுள்ளம் பற்றப்பெறாதது என இவ்வாறு கருதித் துணிந் |