கைக்கு முரண்பட்டன வென்பது வெள்ளிடைமலை. இன்னும் நமிநந்தியடிகள் புராணம், தண்டியடிகள் புராணம் முதலியவற்றாலும், தேவாரத் திருவாக்குக்களாலும், முந்து நூல்களாலும், நாட்டு நடப்புச் சரித்திர வரலாறுகளாலும் அறியப்படுமாறு சைவ முதலாகிய ஏனைச்சமயங்களைப் பொறையின்றி அவர்கள் அலைத்து அழிக்க முயன்ற செய்திகள் அவர்கள் கொண்ட அகிம்சை - கொல்லாமை - என்ற அறக்கொள்கைக்கு முற்றும் மாறுபட்டவை என்பதும் மறுக்க முடியாத உண்மை மேலும், கொலையும் அறமாகும் இடங்களும் உண்டு என்பது நீதி நூல்களாலும், உலக நூல்களாலும், சைவ நூல்களாலும் வகுத்துக் காட்டப்படுவதுடன். அத்தகைய வரலாறுகள் பல இப்புராண சரிதங்களுள்ளும் காணப்படுகின்றன. அவ்வுண்மைகளையும் சமண சமயம் அறியாது. கொலையாகிய பெருந் தீச்செயலிலும் துணியும் அவர், கொல்லாமை என்ற அறத்தின்கீழ் மறைந்து அல்லவை செய்தனர் என்பது இங்குக் கருதப்பட்ட தென்க. துறவு பூண்டு சமண விசாரணை தொடர்ந்த நாயனாருக்குச் சமணத்திற் சிறப்பாய் எடுத்துக் கூறப்பட்ட கொல்லாமையே மனங்கவர் பொருளாய் அவரை ஈர்க்க, அவர் அதனைக் குறுகுவாராயினர் என்று குறிப்பாலுணர்த்துவார் இங்கு அச்சமய நிலையினை அவ்வியல்பினாற் கூறினார். குறுகுதற்குக் காரணங் குறித்தபடி. குறுகுவார் - சமண்பள்ளி மாடு அணைந்தார் என்று மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. குறுகுவார் - தமது முந்தையோரின் சைவச் சார்பாகிய விரிந்த நிலையினின்றும் குறுகிச் செல்வாராயினர் என்ற குறிப்பும்படக் குறுகுவார் என்றார். குறுகுதல் - விரிதலுக்கு எதிர்மறை. தெரிந்துணர்ந்து - மறைத்துறையும் - மறந்துறையும் - குறுகினார் - என்பனவும் பாடங்கள். 37 1303. (வி-ரை.) பாடலிபுத்திர மென்னும் பதி - இப்போது இது அழிந்து பட்டது. திருப்பாதிரிப்புலியூர் என்னும் சிவத்தலம் அதன் பக்கத்திருந்தது. பாடலம் - பாதிரி மரம். தல மரத்தினால் வந்த பெயர். முன்னாளில் அது சமண் சார்புடைய அரசரது தலைநகரமாயும் பெருநகரமாயும் இருந்தது. அதனுள் சமணர் பள்ளி - பாழி - முதலியன சிறந்திருந்தன. நாயனாரால் சைவ மேன்மை தெரிந்தபின் அரசன் குணபரன் அவற்றை முற்றும் இடித்துக் கொணர்ந்து குணபர வீச்சரக் கோயிலைக் கட்டினான் என்பது பின்னர்க் காண்க. பாடலிபுத்திரம் - ஆதி புத்தன் காலத்தின்பின் அணிமையில் வாழ்ந்த அசோக மன்னன் பாடலிபுத்திரம் என்னும் பெயர் கொண்ட தலைநகரில் ஆண்டனன். அப்பெயரால் இங்கும் சமணர் தலைநகரங் கண்டனர் என்பது சரிதம். சமண் பள்ளி மாடு அணைந்தார் - சமணர் கோயிலினைச் சேர்ந்தனர். வல்அமணர் - வலிமை - பொய்யை மேய்போற் காட்டிப் போதிக்கும் வல்லமை. "மொழி வல்லன சொல்லிய போதும்" (தக்கராகம் - பனையூர் - 10) ஆளுடைய பிள்ளையார். மருங்கு - மருணீக்கியாரது பக்கத்தில். வீடு அறியும் நெறி இதுவே - இவை சமணர் மருணீக்கியாருக்குச் சொல்லிய மொழிகளின் முடிபும் துணிபுமாம். இது - சமண சமய நெறி. மெய்போல் - போல் என்றதனால் அஃது மெய்யின் போலியேயன்றி மெய்யன்று என்பது. போலியாதல் கொல்லாமை என்ற அறத்தினை ஒருவாறு மேற்காட்டி நிற்றல். "அறவுரைகாட்டி" என்று நாயனார் பலவிடத்துங் கூறுதல் காண்க. "அத்தி நாத்தி" என்ற அவர்களது மந்திரம் அவரது கொள்கை மெய் போன்றதன்றி மெய்யன்று எனக்காட்டும். "தெளியா தொருபொருளே பொய்யு |