மெய்யு மாமென்னும் புரைநெறியார்" என்றதும், "பொய்பொரு ளாகக் கொண்டான்" (திருஞான - புரா - 689) என்று ஆசிரியர் கூறுதலும் காண்க. தங்களுடன் கூடவரும் உணர்வு கொள - அவரது முன்னை நிலையைவிட்டுத் தம்முடன் சேர்ந்து கொள்வதற்குரிய உணர்ச்சி கொள்ளும்படி. உணர்வுகொள - இற்றை நாளில் கிறித்துவ முதலிய பரசமயம் புகுவார், சோறு - செல்வம் - பெண் முதலிய பல மயக்கங்களினுட்பட்டுச் செல்லக் காண்கிறோம். மருணீக்கியார் சமணம் புகுந்தது அவ்வாறொன்றுமின்றி, அச்சமயம் மெய் என்ற உணர்வு கொண்டதனாலே ஆயிற்று என்பது. "அமணோடு இசைவித்து", "கையர் பொய்யெல்லா மெய்யென்று கருதிப்புக்கு", "சமணரொடே பலபல கால மெல்லாம் சொல்லிய சொலவு செய்தேன்", "சமணே நின்றார் சொற்கேட்டு உடனாகி" என்பனவாதி நாயனார் தேவாரங்கள் இதற்கு அகச்சான்று பகர்கின்றன. இவ்வாறு மெய்யின் போலியை மெய்யென்று மருணீக்கியார் கொண்டு சமண்புகுந்ததற்கு நம்பர் அருளாமையே காரணம் என்பது முன்னுரைக்கப்பட்டது. குறிபலவும் கொளுவினார் - போலியை மெய்யென்று கொள்ளுவதற்கேற்ற குறிப்பு. "பாறு புத்தருந் தவமுனி சமணரும் பலநாட், கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு" (பிள்ளையார் - காந்தாரம் - தேவூர் - 10) என்றது காண்க. குறி என்பது இங்குச் சமணர் புத்தர்களது சமயக் கொள்கைப் பகுதிகளுள் ஒன்று என்று கொள்ளுவாருமுண்டு. கொளுவுதல் - கொள்ளச் செய்தல். மனத்தினுட் செலுத்துதல். வீடடையும் - கூடிவரும் - என்பனவும் பாடங்கள். 38 1304. | அங்கவரு மமண்சமயத் தருங்கலைநூ லானவெலாம் பொங்குமுணர் வுறப்பயின்றே, யந்நெறியிற் புலன்சிறப்பத், துங்கமுழு வுடற்சமணர் சூழ்ந்துமகிழ் வாரவர்க்குத் தங்களின்மே லாந்தரும சேனரெனும் பெயர்கொடுத்தார். |
39 (இ-ள்.) வெளிப்படை. அங்கு மருணீக்கியாரும் சமண சமயத்தின் அருங்கலை நூல்களாயின எல்லாவற்றையும் பொங்கி எழு உணர்ச்சியினுட்படப் பயின்றவராயும் அந்நெறியின் அறிவிற் சிறந்தவராயும் விளங்கவே, வெற்றரையுடைய பருத்த உடம்புடையராகிய அச்சமணர்கள் அவரைச் சூழ்ந்து மகிழ்வாராகி, அவருக்குத் தங்களில் மேம்பட்ட தருமசேனர் என்ற பெயரினைக் கொடுத்தனர். (வி-ரை.) அமண் சமயத்து அருங்கலை நூல் - சமணர் கலைநூல் பலவற்றிலும் வல்லவர். அந்நாளில் அவர்கள் தமது சமய நூல்களையும், மற்றும் பல மந்திரம் முதலிய கலைஞான நூல்களையும் இயற்றி அவற்றால் உலகினைத் தம் வயப்படுத்தினர் என்பது ஆளுடையபிள்ளையார் சரித முதலியவற்றாலும், நாட்டு நடப்புச் சரிதங்களாலும் நன்கறியப்படும். இந்நாளில் கிறித்துவ மதத்தினர் செய்வது போலக், கலைஞான வித்தைத் திறத்தால் அவர் சமயம் பரப்பும் தந்திரமும் வல்லவராயினர் என்பதும் காணலாம். "ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்றோதி" என்பன முதலாக வரும் நம்பிகள் திருவாக்குக்களால் நாயனார் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் கழிந்த பிற்றை நாளிலும் அவர்களது வலிமைச்செயல் காணவுள்ளது. அதற்குப் பன்னூறு ஆண்டுகள் கழிந்த பிற்றைநாள் ஆசிரியர் காலத்திலும் அந்நூல்களாற் பல அரசரையும் பிறரையும் வயப்படுத்தித் தம்முள் அகப்படுத்து வீழ்ந்தனர் என்பது திருத்தொண்டர் புராண வரலாற்றானறியப்படும். ஏன்? பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்துபோன இந்நாளிலும் அவர் |