பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்51

 

(வி-ரை.) அத்துறை - சமண சமயத் துறை. மீக்கூரும் அமைதி - மேற்படும் சிறப்பு. மீக்கூர்தல் - மேற்படுதல்.

அகலிடத்தில் சித்தநிலை அறியாத தேரர் - அகலிடம் - உலக உண்மைகாணும் நிலை - தத்துவக் கூட்டமாகிய அகன்ற படிக்கிரமத்தில். சித்தநிலை - சித்தமும் சித்தப்பகுதியுமாகிய உட்கரணங்களின் கூட்டமே உயிர் என்பது புத்தர்மதம். உயிரின் உண்மைநிலையை அறியாத தேரர் என்க. அன்றியும் அவர்கள் சித்தத்துள் நிலையராகிய கடவுளின் கொள்கையுமிலாதவர். ஆதலின் இவ்வாறு கூறினார். சித்தநிலை - உறுதிநிலை என்றுரைப்பாருமுண்டு. சித்தர்நிலை சமணர்களில் மிக உயர்ந்த நிலை எனப்படுதலால் இங்குச் சித்தர்நிலை என்ற பொருளில் வந்தது என்று கூறும் ஆராய்ச்சியாளருமுண்டு.

வாதின்கண் உய்தது உணர்வு - வாதம் செய்வதனில் செலுத்திய உணர்ச்சி. தமது சமண சமயத்தின் உயர்வும், அதனை நோக்கப் புத்த சமயத்தின் தாழ்வும் உள்ளத்தில் வைத்து உணர்ந்த மன எழுச்சியினால். உய்த்துணர் வென்பது உய்த்த வுணர்வென வந்ததெனக் கொண்டு, உய்த்துணர்வினால் என்று கூறலுமாம்.

ஒளி உடைய வித்தகர் - ஒளி - அறிவொளி. வித்தகம் - புகழின் மேன்மை. வித்தகம் - ஞானம்; அந்நெறிக்குரிய ஞானங் குறித்தது என்றலுமாம். "அந்நெறியின் மிக்கார்" (1306) என்பது காண்க. தோரையும்-" அந்நெறியிற்புலன் சிறப்ப" (1304) புத்தரையும் வென்று என இறந்தது தழுவிய எச்சவும்மை.

சித்தநெறி - சித்தநிலை நெறியறியாத் - என்பனவும் பாடங்கள்

40

வேறு - (தரவு கொச்சகம்)

1306.

அந்நெறியின் மிக்கா ரவரொழுக, வான்றதவச்
செந்நெறியின் வைகுந் திலகவதியார் தாமுந்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பொழியத் தூயசிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன்றா ணண்ணுவார்.

41

1307.

பேராத பாசப் பிணிப்பொழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத வன்புபெற வாதரித்த வம்மடவார்
நீரார் கொடிலவட நீள்கரையி னீடுபெருஞ்
சீரார் திருவதிகை வீரட்டானஞ் சேர்ந்தார்

42

1306. (இ-ள்.) வெளிப்படை. அந்த நெறியில் மேம்பட்டவராய் அவர் ஒழுக, அமைந்த தவமாகிய செந்நெறியில் நிற்கும் திலகவதியம்மையாரும் பழமையாகிய சுற்றத்தின் தொடர்பும் நீங்கத், தூய்மைதரும் சிவ நன்னெறியினையே சேர்வதற்குச் சிவபெருமானது திருத்தாள்களை வழிபடுவாராகி,

41

1307. (இ-ள்.) வெளிப்படை. பெயராத பாசக்கட்டு நீங்கும்படி சிவபெருமானிடத்தே ஆசைப்பட்ட அந்த அம்மையார், நீர்மையால் நிறைந்த திருக்கெடிலத்தின் நீண்ட வடகரையில் நீடுகின்ற பெருஞ்சிறப்பு மிகுந்த திருவதிகை வீரட்டானத்தினைச் சேர்ந்தனர்.

42

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1306. (வி-ரை.) அந்நெறி - முன்சொன்ன அமண் சமய நெறி. திருவருட்குச் சேயராய் அயலுமாய்ப் புன்னெறியின் நின்ற அவர் திறங் குறிப்பதற்கும், அங்கு நின்றும் நமது கருத்தை இங்கு அம்மையாரது சரிதநிகழ்ச்சியில் திருப்புவதற்கும் இவ்வாறு சேய்மைச் சுட்டினாற் கூறினார்.